ஆயத்தம் Preparation நவம்பர் 11, 1953 ஓவன்ஸ்பரோ, கென்டக்கி, அமெரிக்கா 1. கர்த்தர் என்ன செய்யப்போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. வழக்கமாக நான் உபவாசத்தோடு வந்து, ஆவியானவரின் அபிஷேகத்தை நான் உணரும் வரை காத்திருக்கிறேன். அந்த நேரம் வரை என்னிடம் வந்து என்னை அழைத்துச் செல்ல யாரையும் நான் அனுமதிப்பது கூட இல்லை. அவர்கள் கதவைத் தட்டுவார்களானால், நான் வெளியே வருவது கூட இல்லை. பிறகு நான் நேராக மேடைக்கு வருகிறேன், அப்போது உடனடியாக நான் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கத் தொடங்கு கிறேன்; ஏனெனில் நீங்கள் அந்த ஊக்குவித்தலின் கீழ் இருந்து கொண்டு, இங்கே வார்த்தையை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு வித்தியாசமான அபிஷேகம் உள்ளது. இப்பொழுது, நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளும்படிக்கு நான் ஒரு முறை கூட அதை விளக்கட்டும். வரங்களும் அழைப்புகளும் மனந் திரும்புதல் இன்றியே கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கு அது தெரியுமா? நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களை நீங்களே ஆக்கிக்கொள்ள ஒரு போதும் முடியாது. பாருங்கள்? நீங்கள் இந்த உலகத்தில், வெவ்வேறு காரியங்களைச்செய்யும்படி தேவனால் இராஜாதிபத்தியமாக பிறக்கிறீர்கள். ஒரு பிரசங்கியாக இருக்க விரும்பும் ஒரு மனிதனை நீங்கள் கொண்டு வந்து அவனை கல்வி கற்கும்படி கொண்டு போகிறீர்கள். அவன் ஒரு போதும் ஒரு பிரசங்கியாக ஆவதேயில்லை. அவன் ஒரு பேச்சாளனாக (lecturer) ஆகலாம், ஆனால் பிரசங்கிமார்கள் பிறக்கிறார்கள். தேவன் பிரசங்கிமார்களை அழைக்கிறார். அது சரியே. பாருங்கள்? நீங்கள் ஒரு பாடகராக இருக்க முயற்சிக்கலாம். நீங்கள் தினமும் நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் இசைக்குரலில் கீச்சொலி எழுப்பி பாடப் பயிற்சி எடுக்கலாம், அல்லது அங்குள்ள அதைப்போன்ற ஏதோவொன்று. அது உங்களை ஒரு போதும் ஒரு பாடகராக ஆக்கி விடாது. பாடகர்கள் பிறக்கிறார்கள். அது சரியே. 2. நல்லது இப்பொழுது, வரங்களிலும் அழைப்புகளிலும்... இப்பொழுது இதைப்போன்று... இங்கேயுள்ள எத்தனை பேர் எப்பொழுதாவது ஒரு சொப்பனத்தை கண்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களைப் பார்ப்போம். நல்லது, உங்களில் அனேகர். உங்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் ஒரு போதும் சொப்பனம் கண்டதேயில்லை, அது சரியே. சொப்பனங்களைக் காணாத சில ஜனங்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் தங்களுடைய ஜீவியத்தில் ஒரு சொப்பனமும் கண்டதில்லை. ஆனால் அதை சரி செய்ய அவர்களால் இயலாது. ஏனென்றால் அவர்கள் சொப்பனம் காண்பதில்லை. அவர்கள் அப்படியே ஒரு சொப்பனமும் காண்பதில்லை. இப்பொழுது, ஒரு சொப்பனம் என்பது என்ன? இப்பொழுது கூர்ந்து கவனிப்போம். அது உங்களுடைய உள்மனம் (subconscious) ஆகும். இங்கே நீங்கள் இருக்கிறீர்கள், இங்கே நீங்கள் உங்களுடைய முதல் உணர்வு நிலையிலும் (first conscious) இங்கே உங்களுடைய இரண்டாவது உணர்வு நிலையிலும் (second conscious) இருக்கிறீர்கள். இப்பொழுது, இந்த உணர்வு நிலை செயலற்றிருந்தால், இந்தவொன்று செயல்படும் நிலையை உடையதாகிறது. நீங்கள் இங்கே பூமிக்குரிய உணர்வு நிலையில் (earthly conscious) இருந்த போது செய்த காரியங்களைக் குறித்து நீங்கள் கனவு காண்கிறீர்கள், இந்த உணர்வு நிலை. பிறகு நீங்கள் இந்த உணர்வு நிலையில் தூக்கத்தை விட்டு எழும்பும் போது, இந்த ஒன்று செயலற்றிருக்கும் (inactive) மேலும் நீங்கள் சொப்பனம் காண்கிறீர்கள்... பல வருடங்களுக்கு முன்னால் நீங்கள் சொப்பனம் கண்ட காரியங்களையும் உங்களால் நினைவுகூர (முடிகிறது). அது சரியா? நல்லது இப்பொழுது, உங்களில் உள்ள ஏதோவொரு பாகம் எங்கோ உள்ளது, ஏனெனில் நீங்கள் இந்த உணர்வு நிலையில் இருந்த போது நீங்கள் கண்டிருந்ததை நீங்கள் நினைவுபடுத்த இந்த உணர்வு நிலையை அதிகமாகத் தூண்டுகிறது. நீங்கள் புரிந்து கொண்டால், ‘ஆமென்’ என்று கூறுங்கள். நீங்கள் புரிந்து கொண்டீர்கள். பாருங்கள்? 3.இப்பொழுது நான் உங்களிடம், ‘எனக்காக ஒரு சொப்பனம் காணுங்கள்’ என்று கூறினால் என்னவாக இருக்கும். உங்களால் ஒரு சொப்பனம் காண முடியும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், ஏன், எனக்காக ஒரு சொப்பனம் காணுங்கள். ஏன்? நீங்கள் சொப்பனம் காண்பவர்களாய் இருந்தாலும் உங்களால் அதைச் செய்ய முடியாது. இப்பொழுது, தேவன் அந்த உள்ளுணர்வில் இடைபடுகிறார். கடைசி நாட்களில் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள் என்றும், ஆனால் வாலிபரோ தரிசனங்களைக் காண்பார்கள் என்றும் அவர் அநேக தடவை வாக்களித்துள்ளார். இப்பொழுது, ஒரு சொப்பனம் என்பது ஒரு தரிசனத்தைப் போன்ற ஏதோவொன்று தான், ஒரே காரியம் என்னவெனில் நீங்கள் - நீங்கள் தூக்கத்தில் இருக்கிறீர்கள். ஒரு தரிசனமானது முற்றிலும் அவ்வாறானதல்ல. 4. ஆனால் இப்பொழுது, இந்த மனிதன் ஒரு சொப்பனம் காண்கிறவன் என்ற காரணத்தால் அவனால் உதவி செய்ய முடியாது. இப்பொழுது, இங்கேயிருக்கும் உங்களில் சிலர் உங்கள் கரத்தை உயர்த்தவில்லை, ஒரு வேளை நீங்கள் சொப்பனங்களை ஒரு போதும் கண்டிருக்கவில்லை. நல்லது. இப்பொழுது, அம்மனிதன், அவனுடைய உள்ளுணர்வானது (subconscious) அவனிடமிருந்து அப்பாலுள்ளது, அங்கே அந்த சுவர் உள்ளது போல் பின்னாலுள்ளது. அவன் அதற்கு ஒரு போதும் திரும்பி வருவதில்லை. அவன் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான். சொப்பனம் காண்கிற ஒரு மனிதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க மாட்டான். அவன் சொப்பனம் காண்கிற போது, விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடையில் உள்ள நிலையில் இருக்கிறான். இப்பொழுது, அங்கே ஒரு அர்த்தம் உரைப்பவர் (interpreter) இருப்பாரானால், சொப்பனங்களுக்கு ஒரு சரியான அர்த்தம்... தேவன் யோசேப்புடன் சொப்பனங்களின் மூலம் இடைப்பட்டார், அவர் நேபுகாத்நேச்சார் இராஜாவுடன் சொப்பனங்களில் இடைப்பட்டார், ஆனால் அது மிகவும் சரியானதாக இல்லை. ஆனால் இப்பொழுது, இந்த மனுஷன் சொப்பனங்களை காண்கிற காரணத்தால் அவனால் உதவி செய்ய முடியாது. இந்த மனிதன் சொப்பனம் காண்கிறதில்லை என்ற காரணத்தால் அவனால் உதவி செய்ய முடியாது. இப்பொழுது, ஒரு ஞானதிருஷ்டிக்காரன், தரிசனம் காண்கிற ஒரு ஞான திருஷ்டிக்காரன் அல்லது ஒரு தீர்க்கதரிசி, நீங்கள் அதை எவ்வாறு அழைக்க விரும்பினாலும்... ஒரு தீர்க்கதரிசி என்பது ஒரு கூட்டு வார்த்தையாகும் (compound word). பரிசுத்தமாகுதல் ஒரு கூட்டு வார்த்தையாக இருப்பது போலவே. பரிசுத்தமாகுதல் (sanctification) என்பதற்கு, ‘சுத்தப்படுத்தி ஊழியத்திற்கு என்று ஒதுக்கி வைத்தல்’ என்று பொருள்படும். அங்கே அனேக வார்த்தைகள் உள்ளன. பிரத்தியேகமாக நம்முடைய ஆங்கில வார்த்தைகளில் கூட்டு வார்த்தைகள் உள்ளன. ஆனால் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு ஊக்குவித்தலின் கீழ் ஒரு தனிப்பட்ட அனுபவம் உள்ளவன் என்றோ அல்லது ஏதோவொன்றை முன்கூட்டியே காண்பவன் (foresee) என்றோ அர்த்தம். 5. ஆனால் இப்பொழுது, இந்த ஞானதிருஷ்டிக்காரனுக்கு அவனுடைய உள்ளுர்ணவு (அவனைவிட்டு) அப்பால் இருப்பதில்லை, இங்கேயும் அது இருப்பதில்லை. அது சரியாக இங்கேயே உள்ளது. அவைகள் இரண்டும் சரியாக ஒன்றாகவே உள்ளன. அவனால் அதிலிருந்து விலகியிருக்க முடியாது. இப்பொழுது, உங்களது உள்ளுணர்வானது அப்பால் இருக்கு மானால், நீங்கள் ஒரு தரிசனம் காண முயற்சித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று காரணமில்லை. நீங்கள் அதைப் போன்று உண்டாக்கப்பட்டிருக்கவில்லை. உங்களுடைய உள்ளுணர்வானது இங்கே ஒரு சொப்பனத்தில் இருக்குமானால், நீங்கள் ஒரு சொப்பனக்காரனாக இருந்தால், அது தரிசனமல்ல. தரிசனங்களைக் காண்கிற இந்த மனிதனால் அதிலிருந்து விலகியிருக்க முடியாது, அவன் அப்படியே அவ்வாறு தான் உண்டாக்கப்பட்டிருக்கிறான். தேவன் இம்மனிதனை சொப்பனம் காணாதிருக்கும்படியும், இந்த ஒரு மனிதனை சொப்பனம் காணும்படியாகவும், இந்த மனிதனை தரிசனங்களை காணும்படியாகவும் உண்டாக்கியிருக்கிறார். (சகோ.பிரான்ஹாம் மூன்று வகை மனிதர்களைப் பற்றி இங்கு கூறுகிறார் – தமிழாக்கியோன்.) இப்பொழுது, ஒரு ஞானதிருஷ்டிக்காரன் தூங்கும்படி செல்வதற்குப் பதிலாக, அவனுடைய ஒரு உணர்வு நிலை... சொப்பனம் காண்கிறது போல அவன் உறங்க செல்வதில்லை. ஆனால் அவன் அப்படியே ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு உடைத்துக்கொண்டு செல்வது வரை அது அப்படியே அவனிடம் மிக நெருங்கி வருகிறது. அவன் ஒரு சொப்பனம் காண்பது போல அப்படியே காரியங்களைக் காண்கிறான். 6. மேடையின் மேல் தூங்கி, சொப்பனம் கண்டு விட்டு, பின் எழுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நீங்கள் தூங்கி, இந்த மனிதனைக் குறித்து சொப்பனத்தில் கண்டு, அவனைப் பார்த்து, நூறு வருடங்களுக்கு முன்னால் அல்லது இருபது வருடங்களுக்கு முன்னால் அல்லது பத்து வருடங்களுக்கு முன்னால் அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு முன்னால் (நடந்த காரியங்களை சொப்பனத்தின் மூலம்) காண முடியுமா என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? பிறகு மேடையில் தூக்கத்தை விட்டு விழித்து... நீங்கள் இங்கே அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, இங்கே மேடையில் ஒரு கூட்ட ஜனங்களுக்கு முன்னால் உங்களுடைய சத்தம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிகிறீர்கள்... நீங்கள் இங்கே நின்று கொண்டு யாரோ ஒருவரைக் குறித்து ஒரு தரிசனத்தைக் காண்கிறீர்கள், நீங்கள் அவர்களை இங்கே கென்டக்கி மலைகளின் மேல் அதோ அங்கே இருபது வருடங்களுக்கு முன்னர் இருப்பதை காண்கிறீர்கள். தவறாக இருந்த ஏதோவொன்றை அது கொண்டு வருகிறது. நீங்கள் சரியாக அங்கேயே நின்று கொண்டு (தரிசனத்தில் – தமிழாக்கியோன்.) அவர்கள் அதைச் செய்வதையும், அதைப் போன்று பேசிக் கொண்டிருப்பதையும், உங்களுடைய சத்தம் அங்கே இருப்பதையும் அறிந்து கொண்டு கவனிக்கிறீர்கள்; இந்த கணத்திலும் நீங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் கெண்டக்கி மலைகளின் மேல் இங்கே இருக்கிறீர்கள். ஒரு முறை அது உங்களுக்கு சம்பவிக்க அனுமதியுங்கள், அது எப்படி என்று, நீங்கள் அதிலிருந்து வெளி வரும்போது, இவ்விதமாக நீங்கள் அப்பொழுது எங்கிருந்தீர்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியும். நீங்கள் அப்படியே - நீங்கள் சற்று இப்படியும் அப்படியுமாக இருக்கி றீர்கள். அதன் பிறகு அது மறுபடியும் சம்பவிக்க விடுங்கள், நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், நீங்கள் அங்கே மேலே கென்டக்கியில் இருந்தீர்களா அல்லது இங்கே கீழே இருந்தீர்களா அல்லது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று உங்களால் கூற இயலாது. ஆனால் இன்னும், அங்கே மனித இருதயத்தில் இருக்கும் ஏதோ ஒன்று தேவனுடைய அன்பை மக்களுக்காக வெளியே இழுக்கிறது. முயற்சி செய்கிற அதைக்குறித்த எல்லாம்... அது ஒரு வரம். அதெல்லாவற்றைக் கொண்டும் நான் முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும் இயேசு கிறிஸ்துவை மிகைப்படுத்தி (magnify) காட்ட வேண்டியவனாயிருக்கிறேன்... நான் எப்பொழுதாவது வேதப் பிரகாரமல்லாத எதையாவது சொல்லவோ அல்லது செய்யவோ செய்யும் ஏதோவொன்றை எந்நேரமாவது செய்தால், நீங்கள் என்னிடம் வந்து அதைக் குறித்து (கூறுவது) உங்கள் கடமையாகும். அது சரியே. ஏனெனில் முதலாவது அது இங்கே சரியாக இருக்க வேண்டியுள்ளது. இது தேவனுடைய வார்த்தையாகும். நாங்கள் செய்யும் ஒவ்வொன்றும் சரியாக இங்கே தேவனுடைய வார்த்தையில் காணப்படவில்லை எனில்... இப்பொழுது, அது உங்களுடைய வேத சாஸ்திரத்தின்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தேவனுடைய வார்த்தையில் இருந்து, தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தால், அது முழுவதும் சரியாக இருக்கிறது. ஆனால் அது கட்டாயம் தேவனுடைய வார்த்தையில் காணப்பட வேண்டும், ஏனெனில் அதுதான் தவறாத சத்தியமாயுள்ளது. பவுல், ‘வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்’ என்றான்...?... எனவே இது தான் சத்தியமென்று நாமறிவோம்... 7. மேலும் அதில், பிறகு இந்த இரவுகளில் அப்படியே நான் பேசுவற்காக கீழே வந்து, ஏன், நான் சற்று... ஓ, நான் அப்படியே... எனக்குத் தெரியாது, நான் இங்கு எழுந்து நின்று கொஞ்சம் உரக்கக் கத்துகிறேன், நான் அதிக உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறேன் என ஊகிக்கிறேன். கானானிலிருந்து நான் அதிகமான புதிய திராட்சப் பழங்களை புசித்து கொண்டிருக்கிறேன். அது என்னை அதிக உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறவனாக ஆக்குகிறது, உங்களுக்குத் தெரியும், ஒருவித... ஆனால் அதைக் குறித்து நன்மையாக உணருகிறேன். 8. நான் நினைவுகூருகிறேன், நான் – நான் முதலில் பாப்டிஸ்ட் சபையில் நியமிக்கப்பட்ட போது, பிஷப்... அல்லது மிகச்சரியாக அல்ல, ஒரு பாப்டிஸ்ட்டுக்கு ஒரு பிஷப் கிடையாது, அது தான் வேதாகம உபதேசமாகும். அவன் ஒரு பிஷப்பாக இருக்கிறான். ஆனால் பாப்டிஸ்டுகளாகிய நாங்கள் அதை மாநில கண்காணிப்பாளர் என்றோ அல்லது பொது காண்காணிப்பாளர் என்றோ அல்லது ஏதோவொன்றாக அழைக்கிறோம் (பாருங்கள்?), ஒரு பிஷப் என்று அழைக்கவில்லை. அதன் வரிசையிலிருந்து அவர்கள் துரம் சென்று விடுகின்றனர். ஆனால் நான்... நான் எப்பொழுதும் அதை வேதாகம ரீதியாக பிஷப் என்றே குறிப்பிடு கிறேன். அவன் அவ்வாறு தான் இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு காண்காணிப்பாளன் (overseer) என்பவன் ஒரு பிஷப்பாக (bishop) இருக்கிறான். மேலும் ஒரு... 9. ஆனால் நான் நினைவு கூருகிறேன். நான் முதலில் நியமிக்கப்பட்டபோது, வேதாகமத்தை என் கக்கத்தில் வைத்திருக்கவே விரும்பினேன். ஒரு ஊழியக்காரனைப்போன்று என் காகிதங்களை (papers) வைத்துக் கொண்டு, உங்களுக்குத் தெரியும், நான் தெருவில் சென்றேன். யாரோ ஒருவர், ‘நீங்கள் ஒரு போதகரா?’ என்று கேட்பார். நான், ‘ஆம் ஐயா. ஓ ஆம், நான் ஒரு போதகர் தான்’ என்று கூறிவேன். நான் உண்மையாகவே அதை நன்கு விரும்பினேன். எனவே நான் ஒரு போதகராக இருக்க விரும்பினேன், ஏனெனில் நான் நின்று கொண்டு கொஞ்சம் பேச முடிந்தது. அது அப்படியே அருமையானது என்று நான் எண்ணினேன், எனவே... 10. அந்த சமயத்தை நான் நினைவுகூருகிறேன், நான் பாப்பைக் (Pop) குறித்து உங்களிடம் கூறினபடி, எங்களுடைய வயதான குதிரை... நான் அதை இழுத்து, சேணத்தின் கீழே ஒரு வகை மரப்பகுதியை (cockleburs) வைக்க விரும்பினபோது, இங்கே அரிசோனாவில் நான் உண்மையாகவே ஒரு நாள் ஒரு மாட்டுக்காரன் குதிரை மேல் சவாரி செய்வதை காண்பது வரை, நான் ஒரு மாட்டுக்காரன் (cowboy) என்று எண்ணினேன். அதன் பிறகு நான் ஒரு குதிரை சவாரி செய்பவன் அல்ல என்று உணர்ந்து கொண்டேன். எனவே நான் ஒரு போதகனல்ல என்று உணர்ந்து கொண்டபோது; அந்த ஆள் இப்போது இங்கே இருக்கிறார். செயின்ட் லூயிஸில் நடந்த ஒரு கூடார கூட்டத்தில் அவர் இருந்தார். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு ஊழியக்காரரான ராபர்ட் டாகெர்ட்டி தம்முடைய முகம் மிகவும் சிவந்து போவது வரையும், தம்முடைய மூச்சை பிடித்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பிரசங்கித்தார். அவருடைய முழங்கால்கள் இரண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும். அவர் திரும்ப மேலே வரும் போது இன்னும் அவர் பிரசங்கித்துக் கொண்டிருப்பார். யாரோ ஒருவர், ‘நீங்கள் ஒரு போதகரா?’ என்றார். நானோ, ‘இல்லை, ஐயா’ என்றேன். என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் நிச்சயமாக இருந்தேன். எனவே நான் இன்னும் ஒரு போதகனாக இருப் பதைக் குறித்து வெளியே சொல்லாதிருக்கிறேன். ஆனால் கர்த்தரைக் குறித்தும் அவர் எவ்வளவு நல்லவர் என்பதை குறித்தும் நான் அறிந்து உள்ளதை கூறுவதை நான் விரும்புகிறேன். 11. இப்பொழுது அவருடைய வார்த்தையை வாசித்து ஜெபம் செய்து அதின் உத்தம பாகத்திற்கு நம்மைத் தாழ்த்துவோம். இப்பொழுது நாம் அதை செய்வதற்கு சற்று முன்பாக நம்முடைய கண்களை மூடி நம்முடைய தலைகளை வணங்குவோம். இப்பொழுது, எங்கள் பரலோகப் பிதாவே, இன்றிரவு நீர் இங்கே அனுப்பி இருக்கும் இந்த அருமையான ஜனக்கூட்டத்திற்காக நாங்கள் உமக்கு நன்று கூறுகிறோம். அவர்களில் அனேகர் வியாதியஸ்தராயுள்ளனர். சிலர் அவிசுவாசிகளாகவோ, சிலர் இன்னும் பாவத்தில் இருப்பவர்களாகவும் இருக்கலாம். எங்களுக்கு அவர்களைத் தெரியாது. நீர் அவர்கள் எல்லாரையும் அறிவீர். கர்த்தாவே, நான் இன்றிரவு ஒரு ஜீவிக்கிற பலியாக உம்மிடம் என்னையே சமர்ப்பிக்க வருகிறேன். நீர் உம்முடைய ஊழியக்காரனை வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கும், வேதாகமத்தின் வார்த்தைகளைப் பேசுவதற்கும் அல்லது உமக்கு என்ன அவசியமோ அதற்கும் இதை உபயோகிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இன்றிரவு அதை அருளும். பரிசுத்த ஆவியானவர் இதை செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, உம்முடைய தெய்வீக சித்தத்தை மாத்திரம் நான் பேசும்படிக்கு அவர் தாமே என்னுடைய உதடுகளை விருத்தசேதனம் செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நான் வித்தியாசமான எதையாவது கூற முயற்சித்தால், நீர் தானியேலின் (காரியத்தில்) சிங்கங்களின் வாய்களுக்கு செய்தது போல என் வாயை அடைத்தருளும். வார்த்தையை கேட்டு அதை ஏற்றுக்கொள்ள இங்கிருக்கும் ஒவ்வொரு காதையும் இருதயத்தையும் நீர் விருத்தசேதனம் பண்ண வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஆராதனை முடியும் போது, வியாதியஸ்தர் சுகமடைவார்களாக, பாவிகள் இரட்சிக்கப்படுவார்களாக, பின்மாற்றம் அடைந்தவர்கள் மீண்டும் திரும்புவார்களாக; தேவனுடைய மகிமை ஒவ்வொரு நபரின் மீதும் இருந்து, இன்றிரவு இங்கிருந்து நாங்கள் போகும் போது கர்த்தருடைய பிரசன்னம் எங்கள் மீது இருக்கும் காரணத்தால், நாங்கள் எங்கள் கார்களுக்குச் சென்று சுற்றிலுமுள்ள வெவ்வேறு இடங்களுக்கு களிகூர்ந்து கொண்டும் சந்தோஷமாகவும் அழுது கொண்டும் செல்வோமாக. இதை அளியும், கர்த்தாவே. எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். அநேகம் அநேகமாக நாங்கள் செய்தும் அறிந்துமுள்ள எங்களுடைய சகல பாவங்களை எங்களுக்கு மன்னியும். இன்றிரவு இக்கட்டிடத்தில் உமது தேவை எதுவாயினும் எங்களை மன்னித்து இப்போது எங்களை பயன்படுத்துமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதை கேட்கிறேன். ஆமென். 12. இப்போதும் தேவனுடைய வார்த்தையை எந்த மனிதனும் திறக்க முடியாது. நான் அதின் பக்கங்களை புரட்டி, அவைகளிலிருந்து வாசிக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தையை திறப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் தேவை. யோவான் அவரை ஒரு சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருக்கக் கண்டான். எந்த மனிதனும் அப்புத்தகத்தை எடுக்கவோ அல்லது பார்க்கவோ முடியவில்லை. ஆட்டுக்குட்டியானவர் வந்து அவருடைய கரத்திலிருந்து அப்புஸ்தகத்தை வாங்கி, சிங்காசனத்தின் மேல் அமர்ந்து அப்புஸ்தகத்தைத் திறந்து முத்திரைகளை அவிழ்த்தார். எனவே இன்றிரவுக்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் அவருக்காகத்தான். சில நிமிடங்கள் பேசப்போகிற போது, வெளியில் கொடுத்துக் கொண்டு இருக்கையில், இங்கேகூட அமர்ந்திருக்கும் இந்த நோயுற்ற ஜனங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒருக்கால் ஒத்தாசையாக இருக்கும் ஏதோவொன்றைக் குறித்து நான் எண்ணிப் பார்த்தேன். முதலாவதாக இந்த வார்த்தையை - தேவனுடைய வார்த்தையை உங்களிடம் கொண்டு வருவதைக் காட்டிலும் என்ன அதிகமாக செய்வது என்று கடினமாக எனக்குத் தெரியவில்லை. அந்த வார்த்தையை கொண்டு வந்த பிற்பாடு, பின்பு தேவனுடைய ஆவியானவர் இறங்கி வந்து அந்த வார்த்தையை உறுதிப்படுத்துகிறார்: அற்புத அடையாளங்கள் இன்னும் மற்றவைகளோடு இயற்கைக்கு மேம்பட்ட ஆவியானவரால் மிகச்சரியான வழியில், சகலத்தையும் ஜனங்களுக்குச் சொல்லுகிறோம். இப்பொழுது, தேவன் போதுமான நல்லவராக இருப்பாரானால்... அது நானாக இருந்து, ஜனங்கள் என்னுடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லை என்றால் அது சரியாகத்தான் இருக்கும். அவர்கள் தங்களுடைய தெரிந்து கொள்ளுதலை செய்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய பரம தகப்பன் அப்படியல்ல. அவர் மிகவும் இரக்கம் உள்ளவராக இருக்கிறார், அவருடைய வார்த்தையை அவர்கள் விசுவாசிக்கவில்லை என்றால், அவர் சபையில் வெவ்வேறான ஒழுங்குகள் மற்றும் அதைப்போன்ற காரியங்களை ஏற்படுத்துவார். அவர் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒவ்வொரு ஆத்துமாவையும் வலையினால் பிடிக்கும்படியாக அவரால் முடிந்த யாவற்றையும் செய்கிறார். அது சரியாக இருக்கவில்லையா? நாம் எவ்வளவாக அவரை நேசிக்க வேண்டும். நாம் அவருடைய மகத்தான வல்லமையில் எவ்வளவாக அவரைப் பாராட்ட வேண்டும். 13. இப்பொழுது, நான் இரண்டு இடங்களிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். அவைகளில் ஒன்று யாத்திராகமம் 4-லிருந்தும் மற்றொன்று அப். 2-ல் இருந்தும். யாத்திராகமம் 4-ல் நாம் இதை வாசிக்கிறோம். அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். 14. இப்பொழுது அப். 2:8-ல் நாம் வாசிக்கிறோம். உங்கள் மன்னிப்பை கோருகிறேன், அப். 1:8-ல் நாம் இதை வாசிக்கிறோம்: பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக் கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்த வர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்திருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தைக்கு அவருடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவராக. நான் ஒரு பாடம் என்று சொல்வேனானால், நான் இன்றிரவு உங்களிடம் பேச விரும்புவது... 15. மேலும் இப்பொழுது, நோயாளிகளைத் தூக்கிச் செல்லும் படுக்கையில் இருக்கின்ற தாயாரே, மேலும் அன்பும் பிரியமும் உள்ள இங்கிருக்கும் இந்த நபராகிய தாயாரே, மேலும் இங்கே, இப்பொழுது இக்கட்டிடத்தினுள் சுற்றிலும் இருக்கிற எல்லாரும், நான் – இன்றிரவு நான் என்ன செய்ய வேண்டுமானால், தேவனு டைய ஒத்தாசையில் அவர் என்னை அனுமதிப்பாரானால், அவருடைய வார்த்தையை நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். அது உங்கள் இருதயத்தை இந்த சுகமளிக்கும் ஆராதனைக்கு ஆயத்தமாக்கும். இப்பொழுது, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, ‘ஆயத்தம்...’ தேவன் தாம் எதையும் செய்வதற்கு முன்பாக, அவர் எப்பொழுதுமே அதற்காக ஆயத்தம் செய்கிறார். நாம் எவ்விதமாக... வேதத்தில் உரைக்கப்பட்டுள்ளபடி, நாம்... நாம் ஒரு யுத்தம் பண்ண போகும் முன்னால், முதலாவது அந்த யுத்தத்திற்காக நாம் ஆயத்தமாக வேண்டும். நீங்கள் விவாகம் செய்யப் போவீர்களானால், ஏன், நீங்கள் அந்த நேரத்திற்காக ஆயத்தம் செய்கிறீர்கள். நீங்கள் ஆயத்தங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் சபைக்கு வரும் முன்பதாக, நீங்கள் ஆயத்தங் களைச் செய்கிறீர்கள். உங்களை அழைத்து வர ஆம்புலன்ஸ் வாகனத்தையோ அல்லது உங்களை அழைத்து வர உங்கள் அன்பார்ந்தவர்களையோ, ஆயத்தம் செய்கிறீர்கள், அல்லது நீங்கள் வருவதற்கு முன்பதாக நீங்கள் குறிப்பிட்ட அளவு பணத்தை ஆயத்தம் செய்ய வேண்டியுள்ளது; அது தான் ஆயத்தங்கள் என்பது. தேவன் சீக்கிரமாகச் சம்பவிக்கும்போகும் நிகழ்வுகளுக்காக ஜனங்களை எப்பொழுதுமே ஆயத்தம் செய்கிறார். 16. நான் சரியாக இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு இதை கூறட்டும்: இவ்வுலகம் எப்பொழுதும் அறிந்ததிலேயே கடைசி பெரிய அழிவுக்கான ஆயத்தத்தில் ஜனங்கள் உள்ளனர் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் கடைசி (காலத்தில்) இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். நீங்கள் ஜனங்களிடம் பேசலாம். நீங்கள் ஒரு, பில்லிகிரகாமை ஐக்கிய நாடுகளில் உள்ள ஒவ்வொரு பட்டணங்களிலும் வைக்கலாம். (அப்படியிருந்தும்) அவர்கள் விஸ்கியை குடித்து விட்டு, சிகெரட்டுகளை புகைத்துக் கொண்டும், உங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டும், மற்ற யாவற்றையும் அப்படியே அதே விதமாக செய்கிறார்கள். அவர்கள் கடைசி நாட்களின் ஆவியில் இருக்கிறார்கள். ஜனங்களுக்கு முன்பாக தேவன் அழிவை அனுப்பமுடியாது, ஜனங்கள் தான் அழிவுக்கான ஆவியில் இருக்கிறார்கள். தேவன் ஒரு போதும் - ஒரு போதும் எதையும் அழிக்கவில்லை. மனிதன் எப்பொழுதும் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். 17. ஏதேன் தோட்டத்தில் இரண்டு மரங்கள் இருந்தன: ஒன்று ஜீவ விருட்சம், ஒன்று அறிவின் விருட்சம். மனிதன் அறிவின் விருட்சத்தை புசிக்கும்படிக்கு ஜீவ விருட்சத்தை விட்டு விலகிக்போனான். அவன் அதை முதலாவது கடித்த போது, அவன் தேவனிடமிருந்து தன்னைத்தானே பிரித்துக் கொண்டான். அந்த அறிவின் விருட்சத்தை ஒவ்வொரு தடவையும் ஒரு மனிதன் புசிக்கும் போதும் (bites off) அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். அவன் துப்பாக்கி வெடிமருந்தை கடித்து (bit off) புசித்து, தன்னுடைய நண்பனைக் கொல்லுகிறான். அவன் அறிவின் விருட்சமாகிய மோட்டார் வாகனங்களைப் புசித்து, எல்லா யுத்தங்களைக் காட்டிலும் அதிக ஜனங்களைக் கொல்லுகிறான். அவன், இப்பொழுது ஹைட்ரஜன் குண்டை தானே புசிக்கிறான். அவன் அதனுடன் செய்ய போவது என்ன? ஒவ்வொன்றையும் – அவன் அறிவால் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். அறிவு எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே வந்து இச்சமயத்தில் பின்னோக்கிச் செல்கிறது. ஆனால் இந்த ஜீவ விருட்சமோ முடிவில்லாததாய் நேராக மகிமைக்குள் செல்கிறது. 18. எனவே... உங்களுடைய அறிவைச் சார்ந்திருக்க வேண்டாம், தேவன் கூறின எதையும் ஒரு போதும் மூளையறிவினால் யூகிக்க முயற்சிக்க வேண்டாம். நீங்கள் அதை மூளையறிவினால் யூகிக்க முயற்சித்தாலோ (figure-out) அல்லது நான் அதை மூளையறிவினால் யூகிக்க முயற்சித்தாலோ, அல்லது வேறு யாராவது போதகர் அதை யூகிக்க முயற்சித்தாலே நாம் தேவனுக்கு சமமாக ஆகிறோம். நாம் அவ்வாறு இல்லை, நாம் ஒரு போதும் அதை யூகிக்கக் கூடாது. ஏனெனில் நாம் அவ்வாறு செய்யும் போது, அதற்கு மேலும் அது விசுவாசமாக இருக்காது. நாம் அதை விசுவாசத்தின் மூலம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அது சரியா? தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அது எப்படியென்று எனக்குத் தெரியாது. அவர் எவ்வாறு அதைச் செய்யப்போகிறார் என்று என்னால் உங்களிடம் கூற முடியாது, ஆனால் அவர் அதைச் செய்யப்போகிறார், ஏனெனில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அதுவே அஸ்திவாரம். தேவன் அதைச் செய்யப் போகிறார், ஏனெனில் அவர் அதை செய்வதாக வாக்களித்துள்ளார். அவர் தேவனாக இருக்கிறார். அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை உடைத்துப் போட முடியாது, அது எப்படி. தேவனுடைய சில ஆயத்தங்கள் அறிவின் விருட்சத்தின் மேல் சார்ந்து இருக்கும் ஜனங்களுக்கு மிகவும் முட்டாள்தனமாக உள்ளது. தேவனுடைய ஆயத்தமானது இயற்கையான சிந்தைக்கு முற்றிலும் முட்டாள்தனமாக இருக்கிறது, ஏனெனில் இயற்கையானது, தேவனுடைய காரியங்களைப் புரிந்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அவைகள் அவனுக்கு முட்டாள்தனமாக இருக்கிறது. அவன் அதை எண்ணுவதற்கே பயங்கரமானது என்று நினைக்கிறான். ‘ஏன், தேவன் செய்வார்...’ 19. ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால், நான் உள்ளே வந்தபோது ஒரு ஸ்திரீயைக் கண்டேன். ஒவ்வொருவரும் ஒரு சமயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். ஒரு மனிதன் தன்னுடைய தலையை அசைத்தவாறு... கூறுவதை கண்டேன். நான், ‘சரி அது வேதவாக்கியம்’ என்றேன். இந்தப் பழைய குளிர்ந்து போன சம்பிரதாயமான விட்டில் பூச்சியால் அரிக்கப்பட்ட ஏதோவொன்றை விடவும் அல்லது சுற்றிலும் எழும்பியுள்ள மற்றொன்றை விடவும் மிக நன்றாக இது உள்ளது. நான் வேதாகமத்தை எடுத்து, ‘அவர்கள் ஒன்றாக கூடியிருந்த இடத்தில் கட்டிடம் அசையும் அளவுக்கு அவர்கள் ஒரே இசைவோடு விளையாடிக் கொண்டு - ஜெபித்து கொண்டிருந்தனர்’ (சகோ.பிரான்ஹாம் Prayed ஜெபித்துக் கொண்டு, என்று கூறுவதற்குப் பதிலாக விளையாடிக்கொண்டு என்று கூறி விடுகிறார் - தமிழாக்கியோன்) என்று நான் கூறினேன். நான், ‘அவர்கள் இவர்களைப் பார்த்து குடித்திருக்கின்றனர் என்று கூறும் அளவுக்கு, அவர்கள் வெளியே தெருவில் ஒரு குடிகாரர்களின் கூட்டத்தைப் போல, அவர்கள் தள்ளாடியபடி சென்றனர்’ என்றேன். 20. இப்பொழுது நண்பர்களே, கவனியுங்கள், ஸ்திரீகளாகிய உங்களிடம் தான், ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளும், ஆவியானவரால் குடித்தவர்களைப் (போன்ற) அந்த கூட்டத்தினருடன் இருந்தாள். தேவனுடைய தாய் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்று, அதைப் போன்று நடந்து கொள்ளாமல் தேவன் அவளைப் பரலோகத்தில் வர அனுமதிக்கவில்லை எனும் போது, அதைவிட குறைவான ஏதோ ஓன்றை பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்பொழுது, நாம் அதை ஐயத்திற்கு இடமில்லாமல் தெளிவாகக் கூறுவோம். கன்னி மரியாள் அங்கே மேலே இருக்கவில்லை என்று கூற முயற்சிக்க வேண்டாம்; அவள் அங்கே மேலே இருந்தாள். அவளும் மீதியான அவர்களைப் போல அப்படியே நடந்துக் கொண்டாள். மேலும், உங்களுடைய பெயர் ஒரு புத்தகத்தில் இருக்கிறது என்ற காரணத்தாலோ, ஒரு மோட்டார் வாகனத்தை ஓட்டிக் கொண்டு, ஒரு அருமையான தொப்பியை அணிந்து கொண்டு, அதிகமான வஸ்திரங் களுடன், உங்கள் குழந்தைகளை அருமையாக உடுத்துவித்து இங்கும் அங்கும் சுற்றி வருவதாலோ அது அதை அர்த்தப்படுத்துகிறது என்று நீங்கள் நினைக்கவேண்டாம். அல்லது நீங்கள் செல்கிற சபையை சேர்ந்து இருப்பதினால் அப்படி எண்ண வேண்டாம். அதே காரியத்தை நீங்களும் பெற்றுக் கொள்ள போகின்றீர்கள், அல்லது நீங்கள் புறம்பே இருக்கிறீர்கள். அது சரியாய் இருக்கிறது. இப்பொழுது, யாரையும் குறித்து எனக்குத் தெரியாது, எனக்கு இயேசு கிறிஸ்துவை மாத்திரம் தெரியும். நான் என்ன பேசுகிறேன் என்பதற்காகவும் என்ன கூறுகிறேன் என்பதற்காகவும் நான் நியாயத்தீர்ப்பின் நாளில் பதில் கூற கடமைப்பட்டுள்ளேன். 21. இப்பொழுது, ஆதியில் தேவன் ஆதாமையும் ஏவாளையும்... மனிதன் எப்பொழுதுமே தனக்குத்தானே ஆயத்தம் செய்ய முயற்சிக்கிறான். ஓ, ஆம் ஐயா, அவன் தனக்குத்தானே ஆயத்தம் பண்ண முயற்சிக்கிறான். அவன் முதலாவதாக ஆதியில் பாவம் செய்த போது, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், அவன் வெளியே சென்று ஒரு வஸ்திரத்தை (apron) தனக்குதானே ஆயத்தம் பண்ணிக் கொண்டான்; அத்தி இலைகளை அவனைச் சுற்றி போர்த்துக் கொண்டான். அவன் தனக்குத் தானே உண்டாக்கினான். இப்பொழுது ‘மதம்’ என்ற வார்த்தைக்கு ‘மூடும் பொருள்’ (covering) என்று அர்த்தம். ஆதாமும் ஏவாளும் தங்களுக்கு தாங்களே ஒரு மதத்தை, ஒரு மூடும் பொருளை உண்டாக்கினர். ஆனால் தேவன் அவர்களை அழைத்து, அவர்கள் தேவனுடன் முகமுகமாய் நிற்க வேண்டியிருந்தபோது, அவர்களுடைய, மனிதனால் உண்டாக்கப்பட்ட மதமானது நல்லதல்ல என்று உணர்ந்து கொண்டனர். பரிசுத்த ஆவியை விட குறைவான ஏதோவொன்றை (நீங்கள் கொண்டு இருந்து) மரணம் உங்கள் சரீரத்தை தாக்கினால் (strikes) மரண நேரத்தில் மனிதனால் உண்டாக்கப்பட்ட மதமானது நிற்காது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். ஓ, நீங்கள் என்னிடம் கூறவேண்டாம், நான் மருத்துவ மனைகளில் நின்று கொண்டு, டீக்கான்மார்களும் மற்ற ஒவ்வொருவரும் அங்கே இருந்த போது, மருத்துவர்கள் பயத்தைக் குறைக்கும் ஊசியை கையினுள் செலுத்துவதைக் கண்டிருக்கிறேன். அது சரியே. அவர்கள் கதறியழுது (scream) தங்களுடைய மேய்ப்பரை அழைத்து, ‘நீ மனிதனை வஞ்சிக்கிறவன். நீ ஏன் என்னிடம் சத்தியத்தை சொல்லவில்லை?’ என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் பாதையின் இறுதிக்கு வரும் போது, அது சொல்லும். எனவே செய்ய வேண்டிய சிறந்த காரியம் என்னவெனில் சரியாக இப்பொழுதே அதற்காக ஆயத்தம் செய்தலாகும். காரியத்தை சரிப்படுத்தி விடுங்கள். தேவனுடன் சரியாக இருங்கள். 22. இப்பொழுது, ஏவாள் கொஞ்சம் அத்தியிலைகளினால் தன்னைத் தானே மூடி பொதிந்து கொண்டதைக் கவனிக்கிறேன், ஆதாமும் அவ்வாறே செய்தான். ஆனால் தேவனை சந்திக்கும்படியான நேரம் வந்த போது, அவர்கள் கடிந்து கொள்ளப்பட்டனர். மனிதனால் உண்டாக்கப்பட்ட அந்த மதமானது கிரியை செய்யாது என்பதை உணர்ந்து கொண்டனர். ஆகவே தேவன் அவர்களை அழைத்தபோது..... இப்பொழுது, அது இன்று எவ்வளவு உண்மையாக உள்ளது. தேவன் தாமாகவே ஆதாமிடம் பேசுவதற்கு ஆயத்தமான போது, ஆதாமோ, மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு வழியில் தேவனுடன் பேசுவதற்கு அவனாகவே ஆயத்தமாக முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால் தேவன் தம்முடன் பேசுவதற்கு ஆதாமை ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது. எனவே, அதைச் செய்வதற்காக, பழைய தெரு பேச்சில் (old street expression) துரோகத்தை ஒருவர் மீது ஒருவர் சுமத்த ஆரம்பித்தனர். பிறகு என்ன சம்பவித்தது? தேவன் வெளியே சென்று கொஞ்சம் தோல்களை எடுத்து அவர்களுக்காக மேல் உடைகளை (aprons) உண்டு பண்ணினார். இன்னும் ஒரு நிமிடத்தில், தேவன் யாரென்று நான் எண்ணுவதை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். 23. நாம் இன்றிரவு கொஞ்சம் சிந்தனையில் பயணம் (mental-trip) செய்யலாம். நீங்களும் நானும் வானத்தில் ஒரு நட்சத்திரம் கூட இருந்ததற்கு முன்பாகவே, ஏதாவது அங்கே இருந்ததற்கு முன்பாக, பின்னோக்கி நாம் போகலாம். பின்னால் நித்தியத்தில் இருக்கிறவர், அது தான் தேவன். பிறகு தேவனை விட்டு வெளி வருகிறது, அல்லது தேவன் தம்மைத் தாமே திறந்து வெளிப்படுத்துகிறார். தேவனுடைய குமாரன் அல்லது தேவனுடைய வார்த்தையாயிருந்த லோகாஸ் (Logos) வருகிறார். ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தையானது மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்,’ அந்த லோகாஸ். இப்பொழுது கவனியுங்கள், தேவன் தம்மைத் தாமே திறந்து வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். பிறகு அவர் ஆதியாகமத்தில்: ‘நம்முடைய சொந்த சாயலில் மனிதனை உண்டாக்கு வோமாக’ என்றார். அவன் எந்தவிதமான மனிதனாயிருந்தான்? அவன் ஒரு ஆவி மனிதாக இருக்க வேண்டியிருந்தது. பிறகு அவனுடைய பூமிக்குரிய வீட்டோடே தொடர்பு கொள்வதற்காக ஐந்து புலன்களை அவர் அவனில் வைத்தார். அவர் அவனுக்கு ஒரு கரடியைப் போன்ற காலையும், ஒரு குரங்கைப் போன்ற கையையும் கொடுத்திருக்க வேண்டும் (He might’ve given him a foot like a bear and a hand like a monkey). அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எப்படியாயினும், அந்த ஐந்து புலன்கள் அவனுடைய சிருஷ்டிகருடன் தொடர்பு கொள்ள அல்ல. அவன் தன்னுடைய சிருஷ்டிகரை விசுவாசத்தின் மூலமே அறிந்து கொண்டான். அதை தொடர்பு கொள்ளத்தான் அவனுடைய ஆத்துமா இருந்தது. ஆனால் இங்கேயிருக்கும் அவனுடைய சரீரமானது தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் அது அப்படியே புலன்களாகத்தான் உள்ளன. அவன்... இந்தக் காரியங்கள் பூமியுடன் உபயோகப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டிருந்தன; பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல் மற்றும் கேட்டல். நான் அன்றொரு இரவில் உங்களுக்கு நிரூபித்தபடி, அந்த பார்த்தலும் கேட்டலும் மற்றவைகளும் விசுவாசமாய் இருக்கவில்லை, விசுவாசத்திற்கு புறம்பே உள்ளன. ஆனால் கவனியுங்கள். இப்பொழுது இந்த பூமிக்குரிய வீட்டில் அவர்கள் பாவம் செய்திருந்தனர். தேவன் இறங்கி வந்த போது, அவர், ‘நீ தேவனுக்கு பதிலாக உன் மனைவிக்கு செவிகொடுத்த காரணத்தால், நான் மண்ணிலிருந்து உன்னை எடுத்தேன், நீ மண்ணுக்குத் திரும்புவாய். மேலும் ஸ்திரீயே, நீ உன்னுடைய புருஷனுக்கு செவி கொடுப்பதற்குப் பதிலாக சர்ப்பத்துக்கு செவி கொடுத்த காரணத்தால், ஏன், நீ-நீ கொண்டு வருவாய்... உலகத்தை விட்டு ஜீவனை எடுத்துப் போடுவாய், நீ உலகத்தில் ஜீவனைக் கொண்டு வருவாய், உன் வேதனைகளைப் பெருகப் பண்ணுவேன்’ என்றார், மேலும் மற்றவைகளையும் கூறினார், சர்ப்பத்தைப் பார்த்து, ‘நீ மண்ணைத் தின்பாய்’ என்றார்... அப்பொழுது ஆதாமும் ஏவாளும் அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது... இந்த ஓவியர்களில் சிலர் ஏவாளைக் குறித்து வரைவது போல், காண்பதற்கு அவள் ஒரு பயங்கரமான காட்டுமிராண்டியாக இருந்திருக்க மாட்டாள் என்று நான் எண்ணுகிறேன். உலகத்தில் எங்காவது இருந்ததிலேயே, உலகம் எப்பொழுதாவது அறிந்ததிலேயே, அவள் மிகவும் அழகான ஸ்திரீயாக இருந்தாள். நான் அதற்குள் போவதற்கு சமயமிருந்தால், நான் வேதவாக்கியங்களைக் கொண்டு அதை நிரூபிக்க முடியும். அவள் அழகானவளாக இருந்தாள். ஆதாம் அந்த காலையில் எழுந்து பார்த்த போது, அங்கே அந்த அழகான ஸ்திரீ இருப்பதைக் கண்டான், அவனுடைய மாம்சத்தில் மாம்சமும் அவனுடைய எலும்பில் எலும்புமானவள். அவன் அவளை கரத்தால் பற்றிப் பிடித்தவாறே, ஏதேன் (தோட்டத்தின்) ஊடாக நடந்து சென்றான். என்ன ஒரு அழகான வீடு; வியாதியில்லை, துக்கமில்லை, எதுவுமின்றி, என்றென்றும் ஒன்றாக ஜீவித்தல். 24. நண்பர்களே, கிறிஸ்தவர்களே, உங்களில் சிலருக்கு அது ஒரு சான்டா கிளாஸ் கனவு போல் காணப்படலாம். ஆனால் அது தவறானது. அது தான் சத்தியம். நாம் அதற்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். அது சரியே. நான் இப்பொழுது ஒவன்ஸ் பரோவிலுள்ள இந்த ஆடிட்டோரியத்தில் (சகோ. பிரான்ஹாம் இப்பொழுது பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இடம்-தமிழாக்கியோன்) இருப்பதை நான் நம்புவதை காட்டிலும் அதிகமாக அதை நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் அங்கே எனக்குள் இருக்கும் ஏதோவொன்று அதை விசுவாசிக்கிறது. இது இருக்கும் போது, வேறு ஒன்றும் சம்பவிக்கவிடாது. நான் அதன் அருகில் செல்லவில்லை; இது அதன் மூலமாகத்தான் இருக்கிறது. இது தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறது. இந்த காரணங்களை; இது செய்வதில்லை; இது அப்படியே அதை விசுவாசிக்கிறது. 25. பிறகு, ஆதாமும் ஏவாளும் அங்கே நின்று கொண்டிருப்பதை நான் காணும் போது, ஏவாளின் அழகான ரூபம் (statue). அவள் அங்கே நின்று கொண்டிருக்கும் போது, இந்த பழைய இரத்தந்தோய்ந்த ஆட்டுத் தோல்களிலிருந்து இரத்தமானது அவளுடைய கால்களில் பாய்கிறது... மகத்தான அருமையான ஒரு மனித ரூபத்திலுள்ள ஆதாமின் மேலும், இந்த ஆட்டுத்தோல்களிலிருந்து இரத்தமானது பாய்கிறது. தேவன் அங்கே நின்று கொண்டு, மரணத்திற்கும், துக்கத்திற்கும், இருதய வேதனைக்கும் அழிவுக்கும் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார். கவனியுங்கள். அதன்பிறகு ஏவாள் தன்னுடைய நேசமான தலையை ஆதாமின் தோளின் மேல் வைக்கிறதையும், அவனும் தன்னுடைய கரங்களை அவளைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு இருப்பதையும் என்னால் காண முடிகிறது. அவர்கள் அழத்தொடங்கினர். அவர்கள் சுற்றி திரும்பி, அவருடைய பிரசன்னத்தை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினர். தேவன் அவனை விட்டுப்போய் விட்டார். அவன் பாவம் செய்தான். அங்கே தான் உங்கள் உடைய நியாயத்தீர்ப்பு உள்ளது. 26. பிறகு, ஏதேன் தோட்டத்தின் வழியாக அந்தப் பாதையினூடாக இவ்விதமாக ஏதோவொன்று போய்க் கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிகிறது (சகோ.பிரான்ஹாம் கரங்களை தட்டுகிறார் - ஆசிரியர்.) அது என்ன? அடிக்கப்பட்ட ஆட்டின் இரத்தம் தோய்ந்த தோல்கள் அவன் போகையில் ஆதாமின் காலின் மேல் இருக்கிறது. பின்பு இடைவெளியற்ற அந்த மகத்தான நித்தியம் எல்லாம் ஒரு புனல் போன்று உருவாகி L-O-V-E என்ற சிறிய நான்கு எழுத்தினிடத்திற்கு இறங்கி வருவதை என்னால் காணமுடிந்தது. அவர் (தேவன்) தம்முடைய பிள்ளைகளைப் பிரிந்து திரும்பிப் போக முடியாத அளவுக்கு அவர்களை மிகவும் நேசித்தார். அப்போது அவர், ‘நில். உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவேன்’ என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் ஒரு மீட்பரை வாக்களித்து, தேவன் விடுதலைக்காக ஆயத்தத்தை உண்டு பண்ணினார். 27. இந்தச் செய்தியை சற்று ஒரு நிமிடம் இங்கேயே நிறுத்திவிட்டு, அப்போதிலிருந்து நாலாயிரம் வருடங்கள் பின்னால் போகலாம். எருசலேமில் ஜனக்கூட்டம் உரக்கக் கத்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும், ஜனங்கள் போய்க் கொண்டிருப்பதை நான் கேட்கிறேன். நாம் இப்பொழுது உட்கார்ந்து கொண்டு ஒரு ஜன்னலின் வழியாக நோக்கிப் பார்க்கலாம். தெருவில் ஏதோவொன்று இழுத்துக்கொண்டு வரப்படுவதை நான் கேட்கிறேன். ஒரு பழைய கரடுமுரடான சிலுவையை இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளுடன் தூக்கிக்கொண்டு இழுத்து வரும் ஒருவராக அது இருந்தது. அங்கே போய்க்கொண்டிருப்பவர் யார்? ‘ஏன், மதவெறியராகவும் தெய்வீக சுகமளிப்பவராகவும் இங்கேயுள்ள நசரேயன் தான் அவர்.’ அவருடைய முதுகிலுள்ள அந்த எல்லா சிறு சிவப்பான கறைகள் எவை? அவைகளைப் பாருங்கள்; தையலில்லாமல் நெய்யப்பட்ட அவருடைய வஸ்திரத்தின் மேலெல்லாம் சிறு சிவப்பு கறைகள் உள்ளனவே. முக்கிய தண்டனை நிறைவேற்றும் இடத்தை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பதை நாம் கவனிக்கையில், அந்த சிவப்பு, (இரத்த – தமிழாக்கியோன்) கறைகள் பெரிதாக பெரிதாக பெரிதாக பெரிதாக தொடங்குகின்றன. அவைகளெல்லாம் நேராக ஒன்றினுள் வழிந்து சென்று, ஒரு பெரிய இரத்தம் தோய்ந்ததாக ஆனது. பிறகு நான் ஏதோவொன்றைக் கேட்கிறேன். (சகோதரன். பிரான்ஹாம் கரங்களைத் தட்டுகிறார்-ஆசிரியர்) அது என்ன? உங்களையும் என்னையும் போன்ற பாவிகளுக்காக மரிக்கும்படி அதோ அங்கே போய்க் கொண்டு இருக்கும் உலக தோற்ற முதல் (from the foundation of the world) இருந்த ஆட்டுக்குட்டியை தேவன் ஆயத்தப்படுத்துகிறார். பாவமான மனிதர்களின் இருதயத்தை சுத்தப்படுத்தி, அவனை விடுதலையாக்கி, அவரிடமாக திரும்ப கொண்டு வரும் ஒரு ஆயத்தத்தை தேவன் தயார் செய்து கொண்டிருந்தார். தேவன் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார், ஆயத்தம் செய்தார். செய்யக் கூடியதான வேறு வழி எதுவுமில்லை. அவருடைய வழிகள் காண்பதற்கு எவ்வளவு முட்டாள்தனமாக உள்ளன. 28. யாரோ ஒருவர், ‘நல்லது, ஏன் நீங்கள்... ஏன் தேவன் ஒரு குறிப்பிட்ட காரியத்தை பேசவில்லை? அவர் ஏன் அந்த இலைகளை சுற்றிக்கொள்ளச் செய்யவில்லை...’ என்று சொன்னார். பாருங்கள், மனிதனால் தேவனை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் தேவன் கூறுவதை அப்படியே விசுவாசித்தாக வேண்டும். என்னுடைய சிறு பெண் தன்னுடைய முகத்தைச் சுற்றிலும் என் சவரகன் கத்தியால் (straight rozor) வெட்ட விரும்புவாளானால், அவளுக்கு நான் எவ்வாறு அதை விளக்க முடியும்? நான் எப்படி முடியும்... அது அவளுக்கு என்ன செய்யும் என்று அவளை புரிந்து கொள்ள செய்ய முடியுமா? அவளுக்கு சரியாக இரண்டு வயது தான் ஆகிறது. அவள் என்னை நம்பியாக வேண்டும். அவ்வளவு தான். நான் அப்படியே, ‘நீ அதை எடுக்கக்கூடாது’ என்று கூறுகிறேன். என்னுடைய சிறு மகளுக்கு மூன்று வயதோ அல்லது இரண்டு வயதாகவோ இருந்து, துப்பாக்கியை வெடிக்க உதவும் பகுதியையும் பின்னால் கொண்டு, அதில் இரண்டு குண்டுகளோடும் கூட என்னுடைய வேட்டைத் துப்பாக்கியை எடுத்து, அதைக்கொண்டு விளையாட விரும்பி, கத்திக்கொண்டு, அதைப் பிடித்துக் கொண்டிருப்பாளானால், என்னவாக இருக்கும். அவள் அதை எவ்வளவு விரும்புகிறாள் என்பதற்கு எந்த வித்தியாசமும் உண்டாகாது, அவள் அதை எடுக்க என்னால் அனுமதிக்க முடியாது. நான் எது நல்லது என்பதை அறிவேன், அவள் அதை செய்யக்கூடாது. அவள் அதை புரிந்து கொள்ளும்படி செய்ய என்னால் முடியாது. அவள் அப்படியே என்னை நம்பியாக வேண்டும். அது சரியா? அங்கே கிடக்கும் அந்த ஸ்திரீயையும், இங்கேயிருக்கும் இவரையும் வெவ்வேறானவர்களையும், அவர்கள் சுகமாக முடியாது என்று மருத்து வர்கள் கூறும்போது, பரிபூரணமாக தேவன் எவ்வாறு சுகமாக்க முடியும். அதை என்னால் புரிந்து கொள்ள முடியாது. நான் அப்படியே அதை விசுவாசிக்கிறேன். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அது அதை தீர்த்து வைக்கிறது. 29. என்னையும் உங்களையும் போன்ற ஒரு பாவியை நீங்கள் கொண்டு வந்து நம்மிலிருந்து ஒரு கிறிஸ்தவனாக எவ்வாறு ஆக்குவீர்கள்? என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. தேவன் ஒரு-ஒரு-ஒரு பாவியை எடுத்து நம்மிலிருந்து ஒரு கிறிஸ்தவனாக ஆக்கும் போது, அது தான் எப்பொழுதும் தேவனால் செய்யப்பட்டதிலேயே மிகப் பெரிய அற்புதம் ஆகும். மேலும் உங்களால் முடியவில்லையென்றால்– உங்களால் முடியவில்லையென்றால்... இங்கே பாருங்கள்; தேவன் யாரையாவது பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் அவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறீர்கள். நல்லது, அது ஒரு அற்புதத்தை விடவும் மிக அதிகமானதாகும்; மீறுதல்களினாலும் பாவத்தினாலும் மரித்திருந்த அம்மனிதன்-அம்மனிதன் மரித்திருந்தான், அவன் விசுவாசிக்க வேண்டும் அல்லது தொடர்ந்து மரித்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் மறு படியும் பிறக்கிறீர்கள், நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனாக ஆகிறீர்கள், ஒரு ஜீவனுள்ள மனிதன் ஒரு மரித்த மனிதனை விடவும் அதிகமாக விசுவாசிக்க வேண்டுமானால், நீங்கள் ஒரு சிறு அற்புதத்திற்காகவும், தெய்வீக சுகமளித்தலுக்காகவும் எவ்வளவு அதிகமாக விசுவாசிக்க வேண்டும்? நான் என்ன கருதுகிறேன் என்று காண்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். அதை விளக்கிக்கூற முடியாது, அதை விசுவாசியுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவு தான். 30. கவனியுங்கள். தேவன்... பிறகு ஒரு ஆயத்தம் செய்தல். ஜனங்கள், ‘நல்லது இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாமே, நான் விசுவாசிக்கும் போது, அது அதை தீர்த்து வைக்கிறது’ என்று கூறுகின்றனர். இல்லை, அது அவ்வாறில்லை. உங்கள் விசுவாசத்தைக் குறித்துள்ள உறுதிப்பாட்டில் தேவனுக்கு ஒரு தொடர்பு (transaction) இருக்க வேண்டியதாயுள்ளது. உங்களுக்கு ஒரு புதுப்பிறப்பைக் கொடுக்கிறார். எத்தனை... இங்கிருக்கும் ஜனங்களிடம் கூறுங்கள்... உணர்வுகளைத் தூண்டி தன்வயப்படுத்தி பரலோகத்திற்குச் செல்லும் தங்கள் வழியிலுள்ள ஜனங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த சலிப்பும் களைப்பும் ஏற்படுகிறது. அவர்கள் அப்படியே, ‘நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?’ என்று கூறுகின்றனர். ‘உ-ஊ. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்.’ ‘நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?’ அது நடந்தும், தங்களைக் கடந்து செல்லும் வாகனங்களில் இலவசமாக பயணமும் செய்பவர்கள் (hitchhikers). சகோதரனே, தேவன் அதைப்போன்ற அப்படிப்பட்ட காரியங்களை செய்வதில்லை. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியால் பிறந்து மறுபிறப் படைந்து, ஒரு புதுசிருஷ்டியாக வேண்டும் அல்லது அவன் இழக்கப்பட்டு இருக்கிறான். அவ்வளவு தான். அது மிகவும் சரியே. நாம் அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். நீங்கள், ‘நல்லது, நான் விசுவாசித்தால், அது அதை முடிவுப்பெற செய்கிறது’ என்கிறீர்கள். இல்லை, அதுவல்ல. 31.நான் அன்றொரு இரவு காயீன் ஒரு விசுவாசியாக இருந்தான் என்று உங்களிடம் கூறினேன். நீங்கள் அதை விசுவாசிக்க விரும்பினால், நான் இன்றிரவு, அதைவிடவும் சிறிது திடமான ஆகாரத்தை உங்களுக்குக் கொடுப்பேன். பிசாசும் ஒரு விசுவாசியாக இருக்கிறான். அவன் அவ்வாறு இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகிறது. அவன் விசுவாசித்து நடுங்குகிறான். பிசாசு ஒரு விசுவாசியாக இருக்கிறான். இப்பொழுது, இரட்சிக்கப்படுவதற்கு தேவனிடத்திலுள்ள நம்பிக்கையும் விசுவாசமுமே உங்களெல்லாருக்கும் வேண்டியது என்றால், அப்போது தேவனுடைய வார்த்தையின்படி பிசாசும் இரட்சிக்கப்பட்டு இருக்கிறான். அது சரியே. ஆனால், சகோதரனே, அது பரிசுத்த ஆவியைப் பெற்று, ஒரு புது பிறப்படைந்து, கிறிஸ்து இயேசுவில் மறுபிறப்படைந்து ஒரு புது சிருஷ்டியாக வேண்டும். தேவன் கீழே இறங்கி வந்து, தம்முடைய ஆவியை உங்களில் வைத்து, அதன் பிறகு இனி மேலும் நீங்கள் உங்களுடையவர்களல்ல, ஆனால் நீங்கள் தேவனுடையவர்கள். ஓ. நான் ஏற்கனவே பக்தி பரவசப்படத் தொடங்கி விட்டேன். 32. கவனியுங்கள், தேவனுடைய மகத்தான திட்டத்தைக் குறித்து நான் என்ன நினைக்கிறேன். ஏழ்மையான, அந்நியராகவும், தேவபக்தி அற்றவர்களாகவும், மாறுபாடானதைச் செய்த பாவிகளாகவும் இருந்த நாம் தேவனுடைய ஸ்தலத்திற்கு வந்து அவரை ஏற்றுக் கொண்டு, அவருடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக ஆகும் சிலாக்கியத்தை நினைத்துப் பார்க்கும் போது, ஏன், என்னே... ‘இனி எவ்விதம் இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை, ஆனால் அவரைப் போல ஒரு சரீரத்தை உடையவர்களாக இருப்போம் என்றும் அவர் இருக்கிற வண்ண மாகவே நாம் அவரை தரிசிப்போம் என்றும் அறிந்திருக்கிறோம்.’ அவரைப் போலவே நாமும் புசிப்போம் குடிப்போம் என்பது அற்புதமாயிருக்காதா? 33. இப்பொழுது, தேவன் தம்முடைய ஆயத்தத்தில் இருக்கிறார். முன் காலத்தில் தேவன் உலகத்தை அழிக்கப் போன போது, அவர் உலகத்தை அழித்ததற்கு முன்பு, இரட்சிக்கப்பட விரும்பின ஜனங்களை இரட்சிப் பதற்காக ஒரு ஆயத்தத்தை முன்னே அனுப்பினார். அவர் எப்பொழுதுமே அதைச் செய்கிறார். அவர் நியாயத்தீர்ப்புக்கு முன்பு இரக்கத்தை காண்பிக்கிறார். மனிதர்கள் இரக்கத்தைப் புறக்கணிப்பார்களானால், ஒரே யொரு காரியம் மட்டுமே விடப்பட்டுள்ளது, அதுதான் நியாயத் தீர்ப்பு. தேவன் உங்களை நியாயந்தீர்ப்பதில்லை; நீங்களே உங்களை நியாயந்தீர்க்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் உலகத்தைச் சுற்றிலும் தெளிக்கப்பட்ட இந்த இரத்தத்தின் கீழ் இருக்கும் காலம் வரை, இரக்கத்திற்கான ஒரு- ஒரு உரிமை உங்களுக்கு உண்டு. தேவன்... கிறிஸ்துவின் இரத்தம், தேவன் உங்களை கொல்லாமல் காக்கிறது, அல்லது நீங்கள் பாவம் செய்த உடனே அவர் உங்களை கொன்றிருப்பார். ஆனால் அது இன்னும்... காக்கிறது... தேவனை உங்கள் இடமிருந்தும், அவர் உங்களை கொன்று விடாமலும் காக்கிறது. ஆனால்... நீங்கள் இப்பொழுது ஒரு சுயசித்தத்தின்படி நன்மை தீமையை சார்ந்து நடப்பவராயிருக்கிறீர்கள் (free moral agent). நீங்கள் மரித்து, உங்களுடைய ஆவி அதற்கு மேலாக போகும் போது, நீங்கள் ஏற்கனவே நியாயத்தீர்க்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டியதில்லை; நீங்கள் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு விட்டீர்கள். தேவன், ‘நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்’ என்று கூறினதைச் செய்தார். அது அதைத் தீர்த்து வைக்கிறது. பிறகு தேவன் நோவாவை பிரசங்கிக்க அனுப்பின போது... ஒரு போதும் மழையே பெய்ததில்லை என்பது வினோதமாக இல்லையா? பூமியின் கீழேயுள்ள தண்ணீரேயன்றி வேறு தண்ணீரில்லை. ஒரு வயதான பரிசுத்த உருளையனாயும், இதைப் போன்று தாடி தொங்கிக் கொண்டும், ஒரு சுத்தியலை வைத்துக் கொண்டுமுள்ள ஒரு வயதான மனிதன் அங்கே வெளியே வந்து ஒரு பேழையை - ஒரு படகைக் கட்டத் தொடங்கினான். 34. பட்டணத்தில் உள்ள ஜனங்கள் அதைக் குறித்து பேசிக் கொண்டு இருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏன், அவர்கள், ‘ஏய் அந்த வயதானவன் அங்கிருந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த மழை கதையை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றனர். ஆனால் அவன் தேவனுடைய சித்தத்தைக் கொண்டிருந்தான். அவன் எங்கிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். உலகம் என்னவாக இருந்தாலும், அது உலகத்திற்கு எவ்வளவு முட்டாள்தனமாக காணப்பட்டாலும் காரியமில்லை, தேவன் தம்முடைய கரத்தை வைக்கக் கூடிய ஒரு மனிதனை அவர் கொண்டிருந்தார். அவன் அந்த பேழையைக் கட்டினான். ஜனங்கள் அதைக்குறித்து நகைத்தனர். அது அவனை நிறுத்தி விடவில்லை. அவன் அப்படியே முன்னே சென்று அதைக் கட்டினான். உண்மையாகவே தேவனுடைய தெய்வீக சித்தத்தை அறிந்துள்ள மறுபடியும் பிறந்துள்ள எந்த மனிதனும், அவர்கள் உங்களை ஒரு பரிசுத்த உருளையன் என்றோ, மதவெறியன் என்றோ, அவர்கள் விரும்பும் எதாகவும் அழைக்கலாம், நீங்கள் சரியாக முன்சென்று பேழையை கட்டுவீர்கள். அது ஒரு துளி வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. அது சரியே. நீங்கள் அதற்காக ஆயத்தமாகிறீர்கள். 35. இப்பொழுது, புயலும் மழையும்... வரப்போகிறது என்று நோவா சொன்ன நேரத்தை என்னால் காணமுடிகிறது. ‘ஓ, அவர் அதை எவ்விதம் செய்யப்போகிறார்?’ எனக்குத் தெரியாது. ஏன், அது ஒருபோதும் அதைச் செய்யவில்லை. அவர்கள் இன்று நாம் கொண்டிருப்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த விஞ்ஞானிகளாக இருந்தனர். எகிப்திற்கு சென்று பூமியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளைப் பாருங்கள். சூரியன் எங்கு இருந்தாலும் காரியமில்லை, அங்கே ஒரு போதும்... பூகோளரீதியாக, அது பூமியின் மையத்தில் உள்ளது. அதைப் சுற்றிலும் ஒரு நிழலும் ஒரு போதும் விழுவதில்லை, சூரியன் எங்கிருந்தாலும் காரியமில்லை. அவர்கள் அதை எவ்விதம் செய்தனர்? இந்தக் கட்டிட கலைஞர்கள், குறைந்தது இரண்டு நகர வட்டாரங்கள் (two city blocks) உயரத்திற்கு, அது நூறுகோடி (a billon) டன்கள் எடையுள்ளது. அவர்கள் எவ்வாறு அவைகளை (கற்களை - தமிழாக்கியோன்) மேலே கொண்டு சென்றனர்? இப்பொழுது அவைகளை மேலே கொண்டு செல்ல ஏதோவொன்றை உருவாக்கி உள்ளனர். அவர்களால் அதைச் செய்ய முடியாது. அவர்கள் தங்களுடைய நாட்களில் சரீரத்தைக் கொண்டு செய்தது போன்ற மம்மிகளை இன்று இவர்களால் உருவாக்க முடியவில்லை. அவர்கள் செய்தது போன்ற பிணம் கெடாமல் தைலம் பூச இவர்களால் முடிவதில்லை. இந்தக் காரியங்கள் எதையுமே செய்ய முடியவில்லை. அவர்கள் உண்மையிலேயே இன்றுள்ள இவர்களை காட்டிலும் புத்திசாலிகளாய் இருந்தனர். மேலே நின்று கொண்டு, பேழையைக் கட்டிக் கொண்டு, மழை வரப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த அம்மனிதனைப் பார்த்து அவர்கள் நகைத்ததை நீங்கள் அறிவீர்கள், ஆனால் எப்படியாயினும் அது மழையைப் பெய்தது. 36. நான் அப்படியே கற்பனை செய்ய முடிகிறது... நாம் இதை சிறிது நேரம் பார்க்கலாம். தேவன் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தார், நோவா பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான். நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், ஏன் ஒரு நாள் ஒரு இடிமுழக்கம் வருகிறது. யாரோ ஒருவர் ‘ஓ, எங்கோ ஓரிடத்தில் பெருங்காற்று அடிக்கிறது’ என்று கூறுவதை நான் கேட்கிறேன். ஆனால் ஒரு-ஒரு மேகம் உயரே எழும்பி வரத்தொடங்கியது. இப்பொழுது, அங்கே இருக்கிற மகத்தான பெரிய கிளியை (Polly Parrot) என்னால் காண முடிகிறது. அது தாய் கிளியை நோக்கிப் பார்த்து, ‘அம்மா, அதைத்தான் நோவா கூறினார்’ என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அந்த சிறு குரங்கு அந்த பழத்தை அங்கு எறிந்து விட்டு, ‘வாருங்கள் அம்மா, நாம் பேழைக்கு முன்னேறி செல்லலாம்’ என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. வயதான ஒட்டகமானது சாப்பிட்டுக் கொண்டே, ‘வா, நாம் போகலாம்’ என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலால் அவைகள் ஜோடி ஜோடியாக பேழைக்குள் செனறன. சில சமயங்களில் மனிதன் காட்டு விலங்கின் அறிவுக்கூர்மையையும் பெற்றிருக்கவில்லை என்பதை அது நிரூபிக்கிறது. அது சரியே. அந்த காட்டு விலங்குகள் பரிசுத்த ஆவியானவர் மூலம் தேவ எச்சரிப்பைப் ஏற்றுக் கொண்டு, சத்தத்திற்கு செவி கொடுத்து, பாதுகாப்புக்குள் சென்றன. இன்று மனிதனோ, தேவ குமாரனின் வருகையைக் குறித்த சத்தத்தைக் கேட்டும் அதை நிராகரித்து அதை கேட்க மறுக்கிறான். ஆமென். அது தான் உண்மையென்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் தேவன் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்... அது முட்டாள்தனமாக காணப்படுகிறது. யாரோ ஒருவர் ‘நல்லது மழை பெய்யுமானால், நான் ஒரு பெரிய மரத்தின் துண்டை எடுத்து அதன் மேல் ஏறிச் சென்று விடுவேன்’ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆனால் அந்த பெரிய மரத்துண்டு மூழ்கி விடும். எனவே இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது, ஒவ்வொரு மரத்துண்டும் மூழ்கி விடும். கிறிஸ்துவின் சரீரத்தில் இல்லாத ஒவ்வொன்றும் இங்கே கை விடப்பட்டிருக்கும். ‘நோவாவின் நாட்களில் இருந்தது போல, மனுஷ குமாரனின் வருகையிலும் இருக்கும்.’ 37. இயேசு, ‘நான் நீதியைக்காண்பேனோ? நன்றாக ஜீவிக்கும் ஜனங்களைக் காண்பேனோ?’ என்று ஒருபோதும் கேட்கவில்லை. நற்குணமும் நீதியும் என்னவாக உள்ளது... இயேசு, ‘நான் திரும்பி வரும்போது, விசுவாசத்தைக் காண்பேனோ? நான் காண்பேனோ...’ என்று தான் கூறினார். யாரோ ஒருவர், ஓ அவர்கள், ‘நான் விசுவாசத்தைப் பெற்றிருக்கிறேன்’ என்று கூறுகின்றனர். நல்லது, கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது. ‘‘ஒவ்வொரு வார்த்தையும் சரி’ என்று கூறி, என் வார்த்தையில் நிற்கும் யாரையாவது நான் காண்பேனோ. இவர் அவ்வாறு கூறுகிறார் என்றோ அவர் அவ்வாறு கூறுகிறார் என்றோ அல்லது எதுவும் கூறவில்லையென்றோ நான் பயப்படமாட்டேன். நான் தேவனில் விசுவாசம் வைத்து, அதை ஏற்றுக் கொண்டு, சரியாக அங்கே அதன் மீது நின்று கொண்டிருக்கிறேன்.’ அது தான் காரியம். தேவன் நோவாவின் நாட்களில் அந்த பேழையில் செய் தது போல இன்றும் அவர் இரட்சிக்கப்படும்படி ஒரு சபையை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இன்று கிறிஸ்துவின் சரீரமே அந்தப் பேழையாக இருக்கிறது. ஏன், நீங்கள் ‘நாங்களனைவரும் அதை விசுவாசிக்கிறோம்’ என்று கூறுகிறீர்கள். 38. இங்குள்ள ஓஹியோ நதியை நான் எவ்வாறு கடப்பது என்று நான் உங்களிடம் கேட்பேனாகில், நீங்கள், ‘பாலத்தின் மூலம்’ என்று கூறுவீர்கள். அது சரியே. ஒவ்வொருவரும், ‘நீங்கள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டீர்கள்; கிறிஸ்துவே வழியாக இருக்கிறார்’ என்று கூறுகிறீர்கள். அது சரியே, கிறிஸ்து தான் வழி. ஆனால் நீங்கள் கிறிஸ்துக்குள் எவ்வாறு வருவது? இப்பொழுது, அங்கே அவருடைய சரீரம் உள்ளது; ‘ஒரு எழுத்தினாலோ (letter), ஒரு அறிக்கையினாலோ (confession) ஒரு விசுவாச அறிக்கையினாலோ (profession) அல்ல, ஆனால் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்’ என்று வேதாகமம் கூறுகிறது. ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டுள்ள (already been judged) கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். நாம் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாக்கப்பட்டுள்ளோம். அவருடைய சரீரத்தை தேவன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ செய்தது போல, நாமும் அவ்வளவு நிச்சயமாக அவ்வாறே இருக்கிறோம், அவர் போனது போலவே சபையும் மேலே செல்லும். கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற அனைவருமே மேலே போவார்கள். ஆமென். 39. சரி. கவனியுங்கள், தேவன் ஒரு ஆயத்தத்தை செய்து கொண்டு இருக்கிறார். சில சமயங்களில் அது எவ்வளவு முட்டாள் தனமாகத் தோன்றுகிறது. உதாரணமாக, மோசேயை எடுத்துக்கொள்வோம். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றப் போகிற ஒரு வேளையை தேவன் கொண்டிருந்தார். ஆபிரகாமுடைய வித்தானது அந்நிய தேசத்தில் நெடுங்காலமாக, நானூறு வருடங்களாக பரதேசிகளாய் இருப்பார்களென்றும், ஆனாலும் அவர் அவர்களை வெளியே கொண்டு வருவார் என்றும் தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் நெருங்கின போது, தேவன் மோசே என்னும் பெயருடைய ஒரு பையனை எழுப்பினார். அவன் தேவனுக்குக் கீழ்படியவில்லை, அவர்கள் நாற்பது வருடங்களாக உபத்திரவப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஒரு நாள் அங்கே வனாந்திரத்தின் பின்புறத்தில், தேவன், ‘நான் என் ஜனத்தின் புலம்பலைக் கேட்டு, அவர்களுடைய கூக்குரலைக் கண்டு அவர்களை விடுதலையாக்க இறங்கி வந்திருக்கிறேன்’ என்றார். நான் அதை விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? ஆமென். ஓ, நீங்கள் இதை இங்கே கவனிக்க நான் விரும்புகிறேன், அது என்னை முழுவதுமாக புல்லரிக்கச் செய்கிறது. கவனியுங்கள். இங்கே, எண்பது வயதுள்ள முதிர் வயதான மோசே, எண்பது வயதான நம்முடைய சகோதரன் மோசே வனாந்திரத்தின் பின்புறத்தில் நின்று கொண்டு, ஒரு நாள் எரிகிற முட்செடியைக் கண்டான். 40. விசித்திரமான தேவன் அக்கினியில் தோன்றுகிறார். இது காட்டு தீ என்று அவர்கள் கூறுகிறார்கள். நல்லது, நாம் கொஞ்சம் காட்டு தீயை பெற்றிருக்கிறோம் என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அக்கினியே இல்லாமல் இருப்பதை விட ஓரளவுக்கு கொஞ்சம் காட்டு தீயைக் (wild fire) கொண்டிருக்கிறோம், இல்லையா? பிரச்சனை போதகர்களாகிய உங்களிடத்தில் தான், நீங்கள் தடங்கலை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு, ‘அங்கே, முன்பு பெந்தெகொஸ்தே நாளில் இது சம்பவித்தது, அங்கே முன்பு அவர்களுக்கு இது இருந்தது’ என்று கூறுகின்றனர். வரையப்பட்ட அக்கினியின் மூலம் குளிராயிருக்கும் ஜனங்கள் குளிர்காயும்படி செய்ய நீங்கள் முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வரையப்பட்ட ஒரு படத்தின் மூலம் குளிர் காய முடியாது. அவர்கள் அருமையானதைத் தான் கொண்டிருந்தனர், ஆனால் நீங்கள் இப்பொழுது எதைப் பெற்று இருக்கிறீர்கள். இது தான் இது. ஒரு வரையப்பட்ட அக்கினியின் மூலம் உங்களால் குளிர் காய முடியாது. வேத சாஸ்திரத்தைக் குறித்து பேசுகிறீர்கள், அவர்கள் முன்பு அங்கே என்ன செய்தனர்... அவர் அங்கே என்னவாக இருந்தாரோ, அவ்வாறே இப்பொழுதும் அவர் மாறாதவராக இருக்கிறார். 41. இப்பொழுது, மோசே, எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தான், அவன், ‘இந்த வினோதமான காரியம் என்னவென்றும் காணும்படி, நான் கிட்டப்போய் (பார்ப்பேன்)’ என்றான். இப்பொழுது அவன், ‘நான் அந்த மரங்களிலிருந்து கொஞ்சம் இலைகளைப் பறித்து, பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்று, அதைப் பரிசோதித்து, மனதிலுள்ளவைகளை படிக்கும் கலையா (mental telepathy) என்றோ அல்லது அந்த இலைகளில் என்ன உள்ளதென்றோ அல்லது அது என்னவாயினும் அதைக் காணப்போகிறேன்’ என்று ஒருபோதும் கூற வில்லை. அதைக் காணும்படி அவன் கிட்டப்போனான். அவன் அவ்வாறு போன போது, தேவன் அவனிடம் பேசி, ‘மோசே உன் பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ பரிசுத்த பூமியில் இருக்கிறாய்’ என்றார். அவர் மோசேயோடு பேசினார். மோசே ஒரு கொலையாளியாக இருந்தான். ஒரு எகிப்தியனை கொன்று விட்டு எகிப்தை விட்டு வெளியே வந்தான். ஆனால் தேவனோ, ‘நான் அவர்களை விடுவிக்கப் போகிறேன். நான் உன்னை அனுப்பப் போகிறேன்’ என்றார். எவ்வளவு வயதாக இருக்க வேண்டுமோ அவ்வளவு வயதாகி காணப்பட்ட ஒரு வயதான மனிதனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மோசே, ‘நான் போக முடியாது; நான்-நான்-நான் திக்குவாயன்; நான்-நான்-நான் திக்கி திக்கி பேசுகிற ஒருவன்; என்னால் போக முடியாது’ என்றான். அவர், ‘மோசே, உன் கையிலிருக்கிறது என்ன?’ என்றார். அவன், ‘ஒரு கோல்’ என்றான். ‘உனக்கு தேவையானதெல்லாம் அவ்ளவுதான்.’ 42. சரி, அவன் அந்த கோலை எடுத்து சென்று, அற்புதங்களை நடப்பித்தான். அங்கேயிருந்த அந்த வனாந்திரத்திலிருந்து அந்த வளைந்து காய்ந்து போன கோலை அவன் எடுத்துக் கொண்டான். உலகத்திலேயே பெரிய, அதிக வல்லமையுள்ள இயந்திரமாக்கப்பட்ட இராணுவத்தின் மீது படையெடுக்க மோசேயை எகிப்திற்கு அனுப்பினார். எவ்வளவு முட்டாள்தனமானது, எண்பது வயதான வயது முதிர்ந்த ஒருவன். அடுத்த நாள் காலையில், மோசே சிப்போராளை ஒரு வயதான கழுதையின் இருபுறமும் கால்களை போட்டுக் கொண்டவாறு இருத்தி, இடையில் ஒரு பையனையும் (a young’ un) இருத்தி, இதைப்போன்று பெரிய நீளமான தாடியைக் கொண்டவாறு தன்னுடைய கையில் ஒரு வளைந்த கோலை வைத்துக் கொண்டு, ஒரு கழுதையை இழுத்து செல்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ‘மோசே, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?’ ‘எகிப்தை கைப்பற்ற போய்க் கொண்டிருக்கிறேன்’ ‘என்னே முட்டாள்தனமானது. ஏன்,’ அம்மனிதன், ‘நீர் பைத்தியக்காரனாய் இருக்கிறீர். அவர்கள் சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான மனிதர்களை கொண்டுள்ளனர்’ என்றான். ‘அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை; நான் கைப்பற்றப் போகிறேன் என்று தேவன் கூறினார். நான் அதை விசுவாசிக்கிறேன்.’ அல்லேலூயா. ‘அது முட்டாள்தனம்’ என்று கூறலாம். ஆனால் தேவன் அவ்வாறு கூறினார். நான் அதைக்கைப்பற்றுவேன் என்று தேவன் அவ்வண்ணமாகக் கூறியிருப்பாரானால், அது எவ்வளவு முட்டாள்தனமாக காணப்பட்டாலும் காரியமில்லை. ஆமென். நான் அவரை விசுவாசிக்கிறேன். அந்த வயதான மனிதன், ‘வா கழுதையே, வா; நாம் அதைக் கைப்பற்ற போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவன் கைப்பற்றினான். ஆமென். அவன் அதை எவ்வாறு செய்யப்போகிறான்? எனக்குத் தெரியாது. அவன் போய் அதைச் செய்யும்படி தேவன் அவனிடம் கூறினார். அவன் அதைச் செய்தான். 43. இன்றும் அது அந்த விதமாகத் தான் உள்ளது. என் அன்பார்ந்த பாப்டிஸ்ட் மற்றும் மெதொடிஸ்டு நண்பனே, அதன் காரணமாகத் தான், நான் பரிசுத்த உருளையர்களுடன் இணைந்துள்ளேன். இந்த ஏதோவொரு நாளில் அதைக் கைப்பற்ற போகிறோம். எப்படி? எனக்குத் தெரியாது? தேவன் அவ்விதமான ஒருகூட்ட ஜனங்களுடன் எவ்வாறு இடைபட முடியும்? நான் உங்களிடம் கூற முடியாது, ஆனால் அவர் அதை செய்கிறார். போய், கைப்பற்றுங்கள். ஆமென். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். ‘கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். என்னுடைய ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள் மேலும், என் ஆவியை ஊற்றுவேன். உயர வானத்திலே அடையாளங் களையும், கீழே பூமியிலே அக்கினிஸ்தம்பம், புகைக்காடாகிய (அதிசய ங்களையும்) காட்டுவேன். உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.’ அது சரியா? அவர் அதை எவ்வாறு செய்யப் போகிறார்? எனக்குத் தெரியாது, ஆனால் நாம் அதைக் கைப்பற்றப் போகிறோம். அதன் பிறகு ஒரு ஆயிரவருட அரசாட்சி இருக்கும். அல்லேலூயா. இயேசு வருகிறார். உலகத்தால் வெறுத்து புறக்கணிக்கப்பட்ட சபையை தேடிக்கொண்டு அவர் வருகிறார். ஆனால் ஒருவன்... ‘நீங்கள் மனுஷருக்கு முன்பாக என்னைக் குறித்து வெட்கப்பட்டால், நானும் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் உங்களைக் குறித்து வெட்கப்படுவேன்.’ கைப்பற்ற செல்லுதல். முட்டாள்தனம், அந்த வயதான மனிதன் தன்னுடைய மனைவியுடனும், தன்னுடைய பிள்ளைகளுடனும் (kids) கழுதையை இழுத்துக் கொண்டு போகிறான், ஒரு மனிதனின் படையெடுப்பு, ஆனால் அவன் அதைச் செய்தான். அவனிடம் எந்த துப்பாக்கியும் இல்லை; அவனிடம் எந்த கவணும் இல்லாதிருந்தது; அவனிடம் எந்த பட்டயமோ ஈட்டியோ இல்லாதிருந்தது. அவன் அவைகளைக் கொண்டிருந்தாலும் அவனால் அவைகளை பயன்படுத்த முடியாது. ஆனால் அவன் உபயோகப் படுத்தினதைக் கொண்டிருந்தான். அல்லேலூயா. 44. நீங்கள் பேச்சுத்திறன் கொண்டவராக இல்லாமல் இருக்கலாம்; நீங்கள் ஒரு பிரசங்கியாக இல்லாமல் இருக்கலாம்; நீங்கள் ஒரு பாடகராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களிடம் உள்ளதை உபயோகப் படுத்துங்கள். அல்லேலூயா. உங்களால் சாட்சி கூற முடியும், நீங்கள் ஏதோவொன்றை செய்யவோ முடியும். கைப்பற்றுங்கள். அல்லேலூயா. கவனியுங்கள், அது உங்களை பயப்படுத்த விடவேண்டாம். ‘அல்லேலூயா’ என்பதற்கு ‘நம்முடைய தேவனை ஸ்தோத்திரியுங்கள்’ என்று அர்த்தம். 45. கவனியுங்கள், சமீபத்தில் நான் இங்கே ஒரு கால்பந்து மைதானத் தினுள் போய்க் கொண்டிருந்தேன், அங்கு தான் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். என்னை எப்பொழுதும் ஈர்க்கும் வகையில் இருந்த ஒரு சிறு அடையாளத்தை நோக்கிப் பார்த்தேன். அது மைதானத்தின் மேலே தொங்க விடப்பட்டிருந்தது. அதில், ‘அது சண்டையிடும் நாயின் அளவைப் பொறுத்ததல்ல; அது நாய் போடும் சண்டையின் அளவைப் பொறுத்தது’ என்றிருந்தது. அது சரியே. நீங்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் பேர் இருக்கலாம்; நீங்கள் கொஞ்சமாக இருக்கலாம்; நீங்கள் இது, அது மற்றது எல்லாமாக இருக்கலாம்; ஆனால் அது சண்டை போடும் நாயின், சண்டையின் அளவைப் பொறுத்தது. அது சரியே. 46. இங்கே சமீபத்தில், நான் மேற்கில் இருந்தபோது ஒரு இந்தியன் மனந்திரும்பினதைக் குறித்து கேள்விப்பட்டேன். ‘தலைவரே எப்படி உணருகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு சில நாட்களுக்குப் பிறகு, அவர், ‘நல்லது, ஏறத்தாழ நன்றாகவும் மோசமாகவும் உள்ளது’ என்றார். ‘நீங்கள் ஏறத்தாழ நன்றாக உள்ளது என்று கூறுவதற்கு அர்த்தம் என்ன?’ என்றேன். ‘நல்லது, நான் இரட்சிக்கப்பட்ட முதற்கொண்டே என்னிடத்தில் இரண்டு நாய்கள் உள்ளன. ஒன்று கறுப்பு நாய், மற்றொன்று வெள்ளை நாய்; அவைகள் எல்லா நேரமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன. கறுப்பு நாயானது நான் தீயதை செய்ய விரும்புகிறது. நல்ல நாய் நான் நல்லதை செய்ய விரும்புகிறது அல்லது வெள்ளை நாய் நான் நல்லதை செய்ய விரும்புகிறது’ என்றார். ‘தலைவரே, எது வெற்றி பெறுகிறது?’ என்றேன். ‘ஊ! எதை அதிகமாக போஷிக்கிறேன் என்பதை அது பொறுத்திருக்கிறது’ என்றார். அது தான் அது. உங்களுடைய இருதயத்திலுள்ள அந்தக் காரியமானது, அது தான் தேவனுடைய சத்தியமென்று இப்பொழுது உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான் வழியாக உள்ளது, இன்று தேவனுடைய ஆயத்தமானது பரிசுத்த ஆவி தான், இரத்தத்தால் கழுவப்பட்ட சபையானது மறுபிறப்படைந்து, பரிசுத்தாவியால் நிறையப்பட்டு, அடையாளங்களாலும் அற்புதங்களாலும் அதை நிரூபித்து, அவர் அதனுடன் இருக்கிறாரென்று நிரூபித்து, உங்களிடம் கூறிக் கொண்டிருக்கும் அந்தக் காரியத்தை கொண்டு, ஒரு சில நிமிடங்கள் போஷித்தால், நீங்கள் அவர்களுடன் எண்ணப்படுவீர்கள். அது சரியே. ஆமென். 47. மோசே கைப்பற்றும்படி போய்க் கொண்டிருந்தான். எவ்வளவு முட்டாள்தனமானது, ஆனால் அவன் அதைச் செய்தான். ஏன்? தேவன் அவ்வாறு கூறினார். அது தான் வித்தியாசம். தேவன் அவ்வாறு கூறினார். இப்பொழுது, இன்றிரவு உன் கையிலிருக்கிறது என்ன? ‘நல்லது’ நீங்கள், ‘சகோ. பிரான்ஹாமே, இங்கே இதைச் செய்வதை விட்டு விடுவதற்கு போதுமான விசுவாசத்தைப் பெறுவது எனக்குக் கடினமாக உள்ளது’ என்று கூறலாம். ஒரு சமயம் அங்கிருந்த ஒரு சிறு பையன் இயேசுவிடம் வந்தான். அங்கிருந்த ஒட்டு மொத்த ஐயாயிரம் ஜனங்களும் பசியாயிருந்தனர். அந்தச் சிறு பையனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு அல்லது மூன்று மீன்களும் இருந்தன. அவனுடைய கரங்களில் அதிகமாக ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் அது, ஒரு முறை இயேசுவின் கரங்களில் வந்த போது, அது ஆயிரக் கணக்கானோரைப் போஷித்தது. பாருங்கள்? அது அவனுடைய கரங்களில் இருந்தபோது, அது வெறுமனே ஒரு சில அப்பங் களாகத்தான் இருந்தன, அவனாகவே போஷிப்பது கடினம். ஆனால் கிறிஸ்துவின் கரங்களுக்குள் அது ஆயிரக்கணக்கானோரைப் போஷித்தது. இன்று இரவில் நீங்கள் பெற்றிருக்கும் இச்சிறிய விசுவாசமானது இவ்விதமாக நீங்கள் வெளியில் வந்து சபைக்குச் செல்லவும் கட்டவிழ்க்கவும் போதுமானதாய் உள்ளது. அவருடைய கரங்களில் கொடுத்து, ‘கர்த்தாவே, எனக்குப் பின்னால் அவர்கள், என்னை பரிசுத்த உருளையன் என்று அழைத்தாலும், அதன் பின் விளைவு எதுவாக இருந்தாலும், அவர்கள் தாங்கள் விரும்பின எதைச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் இப்பொழுதே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை ஏற்றுக் கொள்கிறேன். தேவனே, என் இருதயத்தில் அக்கினியைக் கொளுத்தும்; நான் அதை விட்டு வெளியே வரட்டும்’ என்று கூறுங்கள். இப்போதிலிருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கும் என்று கவனியுங்கள். நீங்கள் கீழே தெருவில் சென்று, ‘பழைமை கால மதத்தை நான் பெற்றுள்ளேன்’ என்று பாடுவீர்கள். சகோதரனே, இன்றிரவு இப்பள்ளிக்கூட மண்டபத்தில் ஏதோ ஒன்று சம்பவித்தது என்று இங்கு சுற்றிலுமுள்ள முழு தேசமும் அறிந்து கொள்ளும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவி வருவதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. அது இங்கே இரண்டாயிரம் வருடங்களாக இருக்கிறது. ‘பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கும்போதே, விசுவாசித்தவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் விழுந்தார்.’ (பரிசுத்த ஆவி) வருவதற்கு காத்திருத்தல் என்பது அப்படியே பெந்தெகோஸ்தே நாளுக்காகத் தான். ஓ, என்னே. நான் என்னுடைய அளவில் இரு மடங்கானதை உணருகிறேன், என்னால் இருமடங்கு நன்றாகவே உணர முடிகிறது. கவனியுங்கள், ஆனால் என்னுடைய அளவிலேயே நன்றாக உணருவதாக நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். 48 .சில நேரங்களில் தேவனுடைய வழிகள் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவர் எப்படியாக காரியங்களைச் செய்கிறார். இப்பொழுது, நாம் உதாரணத்திற்காக சிம்சோன் என்ற பெயருடைய ஒரு மனிதன் அங்கே இருந்ததை எடுத்துக் கொள்ளப் போகிறோம். தேவன் அவனுடன் இடைப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பொழுது, அனேக ஜனங்கள்... என்று எண்ண முயற்சிக்கிறார்கள். உளவியல் அறிஞர்கள் களஞ்சியத்தின் கதவுகளைப் போன்று தோற்றம் அளிக்கும் தோள்களுடன் சிம்சோனின் படத்தை வரைவதை நான் கண்டிருக்கிறேன். ஏன், இங்கிருந்து அந்த ஆர்கன் இசைக்கருவி வரையான அகன்ற தோள்களுடன் கூடிய ஒரு மனிதன் ஒரு சிங்கத்தைக் சொல்வதை காண்பது எனக்கு விசித்திரமாக இருக்காது. ஏன், நிச்சயமாக அவன் ஒரு சிங்கத்தை கொன்றிருக்கின்றான். அவன் எப்படியாக பட்டணத்தின் கதவுகளை பெயர்த்துக் கொண்டு நடந்து சென்றான், ஏன் நிச்சயமாக, அது எளிதானது. 49. ஆனால் சிம்சோனைக் குறித்த ஒரு விசித்திரமான காரியம் உள்ளது. அவனைக் குறித்த என்னுடைய கருத்தை நீங்கள் அறிய விரும்புவீர்களானால், அவன் ஒரு சிறு, சுருள் கருளான தலைமுடியையுடைய குள்ளனாகவும், ஐந்து-ஏழு ஜடை முடிகள் அவனுடைய முகத்தை சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்கிறவனாயும், அம்மாவின் சிறு பையனாகவும், ஒரு சிறு பெண் தன்மை கொண்ட சிறுவனாகவும் (sissy) தெருவில் வந்து கொண்டிருந்தான். ஒரு சிங்கத்தை கொல்லும் அதைப்போன்ற ஒரு மனிதனை அவர்கள் கண்ட போது, அது தான் அவர்களை பயமுறுத்தியது. ஆனால் அவர்கள் இம்மனிதன் அங்கே வருவதை கண்டபோது... ஏன், அவன் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் வருவது வரை அவன் அப்படியே அவ்வளவு உதவியற்றவனாகவே இருந்தான். கர்த்தருடைய ஆவி அவன் மேல் வந்த போதோ, என்னே, அந்த சிறு தோள்கள் நேராகி, அவன் அந்த சிங்கத்தைப் பிடித்து அதைக் கொன்று போட்டான். கர்த்தருடைய ஆவி அவன் மேல் வந்த போது, அவன் அவ்வாறு செய்தான். 50. ஒரு நாளில் பெலிஸ்தியர்களின் கையினின்று இஸ்ரவேலரை விடுவிக்க சிம்சோன் தேவனுடைய அருளப்பட்ட பாதையாக இருந்தான். ஒரு நாள் அவன் ஒரு-ஒரு பெரிய பெலிஸ்திய படையால் இக்கட்டுக்கு உள்ளானான்; ஆயிரம் பெலிஸ்தியர்கள் அவன் மேல் (வந்தனர்), அவனிடம் எதுவும் இல்லாதிருந்தது. அவனிடம் என்ன இருந்தது? அவன் ஒரு ஈட்டியை வைத்திருந்தாலும், அதைக்கொண்டு அவனால் சண்டை இடமுடியாது. எனவே அவன் சுற்றுமுற்றும் நோக்கினான். அங்கே ஒரு கழுதையின் தாடை எலும்பு இருந்தது. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், தேவனுடைய ஆவி அவன் மேல் வருகிறார், அவன் கழுதையின் அந்த தாடை எலும்பை எடுத்து, ஆயிரம் பெலிஸ்தியர்களைக் கொன்று போட்டான். அல்லேலூயா.... 51. இன்றிரவு உங்களுக்கருகில் கழுதையின் ஒரு தாடை எலும்பை காட்டிலும் அதிகமானது கிடக்கிறது. அது சரியே. நாம் எழுந்து அதைக் குறித்து ஏதோவொன்றைச் செய்வோம். நாம் இந்தப் பழைய கட்டில்களையும், தூக்கு படுக்கைகளையும் (stretchers), சக்கர நாற்காலிகளையும், கக்கதண்டங்களையும் (crutches) விட்டு விட்டு, ‘அது பிசாசை சேர்ந்தது. நான் அதனுடன் இனிமேல் எதையும் செய்ய மாட்டேன்’ என்று கூறுவோம். அது சரியே. இயேசு கிறிஸ்துவின் வார்த்தை தான் சரியென்று நான் உரிமை கோருகிறேன். ஜீவிக்க அல்லது மரிக்க, நான் அதனுடன் இருக்கிறேன். அது சரியே. அவருடன் வரிசையில் ஒன்றாக சேர்ந்து போ. உங்களுடைய தேவன் கொடுத்திருக்கும் சிலாக்கியங்களை உரிமை கோருங்கள். பிசாசுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவனுக்கு சட்ட ரீதியாக எந்த விசுவாசியின் மீதும் ஒரு அதிகாரமும் கிடையாது. கல்வாரியில் அவனுடைய உடைமைகளை அவன் இழந்து, அவை, அவனிடமிருந்து பறிக்கப்பட்டன. இயேசு கிறிஸ்து அவன் கொண்டிருந்த யாவற்றையும் கொள்ளையிட்டு (robbed), கீழே தம்முடைய பெயரால் கையெழுத்திடப்பட்ட ஒரு காசோலை புத்தகத்தை ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுக்கிறார். ‘என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் செய்வேன்’ உங்களுடைய தனிப்பட்ட சொத்து. எந்த காசோலையிலும் உங்களுடைய பெயரை கையொப்பம் இடவோ அல்லது அதை நிரப்பவோ (fill) நீங்கள் துணிவு கொள்ளுங்கள். ‘கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனக்கு சுகம் தேவை.’ இயேசுவின் நாமத்தை உபயோகப்படுத்தி எழும்பி நில்லுங்கள். அல்லேலூயா. பரலோகத்தின் மொத்த வங்கியும் அது நியாயமானதென தெரிவிக்கும். அது சரியே. நிச்சயமாக. ‘ஓ, ஆனால் சகோதரன் பிரான்ஹாமே, நாம் அவ்வளவு மகத்தான மருத்துவமனைகளைக் பெற்றிருக்கிறோம்.’ அவர்கள் உங்களுக்காக என்ன செய்துள்ளனர்? மருத்துவமனைகள் சரி தான்; மருத்துவர்களும் சரிதான், ஆனால் உங்களைக் குறித்து என்ன? தேவன் ஒரு விசுவாசியான உங்களுக்கு அந்த காசோலை புத்தகத்தைக் கொடுத்து விட்டார்; அதில் கையொப்பமிடுங்கள். 52. இப்பொழுது, நியாயாதிபதிகளின் காலத்தின் போது, சம்கார் (Shamgar) என்னும் பேருள்ள ஒரு வாலிப மனிதன் இருந்தான். அவன் ஒரு நியாயாதிபதியாக கூட இருக்கவில்லை, அப்படியே ஒரு வாலிபன்... சம்காரைக்குறித்து வேதாகமத்தில் (மிக அதிகமாக சொல்லப்பட்டு இருக்கவில்லை), ஒரு சிறு இடத்தில் ஏறக்குறைய இரண்டு வசனங்களில் தான் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவேளை அவனைக் குறித்து ஒருபோதும் வாசித்திருக்கவே மாட்டீர்கள். அவன் அப்படியே ஒரு வாலிப இஸ்ரவேலனாக இருந்தான். அந்த நாட்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய சொந்த வழியில் தான் நினைத்தபடி காரியங்களை செய்தான். அவனுக்கு எந்த ஒத்துழைப்பும் இருக்கவில்லை, ஒருவன் மெதொடிஸ்டாக இருந்தான், மற்றொருவன் ஒரு பாப்டிஸ்டாகவும், மற்றொருவன் ஒரு பிரஸ்பிட்டேரியனாகவும், மற்றொருவன் ஒரு ஒருத்துவக்காரனாகவும், மற்றவன் இருத்துவக்காரனாகவும், மற்றொருவன் திரித்துவக்காரனாகவும்... இருந்தனர். ஓ, என்னே, எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை, அவர்களால் ஒன்றாக சேர முடியவில்லை. எனவே ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சொந்த பார்வைக்கு நலமானதாக அவன் எண்ணுவதை செய்தனர். பெலிஸ்தியர் வந்து அவர்களைப் பிடிக்க அது தான் காரணம். இப்பொழுது, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகிய நீங்கள் உங்களுடைய வித்தியாச பேதங்களை மறந்து, கட்டாயமாக கிறிஸ்தவர்களாக ஒன்றாக கூடி வருவார்களானால், நம்மால் எதையாவது செய்ய முடியும். இயேசு கிறிஸ்துவாகிய நம்முடைய இராஜா நம்மிடத்தில் வருவார். 53.ஆனால் அங்கே, இந்த வாலிபமான சம்காருக்கு இராஜா கிடையாது. அவன் யார்? அவன் வெறுமனே ஒரு சாதாரண மக்கள் அங்கத்தினன் தான். நல்லது, அவன்... இஸ்ரவேலர் கடினமாக உழைத்து விளைச்சலை பெருக்கியிருந்தனர். நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், ஏறக்குறைய விளைச்சல் முதிர்ச்சியடையும் சமயத்தில், அவர்கள் அறுவடை செய்த கோதுமை எல்லாவற்றையும், மற்றும் ஒவ்வொன்றையும் அவர்கள் வைத்திருந்தனர், பெலிஸ்தியர்கள் சூழ்ந்து வந்து, அவர்கள் வைத்திருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, திரும்பி போய் விடுவர். பிசாசும் அந்தவிதமாகத்தான் அதைச் செய்கிறான். நீங்கள் உங்களுடைய சபையை ஒரு இடத்தில் நிலைநிறுத்துகிற; ஏறக்குறைய அச்சமயத்தில், நீங்கள், ‘நல்லது இப்பொழுது, நான் அப்படியே அருமையாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறேன். நாம்-நாம் உண்மையாகவே பழைய காலத்து எழுப்புதலைக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறுகிறீர்கள். பிசாசு சில பழைய பயித்தியக்காரத்தனமான கருத்தில் சறுக்கி விழ வைப்பான், ‘உங்களுக்குத் தெரியுமா? ஜனங்களாகிய அவர்கள் அப்படியே ஏறக்குறைய பயித்தியமாயுள்ளனர் (crazy)’ என்று. அந்த எல்லா காரியங்களும், ‘அங்கே அதில் அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது, ஏனெனில் அதைப்போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லையென்று மருத்துவர் இன்னார் இன்னார் கூறினார்’ என்று. 54. இப்பொழுது இங்கு இதே அக்கம்பக்கத்திலிருக்கும் ஒரு மனிதர், ‘நல்லது இப்பொழுது, தெய்வீக சுகமாகுதலை நாங்கள் விசுவாசிக்கிறோம். நிச்சயமாக, அவ்விதம் ஒரு மனிதன் வருவானானால். ஆனால் கூட்டம் முடிந்த பிறகு, சுகமடைந்த யாரோ ஒருவரை நான் பார்க்கட்டும், அங்கே ஒருவரும் இருக்க மாட்டார்கள்’ என்றார். அந்த நபர் பொய்யுரைக்கிறார். அவர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிப்பதில்லை. இல்லை, ஐயா, தெய்வீக சுகமளித்தலை அவரால் விசுவாசிக்க முடியவில்லை. சகோதரனே, நீங்கள் அதைக் கூறினாலும் கூறாவிட்டாலும் அது அவ்வாறு தான். தேவன் அவ்விதமாக கூறியிருக்கிறார். நான் இன்றிரவு பத்தாயிரம் ஜனங்களுக்கு ஜெபித்து, காலையில் அந்த பத்தாயிரம் பேர்களும் மரித்தாலும், நாளை இரவு அதே விசுவாசத்துடன் நான் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். இன்றிரவு ஆயிரம் ஜனங்களுக்கு பிரசங்கம் செய்து, அவர்கள் அனைவரும் மரித்தால்; உயிர்த்தெழுதலுக்கு இப்பொழுதிலிருந்து இன்னும் ஐம்பது வருடங்கள் இருந்து, ‘சகோதரன் பிரன்ஹாமே, அவரிடத் தில் விசுவாசம் வைக்க வேண்டாம். இப்பொழுது நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் - நீங்கள் வேறு எதையோ செய்யுங்கள். கிறிஸ்துவைப் போல அங்கே அப்படி ஒரு காரியம் இல்லை அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது’ என்று என்னிடம் வந்து கூறுவார்களானால், நான் அப்பொழுதும் கிறிஸ்துவுடன் என்னுடைய தெரிந்து கொள்ளுதலை எடுத்துக் கொள்வேன். அவரை விசுவாசித்து கொண்டே நான் மரிக்கட்டும். அது சரியே. ஜனங்கள் என்ன கூறுகிறார்கள் என்பதில் காரியமில்லை, தேவன் என்ன சொல்லி இருக்கிறார் என்பது தான் காரியம். அது சரியே. தேவன் அவ்வாறு கூறி இருக்கிறார். நான் தேவனை விசுவாசிக்கிறேன். 55. ஓ, பெலிஸ்தியர்கள்; சம்காரிடமிருந்து எடுத்துச் செல்வதற்கு முன்புள்ள அந்த வருடத்தில், இந்த சிறிய வயதான சம்கார், அவனுடைய கோதுமையினால் அவனுடைய இடம் நிறைந்திருந்தது. மேலும் அவனுக்கு ஆகாரமெல்லாம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அவனை என்னால் காண முடிகிறது, அவனுடைய பரிதாபமான சிறிய வயது மனைவி அங்கே வெளியில், அவளுடைய ஆடையிலிருந்த கைபாகங்கள் எல்லாம் அகன்றும், அவனுடைய சிறிய குழந்தைகள் மிகவும் இளைத்துப் போய் அங்கே நின்று கொண்டும், அவர்கள் முகங்கள் முழுவதுமாய் தொய்ந்து போய், பிரேதம் கெட்டு விடாதபடி தைலமிடுபவர்களான இந்த வேத சாஸ்திர சவக்குழியால் உதைக்கவும் சுற்றிலும் அடிக்கவும் செய்கிற, ஏறக்குறைய இப்பொழுது இருக்கின்ற இந்த சிறிய சபைகளில் சிலவற்றைப் போல (அது உண்மை), அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. 56. அது ஒரு சவக்கிடங்கை என் சிந்தையில் எழச் செய்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஒரு மரித்துப் போன, அதாவது ஏற்கனவே மரித்துப் போன மனிதனை எடுத்து, அவன் தொடர்ந்து மரித்தவனாய் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நிறைய திரவத்தை அவனுக்குள் செலுத்துகின்றனர். அந்தவிதமாகத்தான் அவர்கள் செய்கின்றனர்; அவனைத்தொடர்ந்து மரித்தவனாய் இருக்க செய்கின்றனர். ‘அந்தக் கருத்தை நம்ப வேண்டாம். அவர்களில் ஒருவருடைய கூட்டங்களுக்கும் செல்ல வேண்டாம். அது ஒரு கூட்ட மத வைராக்கியமுடைய கூட்டமே அல்லாமல் வேறொன்றும் அல்ல.’ ஓ, இரக்கம், நீ அதை எப்படி விசுவாசிக்க முடியும்? 57. பிறகு நான் கோதுமை வைத்துள்ள இந்த மகத்தான பெரிய கொள்கலனை (bin) காண முடிகிறது. அவன், ‘நல்லது இப்பொழுது தேனே’ என்றான். சம்கார், ‘இப்பொழுது, இனிய இருதயமே, நாமும் பிள்ளைகளும்... இப்பொழுது நாம் அறுவடை செய்துள்ளோம், ஒருவேளை நாம் அவர்களுக்கு கொஞ்சம் போஷிக்க முடியும்’ என்று கூறுவதை நான் கேட்கிறேன். நாம் வெகு விரைவில் ஒரு எழுப்புதலை உடையவர்களாக இருக்கப் போகிறோம். மேலும்-மேலும் ஒருக்கால் இந்த ஜனங்களில் சிலர் ஒரு சிறியதை உடையவர்களாக இருப்பார்கள், எவ்விதமாக மேய்ப்பர் தனது சபையை அந்த இடத்திற்கு ஆயத்தம் செய்வார் என உங்களுக்குத் தெரியும்... நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், வெளிறிப் போய் தோற்றமளித்த தன்னுடைய மனைவியிடம் சம்கார் பேசிக் கொண்டே நின்று கொண்டிருந்தான். அவனுடைய கன்னங்களில் கண்ணீர் பாய்வதை என்னால் காண முடிந்தது, பரிதாபமான சிறு மனைவி, அவள் பட்டினியால் மரித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய சிறு பிள்ளைகளைப் பார்க்கின்றான், அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு பசியாயிருந்தனர், உடைகளு மில்லை... பெரிய பழைய கொழுப்பான உருளைக் கிழங்கைச் சேதப்படுத்தும் பூச்சியைப்போன்ற பெலிஸ்தியர்கள் சரியாக உள்ளே வந்து அவன் அதை எவ்வளவு விரைவாக செய்ய முடிந்ததோ, அவ்வளவு விரைவாக அதை அவர்கள் எடுத்துக் கொண்டு வெளியே போய் விடுவர். மேலும் அங்கே... அந்தவிதமாகத்தான் பிசாசும் அதைச் செய்வான்: உங்களிடமிருந்து அதை வெட்டி அப்புறப்படுத்தி, நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய சகலத்தையும் எடுத்து, உங்களை சூழ வந்து நீங்கள் பெற்றிருக்கிற ஒவ்வொரு சிறிய அனுபவத்தையும் திருடி, சகலத்தையும் உங்களை விட்டு புறம்பாக்கி, அப்படி ஒரு காரியமே இல்லை என உங்களிடம் கூறி, ஆற்றங்கரையில் ஏதோவொரு பழைய காக்கை கண்ணி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுவான். அதுதான் உண்மை என்று உங்களுக்குத் தெரியும். வரிகளுக்கு இடையில் நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், நான் வரிகளுக்கு வெளியே இருப்பதை உங்களுக்குக் கூறுகிறேன். கவனியுங்கள். சரி, ஆனால் அது தான் – அது தான் உண்மை. 58. இப்பொழுது, அவன் தன்னுடைய கோதுமையுடனும், ஒவ்வொன்றுடனும் அங்கேயிருந்து, ஏறக்குறைய அச்சமயத்தில் அவன் ஏதோவொன்று வந்து கொண்டிருப்பதைக் கேட்டான். (சகோதரன் பிரன்ஹாம் விளக்குகிறார் - ஆசிரியர்.) இங்கே பெலிஸ்தியர்களில் அறுநூறு பேர் பாதையில் வந்து கொண்டிருந்தனர், அவர்கள் வருகின்றனர். ஓ, என்னே. ‘நல்லது, அங்கே நாம் போவோம்; இதோ அது மீண்டும் இருக்கிறது. வருடம் முழுவதும் நான் கடுமையாக உழைத்தேன், நான் பெற்றிருக்கிற ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்வதற்காக பெலிஸ்தியர்கள் இதோ வருகிறார்கள்.’ அவனுடைய மனைவி அழத்தொடங்கினாள், சிறு பிள்ளைகள் ஒருவர் மற்றவரை பிடித்துக் கொண்டிருந்தனர். சம்கார் ஜன்னலை விலக்கி வெளியே நோக்கிப் பார்த்தான். அங்கே அவர்களில் அறுநூறு பேர் முழுவதும் ஆயுதந்தரித்தவர்களாய், பயிற்றுவிக்கப்பட்டவர்களாய் (வேத சாஸ்திரத்தில்) - அது எதுவாக இருந்தாலும் பெலிஸ்தியர்கள் அங்கே இருந்தனர். அவர்களுடைய போர்கவசங்கள் பளிச்சிட, நீங்கள் அறிவீர்கள், அவர்களுடைய கரங்களில் ஈட்டிகளை கொண்டவர்களாய், அவர்கள் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். சகோதரனே, அதை எவ்வாறு செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் யுத்த வீரர்களாய் இருந்தார்கள் என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். வாலிபனாகிய சம்கார் அங்கே நின்று கொண்டு, ‘நல்லது, நான் யுத்த வீரனல்ல; எப்படி சண்டையிடுவது என்று எனக்குத் தெரியாது. அதைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ஆனால்...’ என்று எண்ணினான். 59. பரிசுத்த ஜனங்களாகிய உங்களிடம் தான், அவனுடைய நேர்மையான மனக்கொதிப்பு உச்சத்தை அடைந்தது. உங்களுக்கும் கூட இன்றிரவு அதைப் போன்ற மனக்கொதிப்பு உள்ளதென்று நான் நம்புகிறேன். தீமைக்கெதிராக எழும்புங்கள், அந்தப் பழைய சக்கர நாற்காலிக்கு எதிராக எழும்புங்கள், கக்கதண்டங்களாகிய அவைகளுக்கு எதிராக எழும்புங்கள். என்ன தான் பிசாசு அவைகளின் மேல் சிக்கிக் கொள்ள வைத்தாலும், அவைகளை உடையவர்களாக இருக்க வேண்டாம். இல்லை, ஐயா. அவைகள் உங்களைச் சேர்ந்தவையல்ல. கிறிஸ்து, ‘இந்த வருஷங்கள் எல்லாம் பிசாசினால் கட்டப்பட்டிருந்த இந்த குமாரத்தியை ஓய்வு நாளில் அவிழ்த்துவிட வேண்டியதில்லையா?’ என்றார். ஆனால் அது உங்களைப் பொறுத்ததாய் இருக்கப் போகிறது. 60. சம்கார் அங்கே நின்றுகொண்டு, அவன் சுற்றும் முற்றும் நோக்கினான். அவன் ஒரு யுத்த வீரனல்ல; இப்பொழுது அவன் (வேறொரு) இடத்திற்குச் சென்று, சண்டை செய்யும் படியான பயிற்சி செய்ய நேரமில்லை. பட்டயங்களுடனும் மற்றும் காரியங்களுடனும் உள்ள இந்த மனிதர்களுடன் எப்படி சண்டையிடுவது எவ்வாறு போரிடுவது? அதை செய்ய அவனுக்கு நேரமில்லை. போய் இந்த எல்லா காரியங்களையும் கற்றுக் கொள்ள (study) உங்களுக்கு நேரமில்லை, ஒரு – ஒரு... ஐ எடுத்துக் கொள்ள நேரமில்லை. 61.அதைக் குறித்ததான பிரச்சனையே அது தான், ஒரு போதகர் எப்படி... என்று கல்வி கற்க (learn) தொடங்கும் போது. அவன் ஊழியத்திற்கான அழைப்புடன் ஆரம்பிக்கிறான். அவர்கள் அவனை வேதாகமக் கல்லூரிக்கு கொண்டு சென்று, அவனை சுமார் இருபது வருடங்கள் அங்கே பிடித்து வைத்து, அவனுக்குள் தேவன் வைத்திருந்த எல்லாவற்றையும் அவனை விட்டு வெளியே எடுத்து விடுவார்கள். அது சரியே. பிறகு அவனை திரும்பவும் கொண்டு வருகிறார்கள். அவன் அப்படியே அதையே அதிகமாக அறிந்துள்ளான், என்னே, அதை யாரும் அவனிடம் கூற முடியாது. அந்தவிதமாகத்தான் அது போகிறது. அவன் திரும்பவும் வெளியே வரும் போது, அவன் உள்ளே போன போது இருந்ததை விட அவன் மோசமானவனாக இருக்கிறான். தேவன் உங்களை இரக்கத்தாலும் வல்லமையாலும் அழைக்கிறார் என்றால், அதனுடன் தரித்திருங்கள். அது தான் சரியானது. 62. சமீபத்தில் இங்கிருந்த ஒரு சிறிய ஸ்திரீயைப் பற்றி என் சிந்தையில் எனக்கு வருகிறது. அவள் ஒரு சபையைச் சேர்ந்தவள். அவள் துணிகளைச் சலவை செய்தும் மற்றும் ஒவ்வொன் றையும் செய்தாள். அவள் தன் மகன் தூரத்தில் சென்று ஒரு பிரசங்கியாக வேண்டும் என்று விரும்பினாள். அவனுக்கு தன் இருதயத்தில் ஒரு சிறிய அழைப்பு இருந்தது, எனவே அவள் அவனை தூரத்தில் இருக்கும் இந்தப் பெரிய பண்டைகால பள்ளி ஒன்றிற்கு அனுப்பினாள். மேலும் நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், அவன் மூன்று அல்லது நான்கு வருடங்கள், தூரத்தில் இருந்த போது, அவனுடைய சிறிய தாய் நோயுற்றாள். அவள் மரிக்கப்போகிறாள், அவன் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்கள் அவனுக்கு தகவல் தெரிவித்தனர். 63. நல்லது, இது நிகழ்ந்து கொண்டிருந்த சமயம், ஒரு முழு சுவிசேஷ சபையின் ஒரு மிஷன் ஊழியத்தில், அங்கே ஒரு சிறிய பெண் வசித்துக் கொண்டிருந்தாள். எனவே அவள் சென்று இந்த ஸ்திரீயிடம், "தெய்வீக சுகத்தை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா?’ என்று கேட்டாள். "நல்லது, எனக்குத் தெரியாது. அது வேதத்தில் இருக்கிறதா?’ என்று அவள் கூறினாள். "ஆம். அது வேதத்தில் இருக்கிறது’ என்று கூறினாள். "எங்களுடைய மேய்ப்பர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறவர். நல்லது, நான் அவரை அழைத்து வந்து உங்களுக்காக ஜெபிக்க லாமா?’ என்று கூறினாள். "ஏன், ஆம், வேதத்தில் அது இருக்குமானால்’ என்று கூறினாள். எனவே மேய்ப்பர் வந்து, "பெண்மணியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்றார். "இப்பொழுது, நான் அப்படியே... அந்த சபையிலிருந்து உங்களை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை; தேவன் என்ன உரைத்துள்ளார் என்பதை நான் அப்படியே உங்களுக்கு வாசிக்க விரும்புகிறேன்’ என்று அவர் கூறினார். ஆகவே அவர், ‘இங்கே இயேசு கிறிஸ்துவிலிருந்து புறப்பட்ட வார்த்தை, ‘உலக முழுவதும் சென்று சுவிசேஷத்தை பிரசங் கியுங்கள்; விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட் சிக்கப்படுவான்; விசுவாசிக்கின்றவர்களை இந்த அடையாளங் கள் பின்தொடரும்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்து வார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவானவைகளை குடிப்பார்கள்; வியாதியஸ்தர்கள் மேல் கரங்களை வைத்தால், அவர்கள் சுகமடைவார்கள்’ என்று இருக்கிறது’ என்றார். "ஏன் அது வேதத்தில் இருக்கிறதா’ என்று கூறினாள். "ஆம்’ என்று கூறினார். "நல்லது அப்படியானால், நீங்கள் என்னை அபிஷேகித்து எனக்காக ஜெபியுங்கள்’ என்று கூறினாள். அவர்கள் செய்தார்கள். கர்த்தர் அவளை சுகமாக்கினார். 64. நல்லது, அது அவ்வாறு சம்பவித்தது. சிறிது கழிந்து அந்தப் பையன் வீட்டிற்கு வந்த பிறகு, அவன் களிகூர்ந்து கொண்டு, "ஓ, அம்மா’ என்று கூறினான். அந்த நிம்மோனியாவால் நீங்கள் மிகவுமாக வியாதிப்பட்டு உள்ளீர்கள் என்றும், அதோடு கூட நான் உடனே வீட்டிற்கு வர வேண்டும் என்று எனக்கு எழுதிக் கூறியிருந்தீர்கள்’ என்றான். ஆனால், "திடீரென்று நீங்கள் சுகமாகி விட்டீர்கள் - நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று எழுதி இருந்தீர்கள்’ என்று கூறினான். "என்ன ஆயிற்று?’ என்றான். "ஓ, தேனே, இங்கே கீழே உள்ள முழு சுவிசேஷ மிஷன் சபையாருடைய (Full Gospel Mission), (பரிசுத்த உருளையர்கள்) மேய்ப்பர் வந்து எண்ணெயினால் என்னை அபிஷேகித்து, வேதாகமத்திலிருந்து மாற்கு 16-வது அதிகாரத்திலிருந்து வாசித்து நாம் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் எனக்காக ஜெபித்தார், கர்த்தர் என்னை சுகமாக்கினார்’ என்று கூறினாள். "தேனே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்றாள். அவன், "அம்மா, பெரிய யோசனை தான். அந்த ஜனங்களோடா நீங்கள்? ஏன், அம்மா, அந்த வேதாகம கல்லூரியில்... அந்த மனிதர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள்; அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். மாற்கு 16-வது அதிகாரம், 9 முதல் (பரிசுத்த ஆவியினால்) ஏவப்பட்டு (எழுதப்படவில்லை) என்று அந்த வேதாகம கல்லூரியில் நாங்கள் அறிந்து கொண்டோம்’ என அவன் கூறினான். அவள், "அல்லேலூயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா’ என்று கூறினாள். "அம்மா, முட்டாள்தனமானது’ என்று அவன் கூறினான். "நீ என்ன கூறுகிறாய்? தேனே, அவர் எனக்கு வாசித்த மாற்கு 16-ம் அதிகாரம் 9-ம் வசனத்திலிருந்து, மாற்கு 16-ம் அதிகாரம் ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை என்றா கூறுகிறாய்?’ என்று கேட்டாள். ‘அவை ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை’ என்றான். அவள், "மகிமை’ என்றாள். "ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்படாத (uninspired) வார்த்தையால் தேவன் என்னை சுகமாக்க கூடுமானால், உண்மையாகவே ஆவியினால் ஏவப்பட்டவைகளைக் கொண்டு அவர் என்ன செய்வார்’ என்று கூறினாள். ஆமென். 65. அது உண்மை. மாற்கு 11:24-ஐயும், மற்றும் அதைக் குறித்த அனைத்தையும் கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய்? "என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் நான் அதைச் செய்வேன்.’ ஆம், ஐயா. "ஆவியினால் ஏவப்படாத வார்த்தையைக் கொண்டு அவர் என்னை சுகமாக்கக் கூடுமானால், உண்மையாகவே ஆவியினால் ஏவப்பட்ட வார்த்தையைக் கொண்டு அவர் என்ன செய்வார்?’ அவர் உண்மையாகவே அவ்விதமாக காரியங்களை செய்யக்கூடும். அது சரியாக இருக்கிறது. 66. நான் இப்பொழுது சம்காரை காண முடிகிறது. (நாம் துரிதப்படுவோம்; ஜெப வரிசைக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.) சம்கார் அங்கே நின்று கொண்டு வெளியே நோக்கிப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. ஓ, என்னே. அவனுடைய நேர்மையான மனக்கொதிப்பு அவன் மேல் வரத் தொடங்கியது. அவன் தனக்குள்ளாகவே ஒரு சிறு சண்டை இட்டான். அதை தான் நீங்களும் பெற்றாக வேண்டும், சிறு சண்டை. ஒரு சிறு முதுகெலும்பு. அந்த குருத்தெலும்பை (wishbone) வெளியே எறிந்து விட்டு ஒரு முதுகெலும்பை (backbone) உள்ளே வையுங்கள். அது தான் சரியானது. 67. பண்டைய பட்டி-ராபின்சன் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன், தம்முடைய சாட்சியில், ‘கர்த்தாவே, மரத்துண்டை அறுக்கும் ஒரு ரம்பத்தைப் போன்ற முதுகெலும்பை எனக்கு தாரும். என் ஆத்துமாவில் சாய்வான இரு பக்கங்களும் இணையும் முனையில் மிகுதியான அறிவைத் தாரும், என் வாயில் ஒரு பல்லை நான் பெற்றிருக்கும் வரையிலும் நான் பிசாசை கடிப்பேனாக, அதன் பிறகு நான் மரிக்கும் மட்டுமாக பல்லில்லாத ஈறுகளினால் அவனை நான் சவைப்பேனாக (gum)’ என்று கூறினார். அது சரியே. சகோதரனே, அதை அவ்விதமாகத்தான் செய்ய வேண்டும். உங்களைப் பற்றி கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொள்ளுங்கள். எழுந்து நின்று தேவன் உங்களுக்கு அளித்துள்ள சிலாக்கியங்களை உரிமைக்கோருங்கள். தேவன் உங்களுக்கு சுகத்தை வாக்களித்துள்ளார்; அது உங்களுடையது. அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் மிகவும் பெலவீனராயும் ஜெல்லி மீனைப் போன்றும் இருந்தால், நீங்கள் மரித்து விடுவீர்கள். ‘அதுவே சரியானது’ என்று நீங்கள் எழுந்து கூறுவது தான் நீங்கள் செய்ய விரும்ப வேண்டிய காரியமாகும், பிறகு (தொடர்ந்து) நில்லுங்கள். அல்லேலூயா. 68. தேவன் என்னுடைய ஆத்துமாவை இரட்சித்திருப்பாரானால், நான் அதை விசுவாசத்தின் மூலம் எடுத்து, அவர் செய்து விட்டார் என்று விசுவாசித்தால், அதை உறுதிப்படுத்தும்படி பரிசுத்த ஆவியின் ஞான ஸ்நானத்தை தேவன் எனக்கு கொடுப்பார். நான் நின்று அவரை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டால் - நான் ஒரு சில மணி நேரங்கள் தான் உயிர் வாழ்வேன் என்று மேயோ சகோதரர்கள் என்னிடம் கூறின போது, நான் அவரை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொண்டேன். நான் அதனுடைய உறுதிப்பாட்டை இன்றிரவு பெற்றுள்ளேன். அல்லேலூயா. ஆம், ஐயா. அவரை அவருடைய வார்த்தையில் எடுத்து, அதை விசுவாசியுங்கள். 69. வாலிபனாகிய சம்கார் தன்னுடைய நேர்மையான மனக் கொதிப்பினால் எழுந்தான். அவன் சுற்றும் முற்றும் நோக்கினான்; அவனால் எதையும் காண முடியவில்லை. அவன் ஒரு யுத்த வீரனல்ல. ஆனால் அவனுடைய கரத்தில் இருந்தது என்ன? அவனால் ஒரு காளையின் தாற்றுக்கோலைத் தவிர வேறு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. காளையின் தாற்றுக்கோல் (ox-goad) என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது பெரிய திமில் (hump) போன்ற வடிவமைப்பை உடைய ஒரு முதிர்ந்த மரக்கொம்பு. அவர்கள் கலப்பையிலுள்ள மண்ணைத் தள்ளி நீக்குவதற்கும், சிலவேளைகளில் கால்நடைகளை அதைக் கொண்டு குத்தி வாசலினூடாக செல்ல பயன்படுத்துவார்கள். அவனிடம் இருந்ததெல்லாம் அவ்வளவு தான். ஆனால், சகோதரனே, பெலிஸ்தியர்கள் வருவதைக் குறித்து அவன் சோர்ந்து போய் களைத்துப்போன நிலையில் இருந்தான், அவன் கிடைத்ததை எடுத்துக் கொண்டான். 70. ஓ, என்னே, அம்மா, நீங்கள் களைப்படைந்திருக்கவில்லையா? சகோதரியே, நீயும் அவ்வாறில்லையா? பிசாசு என்னிடம், ‘நான் நடக்க முடியாது, நான் இதைச் செய்ய முடியாது, என்னால் அதைச் செய்ய முடியாது’ என்று கூறிக் கொண்டிருப்பதைக் குறித்து சோர்ந்து போய் களைப்படைந்துள்ளீர்கள். தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக, ‘விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்.’ அது தான் அது. 71. சம்கார், ‘நான் அதைக்குறித்து சோர்ந்து போய் களைப்படைந்துள்ளேன். நான் ஒரு யுத்த வீரனல்ல, நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் எனக்கு எதிராக உள்ளன’ என்றான். நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு அதிகமாக உங்களுக்கு எதிராக இருந்தாலும் காரியமில்லை, நீங்கள் அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வீர்களானால், தேவன் உங்களுக்காக இருக்கிறார். அவன், ‘எனக்கு தெரிந்த ஒரு காரியம் உள்ளது: நான் விருத்தசேதனம் பண்ணப்பட்டவன். நான் ஒரு பெலிஸ்தியன்... நான்-நான் கூற விரும்புவது, நான் ஒரு இஸ்ரவேலன். அது விருத்தசேதனம் இல்லாத ஒரு பெலிஸ்தியன். நான் சரியாயிருக்கிறேன் என்று நான் அறிவேன்’ என்றான். ‘நான் இன்றிரவு தேவனுடைய ஒரு பிள்ளையாக இருக்கிறேன். வியாதிகள் பிசாசிடமிருந்து வருகின்றன என்பதை நான் அறிவேன், தேவன் எனக்கு ஜெயத்தை வாக்குப் பண்ணியுள்ளார் என்பதை நான் அறிவேன்.’ வியூ. சகோதரனே, நான் சரியாக இப்பொழுது உணர்ந்தது போல நீங்களும் உணர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆம், ஐயா, நான் மிக மிக நன்றாக உணருகிறேன். பாருங்கள். இது எனக்கு தேவனால் கொடுக்கப்பட்ட சிலாக்கியம். ஆம், ஐயா. நான் அதை பிரசங்கித்து, அதைக் குறித்து சந்தோஷத்தை அனுபவிக்கும் அமெரிக்காவிலே நான் இன்றிரவு இன்னும் இருக்கிறேன். அதற்காக கர்த்தருக்கு நன்றி. 72. அவனுடைய நீதியான மனக்கொதிப்பு தீவிரமடைந்து; அவன் அந்த காளையின் தாற்றுக்கோலை எடுத்து, ஜன்னல் வழியாக குதித்து, அறு நூறு பெலிஸ்தியர்களையும் போருக்கு அழைத்து (challenged) அங்கே நின்று அவர்களுடைய தலைகளை உடைத்துப் போட்டான். சரியா. ஏன்? அவன் ஒரு யுத்த வீரனல்ல, இல்லவே இல்லை, ஆனால் அவன் ஒரு இஸ்ரவேலனாக இருந்தான்; அவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டவனாக இருந்தான். நீங்கள் இன்றிரவு பரிசுத்த ஆவியால் விருத்தசேதனம் பண்ணப்பட்டு இருந்தால், நீங்கள் ஒரு யுத்த வீரனாக இருக்க பயிற்சி பெறும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக, உங்களுடைய தேவன் கொடுத்திருக்கும் சிலாக்கியங்களை உரிமை கோருங்கள், அவர்களுடைய தலைகளை உடைத்துப் போடுங்கள். ஆமென். அது தான் சரியானது. ‘சாத்தானே, வழியை விட்டு விலகிப் போ’ என்று கூறுங்கள். அவனை எட்டி உதைத்து வழியை விட்டு விலக்குங்கள். ‘நான் இப்பொழுது கைப்பற்றிக் கொண்டிருக்கும் ஒருவனாக இருக்கிறேன். இயேசுவின் நாமத்தில் நான் வருகிறேன்.’ அவன் சிதறி ஓடுவதைக் கவனியுங்கள். சகோதரனே, நீங்கள் அவன் மீது அந்த விசுவாசத்தை உபயோகப்படுத்தும் போது, அவன் பின் வாங்கிப் போய்விடுவான். 73. சமீபத்தில், ஒருவர் தாம் கண்ட ஒரு சொப்பனத்தை என்னிடம் கூறினார். ‘அவர் ஒரு பிசாசைக் கண்டார். ஒரு சிறு பழைய பிசாசானது அவருக்கு முன்பாக நின்றது’ என்றார். ‘அது அவரை பயமுறுத்தியது’ என கூறினார். ‘பிசாசானது அவர் பக்கத்தில் குதித்தான், அவரும் பின்னால் குதித்தார். ஒவ்வொரு தடவையும் அவர் அவ்வாறு குதித்த போது, பிசாசு, அவர் சிறியவராக ஆனாராம், பிசாசோ பெரியவனாக ஆனான். எப்படியோ சிறிது கழிந்து அவர் அவனிடம் சண்டை செய்ய வேண்டியவராய் இருந்ததை அறிந்து கொண்டதாக’ கூறினார். எனவே அவர் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்து ஏதோவொன்றை காண முயற்சித்தார், அவர் வேதாகமத்தைக் கண்டு கொண்டார். அவர் அதை பக்கத்தில் இழுத்து அவனை வலுவாய் அடித்தார், அவர் அவனை அடித்தார். ஒவ்வொரு தடவை அவர் அவனை அடித்த போதும், பிசாசு சிறியதாக சிறியதாகிக் கொண்டே போனான், பிறகு அவர் அவனை மரணத்திற்கேதுவாக தோற்கடித்தார்” என்றார். அது சரியே. ஒவ்வொரு தடவையும் அவன் குதிக்கும் போதும், அப்படியே, ‘அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன’ என்று கூறுவான். நீங்கள் ‘அப்படியா?’ என்று கூறுகிறீர்கள். "தெய்வீக சுகமளித்தல் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது?’ "அப்படியா?’ ஓ, அவன் உங்களைக் கொன்று விடுவான். தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் அங்கே அசையாமல் நில்லுங்கள். ‘இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இந்தக் காரியத்தை எனக்கு வாக்களித்துள்ளார், நான் அதைப் பெற்று உள்ளேன்’ என்று கூறுங்கள். சகோதரனே, அவன் சரியாக அப்பால் பயந்து பின்வாங்கிப் போவதை நீங்கள் காண்பீர்கள். அது சரியே. 74. அவன் பெலிஸ்தியர்களை தோற்கடித்தான். பாருங்கள், ஒரு பயிற்சி இல்லாத விவசாயி, ஒரு தாற்றுக்கோலை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு, ஆயுதந்தரித்த, அறு நூறு மனிதர்களைத் தோற்கடித்தான். வியூ. ஓ, அது தான் கர்த்தர். பேசும்படி குறுகிய கால அளவே உள்ளது என்பது போன்று (என்னுடைய) இருதயத்தில் நான் உணருகிறேன் என்று உங்களிடம் கூறுகிறேன். நான் அதைக் குறித்து நினைத்த போது, அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு இங்கே அமைதியாக இருப்பதற்கு இடமில்லை; சகோதரனே, பிரசங்கிப்பதற்கு எனக்கு அதிகமான இடம் எனக்கு வேண்டியதாய் உள்ளது. நான் – நான் சிறிது நகர்ந்து வெளியேற வேண்டும். ஓ, என்னே. இன்றிரவு நம் மேல் இருக்கும் அதே தேவனுடைய வல்லமையில், ஒரு தாற்றுக்கோலைக் கொண்டு ஒரு விவசாயி அறுநூறு பெலிஸ்தியர்களைக் கொன்று போட்டிருக்கின்றான். அவனுக்கு வேதத்தில் அதைக் குறித்த எந்த வாக்குத்தத்தமும் இல்லாதிருந்தது. அவனுக்கு அதைக் குறித்த ஒரு வாக்குத்தத்தமும் இல்லாதிருந்தது. நாமோ ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறோம். ஆமென். ஓ, அந்த பழைய வியாதி வீழ்ந்து போகட்டும். 75. (இப்பொழுது) சீக்கிரமாக தயவு செய்து இன்னும் ஒரு சிறியதைக் கூறிவிடுகிறேன். நான் சிந்தித்துக்கொண்டிருக் கையில், சபைகளானது இன்றிரவு தேவனை விட்டு அகன்று சென்றிருப்பதைப் போன்று, இஸ்ரவேலும் பின்வாங்கி அகன்று போய் விட்ட ஒரு சமயத்தைக் குறித்து இப்பொழுது என் சிந்தையில் ஏதோவொன்று வருகிறது. நீங்கள் அறிந்து கொள்ளும் முதல் காரியம் என்னவெனில், அவர்கள்... பிசாசு எப்போதுமே, அவன் உங்களை விளிம்பிற்குள் கொண்டு வருவதை அவன் அறியும் போது, அவன் உங்களிடம் வீம்பு பேச்சு பேசுவான். (ஒலி நாடாவில் காலியிடம் – ஆசி.) 76. கோலியாத் என்னும் பேருள்ள, ஒரு மிகப்பெரிய முரடன் அங்கே நின்றான். ஒரு சாதாரண மனிதனின் அளவைப் போல் ஏறக்குறைய நான்கு மடங்கு பெரியவனாயிருந்தான். அவன், ‘நான் ஒரு விவகாரத்தை உங்களிடம் செய்ய வேண்டும். நான் என்ன செய்ய போகிறேன் என்று நான் உங்களிடம் கூறுவேன்; நாம் இந்த எல்லா மனிதர்களோடும் சண்டையிட்டு, இந்த எல்லா மனிதர்களையும் கொன்று போட வேண்டாம். நீங்கள் உங்கள் கூட்டத்திலிருந்து ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து, அவனை இங்கே அனுப்புங்கள், நான் அவனைக் கொன்றால், நீங்கள் அனைவரும் எங்களை சேவிக்க வேண்டும்’ என்றான். நிச்சயமாக. பெரிய புத்திசாலித்தனமான தற்பெருமை பேச்சு, ஏனெனில் அவன் வழக்கத்திற்கு மாறானவைகளைக் கொண்டிருந்தான். அவன், ‘அவன் என்னைக் கொன்றால், அப்பொழுது, நாங்கள் உங்களை சேவிப்போம்’ என்றான். ‘உங்களில் யாராவது ஒருவர் இங்கே வந்து சண்டை போடுங்கள். ஹா, ஹா, ஹா, ஹா, ஹா’ என்றான். இன்று இந்த நபர்களைப் பற்றி என் சிந்தையில் எழுகிறது, "நான் இந்த எழுப்புதல் கூட்டங்களைப் பார்த்து, ஒரு நபராகிலும் சுகமடைந்தால் நான் என் கரங்களை அந்த நபரின் மேல் போட்டு முன்பாகவும் பின்பாகவும் பார்த்து, இப்போதிலிருந்து ஐந்து வருடங்களுக்கு அவர்கள் அப்படியே இருந்தால், நான் அதை விசுவாசிப்பேன். ஹா, ஹா. நான் நிச்சயமாக தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறவன் தான்.’ ஓ, அது ஒரு பொய்யாய் இருக்கிறது. அது பொய்யாக இருக்கிறது என உங்களுக்குத் தெரியும். ஆனால் வழக்கத்திற்கு மாறானவைகளை அவன் பெற்றுக் கொண்டதாக நினைக்கும் காலம் வரை, அது அவ்விதமே இருக்கிறது. 77. நான் முதலில் ஆரம்பித்த போது, நாட்டில் எங்கும் கூட்டங்களே இல்லாமல் இருந்தது என்பதை நான் நினைவு கூருகிறேன். நான் சரியாக அங்கே அந்தச் சிறு பொருளின் பேரில் பிரசங்கித்தேன். நவீன நாளின் விஞ்ஞானத்தின் அந்தப் பெரிய வீண்பெருமை பேச்சுக்காரர்கள் தங்களுடைய பெரிய (வண்டிச்) சக்கரங்களைத் திரும்பியவாறு எழும்பி நின்று, ‘அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன’ என்று கூறுகின்றனர். சகோதரனே, அது ஒரு ...?... இப்பொழுது மூலையில். அது சரியாய் இருக்கிறது. 78. ஒரு நாள் என்ன சம்பவித்தது என்று நீங்கள் அறிவீர்களா? அங்கே தேவன் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறு ஆடு மேய்ப்பவன் இருக்க நேரிட்டது, அவன் ஏறக்குறைய ஒரு சிறு பையனாகவும், ஓ, ஒரு சிறு ஆட்டுத்தோல் (sheep-skin) மேல் உடுப்பை போர்த்துக் கொண்டவனாயும், ஏறக்குறைய நாலரை அடி உயரமுடையவனாயும் இருந்த ஒரு சிறு பையனைப் போன்று இருந்தான். அவனுடைய தகப்பனாகிய ஈசா, ‘தாவீதே, கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கொஞ்சம் உலர் திராட்சை பழங்களையும் யுத்தகளத்திற்கு முன்னால் கொண்டு சென்று, உன்னுடைய சகோதரர்களைப் பார்த்து விட்டு வா. அவர்கள் பாளையத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாரும் சண்டையிட செல்லவில்லை. அவர்களில் சண்டையிட போதுமானவர்கள் இல்லை. அவர்களுடைய தைரியம் எல்லாம் போய் விட்டது’ என்று கூறும்படி நேர்ந்தது. ஏறக்குறைய இன்று சபையிலுள்ளதைப் போன்று. ‘சகோ.பிரான்ஹாமே, நல்லது, நான் உங்களிடம் கூறுகிறேன். நான் மிக அதிகமான தோல்விகளைக் கண்டிருக்கிறேன். எனக்குத் தெரியவில்லை.’ ஓ, என்னே. அது இன்னும் அதிகமானவற்றை நான் விசுவாசிக்கும்படிக்கு செய்கிறது. அது சரியே. ‘இப்பொழுது, என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.’ 79. எனவே அவன் திராட்சை ரசத்தையும் காரியங்களையும் எடுத்துக் கொண்டு, அங்கே யுத்தகளத்திலுள்ள அவனுடைய சகோதரர்களிடம் சென்று, தன்னுடைய சகோதரர்களைச் சந்திக்கிறான். இந்த பெரிய ராட்சதன் வெளியே வந்து கர்ஜித்தான். அவன் (இச்)சமயத்தில் தவறான மனிதனுக்கு முன்பாக கர்ஜிக்கும்படி நேர்ந்தது. சிறு தாவீது சுற்றும் முற்றும் திரும்பி, ‘இது என்ன? அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? அங்கே நின்று கொண்டிருக்கிற அந்தப் பெரிய சோளக்கொல்லை பொம்மை யார்? நீங்கள் சுற்றிலும் நின்று கொண்டு, ஜீவனுள்ள தேவனுடைய சேனையைப் பார்த்து அந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியன் சவால் விடட்டும் என்று நீங்கள் என்னிடம் கூறுகிறீர்களா?’ என்றான். அதைத் தான் நான் இன்றும் எண்ணிப்பார்க்கிறேன். இந்த பெரிய வேத சாஸ்திர வேதாகம கல்லூரி ஆசிரியர்களில் சிலர் தங்களுக்குப் பின்னால் இந்த எல்லா D.D.D. பட்டங்களையும் வைத்துக்கொண்டு நின்று, ‘தேவனுடைய வல்லமை, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் போன்ற அப்படிப்பட்ட எந்த காரியமும் கிடையாது. அவைகளின் நாட்கள் கடந்து போய்விட்டன’ என்று கூற நீங்கள் அனுமதிக்கிறீர்கள். நான் ஜீவனோடு இருக்கும் காலம் வரை (அனுமதிக்க மாட்டேன்). இல்லை ஐயா. தேவன் தமது கரத்தை ஒரு மனிதன் மீது வைத்து, எங்கோ அவனை ஆயத்தம் செய்கிற காலம் வரையிலும் (அனுமதிக்கவே மாட்டார்), அவர் அனுமதிக்கவே மாட்டார். இல்லை ஐயா. 80. தாவீது, ‘நான் போய் அவனுடன் சண்டையிடுவேன்’ என்றான். அங்கே பாஸ்டராகிய, பெரிய ஏழு அடி உயரமுடைய சவுல் தன்னுடைய கூடாரத்தில் பயத்தோடு இருக்கிறான், என்னே. ஆனால் தாவீதோ, ‘என்னைப் போக விடுங்கள்’ என்றான். நல்லது, அவர்கள் சவுல் முன்பாக அவனைக் கொண்டு சென்றனர். சவுல், ‘இப்பொழுது, என் மகனே, நான் உன்னுடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் அந்த மனிதன் தன்னுடைய வாலிப பிராயத்திலிருந்து ஒரு யுத்த வீரனாக இருக்கிறான், நீ ஒரு வாலிபனாய் இருக்கிறாயே அன்றி வேறுதுவும் இல்லை என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். ஒரு பட்டயத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அம்மனிதன் அறிந்திருக்கிறான். ஏன், அவனுடைய ஈட்டி இருபது அடி நீளம் இருக்கலாம். ஏன், அவன் அப்படியே உன்னை மேலே தூக்கியும்... அதைப் போல செய்து விடுவான்’ என்றான். அவன், ‘என் ஆண்டவனே, உமது ஊழியக்காரன்... அவனுடைய கவணினால் ஒரு - ஒரு கரடியைக் கொன்று போடும்படி தேவன் அனுமதித்தார். நான் ஒரு சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு ஆட்டுக் குட்டியை மீட்டேன். (அப்படியிருக்க) எவ்வளவு அதிகமாக இந்த விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தியனை அவர் என் கரங்களில் ஒப்புக் கொடுப்பார்’ என்று கூறினான். அவன் எதைக்குறித்து பேசிக்கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான்; அவனுக்குப் பின்னால் அவன் தேவனைக் கொண்டிருந்தான். அபிஷேக தைலம் அவன் மீது ஊற்றப்பட்டதை அவன் அறிந்திருந்தான். சாமுவேல் அதை செய்திருந்தான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே எதுவும் அவனைத் தொல்லைப்படுத்த போவதில்லை.’ அபிஷேகம் பண்ணப்பட்ட ஜனங்களாகிய உங்களுடனான காரியம் என்ன? தேவன் உங்கள் மேல் பரிசுத்த ஆவியாகிய எண்ணெயை ஊற்றியுள்ளார். நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளீர்கள். நீங்கள் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். 81. விரைவாக பார்க்கலாம். அவன், ‘ஏன், உன்னால் அவனோடு சண்டை போட முடியாது. நல்லது, நீ சண்டையிட போவாயானால், என்னுடைய போர்க் கவசத்தை அணிந்து கொள்’ என்றான். ஊ. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், அவர்கள் இந்தப் பெரிய மகத்தான கவச உடையை, நீங்கள் அறிவீர்கள், சிறு தாவீதுக்கு உடுத்துகின்றனர். அந்த சிறு வாலிபன் இந்த மகத்தான பெரிய கவச உடையோடு... போன்று எழுந்து நின்று கொண்டிருப்பதை நான் காண்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவனால் அதை அணிந்திருக்க முடியவில்லை. ஊ. அந்த மத சம்பந்தமான உடை ஒரு தேவனுடைய மனிதனுக்கு பொருந்தாது என்பதை அவன் காணும்படி நேர்ந்தது. இனியும் அது பொருந்துவதில்லை. நீ சென்று நான்கு வருடங்கள் சவத்தைப் பாதுகாத்து வைக்கும் தைலத்தை உனக்குள் செலுத்த வேண்டியதாயிருக்கும் போது, தேவன் போகச் சொல்வாரானால், போ. அது சரியே. உன்னால் அதைச் செய்யக் கூடும் என்று தேவன் சொல்லுகிறார், உன்னால் அதை செய்ய முடியும். ‘விருப்பமுள்ளவன் எவனோ, அவன் வரக்கடவன்.’ அந்தப் பெரிய மகத்தான மதசம்பந்தமான உடை, நீங்கள் அறிவீர்கள், வேதசாஸ்திர கல்லூரி அனுபவம் தாவீதுக்கு பொருந்தவில்லை. தாவீது, ‘அந்தக் காரியத்தை நான் இன்னும் நிரூபிக்கவில்லை. எனக்கு அதைக் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் இது என்னவென்று எனக்குத் தெரியும்’ என்றான். 82. சகோதரனே, உங்கள் எல்லா போதகங்களையும் பற்றியோ, உங்களுடைய எல்லா உபதேசங்களைப் பற்றியோ, கிறிஸ்தவ ஆராதனைகளில் தேவனை மகிமைப்படுத்த உபயோகிக்கும் எல்லா வார்த்தைகளையோ (Doxologies), அப்படிப்பட்டவைகளைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் பரிசுத்த ஆவியானது என்ன என்பதை நான் அறிவேன். அங்கே முன் காலத்தில் என்னை இரட்சித்த அதே காரியம் தான் என்னை சுகப்படுத்தவும் செய்யும். அல்லேலூயா. தேவன் அதை வாக்களித்துள்ளார், நான் அதை விசுவாசிக்கிறேன். சகோதரர்களே, அவன் அங்கே கிழே சென்று, அவன் கடந்து செல்கையில், ஐந்து சிறு கற்களை எடுத்துக்கொண்டான். அந்த பண்டைகால மனிதன் (கோலியாத் – தமிழாக்கியோன்) அவனைப்பார்த்து நகைத்து, ‘நான் உன்னை பறவைகளுக்கு இரையாக்குவேன்’ என்றான். இவனோ, ‘நீ ஒரு பெலிஸ்தியன் என்ற நாமத்தில், ஒரு கவசத்தோடும், ஒரு ஈட்டியோடும் ஒரு பெலிஸ்தியனாக என்னை எதிர் கொள்ளுகிறாய். ஆனால் நானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் உன்னை சந்திக்கிறேன்’ என்றான். அவன் எங்கு நின்று கொண்டிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் கீழே சென்று ஐந்து சிறு கற்களை எடுத்து ஒன்றை கவணில் வைத்தான். ஏன், பண்டைய கோலியாத் மேலிருந்து கீழ் வரை இவ்விதமாக தன்னை முழுவதுமாக எஃகினால் மூடியிருந்தான். சரியாக ஒரு சிறு இடம் (மட்டும் திறந்திருந்தது – தமிழாக்கியோன்) இங்கே அவன் இவனை சந்திக்க குறுக்கே வருகிறான். ஏறக்குறைய இதைப் போன்ற சிறு வாலிபனும், ஏறக்குறைய அதைப் போன்ற கோலியாத் அவனைப் பிடித்து எங்கேயோவுள்ள... ஒரு மரத்தின் மேல் தூக்கிப் போட தன்னுடைய ஈட்டியோடு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தான். இங்கே சிறு தாவீது ஆவியில் ஊக்க உணர்ச்சி கொண்டு, ‘ஹா, ஹா, ஹா’ என்று வருகிறான். ஓ, என்ன ஒரு பரிசுத்த உருளையன். ஏற்கனவே, ஜெயம்... அல்லேலூயா. ஏன், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை அவனுக்கு முன்னே வைத்திருந்தான். நரகத்திலுள்ள எல்லா பிசாசுகளும் அதற்கு குறுக்கே கடந்து செல்ல முடியாது. சிறு தாவீது அப்படியே ஆவியில் நடனமாடிக் கொண்டிருந்தான்... ஓ, மகிமை. அல்லேலூயா. 83. ‘தாவீது நடனமாடினானா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஓ, ஆம், அவன் ஒரு நடனம் பண்ணுபவன் தான். ஒரு நாள் (கர்த்தருடைய) பெட்டி (ark) உள்ளே வந்தது, அவனுடைய மனைவி அங்கே உட்கார்ந்து கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஒரு நேர்த்தியான வாலிபன், அவள் நின்று கொண்டிருந்தாள். இங்கே கர்த்தருடைய பெட்டி குறுக்கே வருகிறது. தாவீது அங்கே ஓடிச் சென்றான், அவன் ஓடிச்சென்று நடனமாடத் தொடங்கினான், தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருந்தான். அவனுடைய மனைவியோ, ‘நீர் என்னை வெட்கமடைய செய்கிறீர்’ என்று கூறினாள். ‘ஓ’, அவன், ‘நீ அதை விரும்பவில்லையா, ஊ? இதைக் கவனி’ என்று கூறி அவன் கர்த்தருடைய பெட்டியை (ark) சுற்றி சுற்றி சுற்றி சுற்றி சுற்றி நடனமாடினான். அல்லேலூயா. அது சரியே. ஆம், ஐயா. ‘இதைக் கவனி’ என்றான். பிறகு... தேவன் பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப் பார்த்து, ‘தாவீதே, நீ என்னுடைய இருதயத்திற்கேற்றவன்’ என்றார். ஹா, ஹா. ஓ மகிமை. ‘நீ என் இருதயத்திற்கு மிகவும் ஏற்றவன்.’ வாலிபனான தாவீது ஒரு நடனம் பண்ணுபவனாக இருந்தான். 84. இங்கே அவனால் முடிந்த அளவு கடினமாக ஆவியில் நடனமாடிக் கொண்டே அவன் அங்கு சென்றான். ஏன்? விசுவாசத்தின் மூலமாக அவன் ஜெயத்தைக் கண்டான். ஆமென். அவன் ஜெயத்தைக் கண்டான். அவன் உள்ளேயிருந்த தன்னுடைய சிறு பழைய கவணை எடுத்து, இந்த கற்களில் ஒன்றை அதில் வைத்து, அவன் சுற்றி நடனமாடி இங்கே வருகிறான், வந்து கொண்டிருக்கிறான். ஓ, கோலியாத், ‘ஹா, ஹா, ஹா, ஹா’ என்று கூறுவதை நான் காண்கிறேன். அது என்ன? அவனிடம் ஐந்து கற்கள் இருந்தன: வி-சு-வா-ச-ம் என்பதை இ-யே-சுவைச் சுற்றியுள்ள இந்த கயிற்றில் ஐந்து விரல்களில் மூடி வைத்தான். அவன் இங்கே வருகிறான். ஓ, சகோதரனே. கோலியாத்தை நோக்கிப் பார். நீ விழுந்தாக வேண்டும். அவன் அதை சுழற்றி வீசிய போது, பரிசுத்த ஆவியானவர் அந்த சிறு பழைய கல்லை பிடித்து, ஏறக்குறைய வினாடிக்கு ஆயிரம் மைல்கள் வேகத்திற்கு செல்லும்படி செய்து, அந்த ராட்சதனின் முகத்திற்கு குறுக்கே திடீரென்று பலமாய் தாக்கும்படி செய்ததால், அவன் முன்னோக்கி விழுந்தான். அல்லேலூயா, ஓ, என்னே. சிறிய ஜிம் க்ரோ (Jim Crow) அங்கே மேலே நடனமாடியதைப் போன்று அவன் மேல் தாவிக் குதித்து, அவனுடைய பட்டயத்தை உருவி, அவன் தலையை அவ்விதமாக அவனிலிருந்து வெட்டிப்போட்டான். ‘சிறுவனே, நீ அதை அவ்விதமாக எவ்வாறு செய்தாய்?’ என்று கூறினான். கீழே சென்று அவனுடைய தலைமயிரால் அவனைப் பிடித்தான். ‘வாருங்கள் சிறுவர்களே, தெய்வீக சுகமளித்தலை நாம் பிரசங்கிப்போம்’ என்றான். அவ்விதமாக அவர்கள் சென்றனர். அல்லேலூயா. அவர்கள் என்ன செய்தனரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களில் மீதியானவர்கள் அது செய்யப்படக் கூடியதாக இருந்ததைக் கண்டு, அவர்கள் பெலிஸ்தியர்களை சுவரோடு சேர்த்து முற்றிலுமாக வெட்டிப் போட்டார்கள். மகிமை. அந்தப் பழைய குற்றங்காண்பவர்கள் இப்பொழுது தங்களுடைய வாய்களை அடைத்துக் கொண்டார்கள். 85. பிளாரன்ஸ் நைட்டிங்கேல், காங்கிரஸ்காரரான உப்ஷா, இங்கிலாந்து ராணி, மகத்தான மனிதர்கள், அதோ அங்கே போர்ட்லாண்ட், ஓரிகானில், அந்த இரவில் தெய்வீக சுகமளித்தலின் வல்லமை நிரூபிக்கப்பட்ட போது, அந்த பயித்தியக்காரன் மேடையில் ஓடினான். தேவன் அந்த அசுத்த ஆவியை சரியாக தரையில் விழ வைத்தார். டாமி ஆஸ்பார்ன், ஓரல் ராபர்ட்ஸ், ஜேகர்ஸ், அவர்களில் மற்றுமுள்ளோர் வாய்ப்பை பயன்படுத்தினார்கள். நாம் அந்த பிசாசுகளை சுவரோடு சேர்த்து முற்றிலுமாக வெட்டிப் போட்டோம். நாம் ஜெயத்தைப் பெற்றுக் கொண்டோம். அல்லேலூயா. அங்கே உள்ளே தாவீது கோலியாத்தின் தலையை தனக்குப் பின்பாக இழுத்தவாறு அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தான். வெற்றி, அதைக் கவனித்துக் கொள்வதற்கு தேவன் அவனுக்கென ஒரு மனிதனை ஆயத்தப்படுத்தினார். 86. சகோதரனே, அதற்குப்பிறகு ஏறக்குறைய அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்னால், தேவனுடைய சபையானது கட்டப்பட்டிருந்தது. ஆனால் ஒருவர் இவ்வாறு கூறுவதை என்னால் கேட்க முடிகிறது: ‘இதோ, பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை உங்களிடத்தில் அனுப்புகிறேன். இந்த சுவிசேஷம் பூமி முழுவதும் பிரசங்கிக்கப்பட நான் விரும்புகிறேன். விசுவாசிகளை அடையாளங்கள் பின்தொடர நான் விரும்புகிறேன். நான் திரும்பி வரும்வரை வியாதியஸ்தர்களை சுகமாக்க நான் விரும்புகிறேன். நான் போகிறேன், ஆனால் நான் இராஜ்ஜியத்தின் திறவுக்கோல்களை உங்களிடம் கொடுக்கிறேன். என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் செய்வேன். ஆனால் நீங்கள் அதை செய்யும் முன்பாக, நான் உங்களை ஆயத்தம் பண்ண வேண்டும்’ என்று கூறினார். ஆமென். 87. அவர்கள் மேலே தொலைவில் இருக்கும் ஆலயத்திற்கு, மலைப் பகுதியில் ஏறி, மேல் அறையில் தங்கி, ‘நான் ஒரு மெதொடிஸ்டாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை’ என ஒருவன் திடீரென்று கூறுகிற வரையிலும் ஒரு கட்டத்தை அடைய வேண்டியிருந்தது. ‘நான் ஒரு பாப்டிஸ்டாகவோ அல்லது சதுசேயனாகவோ இருந்தாலும், அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை’ என வேறொருவர் கூறினார். அவர்களை விட்டு சகல பேதங்களும் வெளியேறும் வரை. மேலும் அவர்கள் அவ்வாறு செய்த பொழுது, அவர்கள் தேவனை ஸ்தோத்தரிக்கத் தொடங்கினர். ஏறக்குறைய அந்த நேரத்தில் தானே அந்த ஆயத்தமாகுதல் பரலோகத்திலிருந்து வருகிறது. இப்போது, கத்தோலிக்க சபையானது, ‘அந்த புனித நற்கருணையை உங்கள் நாக்கினால் நக்கி, அதை வாங்க வேண்டும், அது அதை செய்கிறது’ என கூறுகிறது. பரிசுத்த நற்கருணை, ஒரு சிறிய மெல்லிய ரொட்டித் துண்டு... பிராடஸ்டென்ட் சபையும் அவ்விதமாகவே மோசமானதாக இருக்கிறது; போதகருடன் கரங்களை குலுக்குகிறது, ஐக்கியத்தின் வலது கரம், ஒரு சில தண்ணீர் துளிகளை அவன் உச்சியின் மேல் தெளித்து, அவனை உள்ளே கொண்டு...?...’ ...?...அந்த அளவுக்கு அவைகள் இரண்டும் தவறாய் இருக்கின்றன. ஆனால் இங்கு தான் ஆயத்தமாகுதல் என்னவாக இருந்தது என வேதாகமம் கூறுகிறது. 88. இப்பொழுது, வேறொரு காரியம், ‘நல்லது, இப்பொழுது என சிறுவனே, நீ ஒரு ஊழியனாக வேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அந்த முனைவர் மற்றும் மூப்பர் மற்ற அனைவரையும் நாம் பார்ப்போம். ஐக்கியத்தின் வலது கரத்தை நாங்கள் உனக்குக் கொடுப்போம். நாங்கள் உன்னை ஒரு வேதாகமக் கல்லூரிக்கு அனுப்புவோம், மேலும் நாங்கள் இந்த காரியங்கள் குறித்த அனைத்தையும் உனக்குப் போதிப்போம்.’ அது ஒரு போதும் இல்லை, இல்லை, ஐயா, அது தேவனுடைய ஆயத்தமாகுதல் இல்லை. ‘உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் நீங்கள் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள். பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்த போது...’ என்று அவர் கூறியுள்ளார். இங்கே ஆசாரியன் ஒருவன் ஒரு பெட்டியுடன் சாலையில் வந்து, ‘இங்கு தான் அந்த பரிசுத்த...’ என்று கூறினானா. இல்லை. இங்கே பிராடெஸ்டன்ட் பிரசங்கியார் வந்து, ‘ஐக்கியத்தின் வலது கரத்தை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றா கூறினார். இல்லை. இங்கே மூப்பர்கள் வந்து, ‘நாங்கள் உன்னை ஊழியக்களத்திற்கு அனுப்புவோம். முதலாவதாக இந்த மாணாக்கனை நாம் எடுத்து...’ என்றா கூறினார்கள். இல்லை. ‘ஆனால் அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.’ அல்லேலூயா. அக்கினி மயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். வெளியில் தெருக்களிலும் தேச முழுவதும் அடையாளங்களும் அதிசயங்களும்... அந்த மனிதர்களுடைய நிழல்களில் கிடத்தினார்கள், அவர்கள் சுகம் அடைந்தனர். குறை கூறுபவர்கள் அவர்களை பரிகாசம் செய்தனர். அது தான் தேவனுடைய ஆயத்தமாக இருந்தது. தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றி விடவில்லை. அது இயேசு மீண்டும் திரும்ப வரும் வரை அப்படியே தான் இருக்கும். ஒரு சாதாரண மனிதனுக்கு அது முட்டாள்தனமானதாக ஒலிக்கலாம். ‘ஏன், அந்த அதே யோசனை, நான் கீழே சென்று ஒரு பைத்தியக்காரனைப் போன்று நடக்க வேண்டும் என நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்களா? ஹூ.’ ஒன்று நீங்கள் அதைச் செய்ய வேண்டும் அல்லது விலகி இருக்க வேண்டும், ஒன்றை நீங்கள் செய்ய விரும்ப வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது அதைத்தான். யாரோ ஒருவர் கூறினார், பழைய நாகமானைப் (Naaman) போல, அவர், ‘நான் – நான் - நான்... நான் இந்தப் பழைய சேற்றுத் தண்ணீரில் முழுக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்றார். ஒன்று அதை செய் அல்லது உன் குஷ்டரோகத்தை வைத்துக் கொள், எதையாவது ஒன்றை நீ செய்ய வாஞ்சிக்க வேண்டும். 89. கொஞ்ச காலத்திற்கு முன்பு நான் அங்கே பிரசங்கித்துக் கொண்டு இருந்தேன். ஒரு குறிப்பிட்ட ஊழியர் என்னிடம் வந்து, ‘சகோதரன் பிரன்ஹாம், உங்கள் பிரசங்கத்தில் என்னால் களிகூர கூட முடியவில்லை’ என்று அவர் கூறினார், ‘அந்த ஜனங்கள் ‘ஆமென்’ என்று ஆர்ப்பரித்துக் கொண்டும், கூச்சலிட்டும் ஆர்ப்பரித்து சத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர்’ என்று கூறினார். ‘நீங்கள் எப்படி உங்கள் பொருளை தொடர முடிகிறது?’ என்று கூறினார். ‘நான் முயற்சி செய்து கொண்டிருக்கவில்லை’ என்று கூறினேன். ‘எப்பொழுதாவது நீங்கள் முடித்து விட நினைத்தீர்களா?’ என்று கூறினார். நான், ‘தண்ணீர் கொண்டு செல்ல உதவும் நீளமான நெளியும் தன்மை உடைய குழாயில் இடை முறுக்கு ஏற்படும் போது’ என்றேன். ஆம், தண்ணீர் கொண்டு செல்ல உதவும் நீளமான நெளியும் தன்மை உடைய குழாயில் எங்கேயாவது ஒரு இடை முறுக்கு விழும் போது, ஆசீர்வாதமானது மறுபடியும் ஊற்றப்பட தேவன் அதை நேராக்க வேண்டும்’ என்று நான் கூறினேன். ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஜனங்கள் அப்படியே என் முதுகில் குளிர்ச்சியை நிரம்பி வழியச் செய்கின்றனர்’ என்று கூறினேன். ‘அவர்கள் செய்தனரா’ என்று நான் கூறினேன், ‘அது வினோதமானது. நீங்கள் எப்பொழுதாவது பரலோகத்திற்கு செல்வீர்களானால், மரிக்கும் அளவுக்கு உறைந்து விடுவீர்கள்; ஏனென்றால் சகோதரனே, கூச்சலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் இரவும் பகலும் தேவனை துதித்துக் கொண்டும், தங்கள் சாட்சியினாலும், ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தினாலும் மேற்கொண்டும், அவர்கள் மெய்யாகவே சில சத்தங்களை அங்கே மேலே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்’ என்றேன். அல்லேலூயா. 90. இது தேவனுடைய ஆயத்தப்படுத்தும் நேரமாகும். தேவன் ஒரு ஜனத்தை ஆயத்தமாக்குகிறார். உங்களால் இந்த வியாதிப்பட்ட சரீரத்தை சுகமாக்கும்படியான விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியவில்லை என்றால், கடைசி நாட்களில் நீங்கள் மேலே எடுத்துக் கொள்ளப்படுவதற்கான விசுவாசத்தை எப்படி கொண்டிருக்கப் போகிறீர்கள்? தேவனுக்கு மகிமை. இது அவருடைய ஆயத்தப்படுத்தும் நேரமாகும். ஓ, நீங்கள் என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று அழைக்கப் போகிறீர்கள், எனவே அதெல்லாம் சரி தான், நான் பரிசுத்த உருளையன் தான். 91. நல்லது, சகோதரனே, நான் இப்பொழுது ஒரு காரியத்தை உன்னிடம் கூறட்டும்: உலகத்தின் பாவத்தை அகற்றி, வியாதியைச் சுகப்படுத்துகிற தேவனுடைய ஆட்டுக்குட்டியானவராகிய உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவினுடைய வல்லமையைக் குறித்துள்ள - நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவினுடைய இத்தரிசனத்தை நான் கண்டதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவர் இங்கே இருப்பதற்காக நான் இன்றிரவு மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் நித்திய ஜீவனைக் கொண்டிருப்பதற்காக நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 92. நான் இப்பொழுது உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் ஒரு நாள் பீடத்தண்டை நடந்து சென்று, ‘நான் இயேசு கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று கூறி, உங்களுடைய கரத்தை உயர்த்தி, துதிக்கத் தொடங்கி, உங்களுடைய இரட்சிப்பிற்காக அவருக்கு நன்றி செலுத்தினீர்கள். உங்களால் மாம்சரீதியான எந்த விளைவுகளையும் காண்பிக்க முடியவில்லை, ஆனால் நீங்கள் முன்னே சென்று, அதை விசுவாசித்தீர்கள். நீங்கள் அதனோடு தரித்திருந்தீர்கள்; நீங்கள் அதை அறிக்கை செய்தீர்கள்; அதை விசுவாசித்தீர்கள். மேலும் இப்பொழுது நீங்கள்... நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். சுகமாகுதலுக்கும் அதே காரியத்தையே செய்யுங்கள். அதே அடிப்படையில் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். ‘நான் அவரை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்கிறேன்.’ ‘நல்லது, என்னால் இந்த காலை அசைக்க முடியும் என்று நான் விசுவாசிக்கவில்லை’ என்று கூறுகிற இந்த பழமையான சிறு பயமுறுத்துதலைப் பெற்றுக் கொள்ள வேண்டாம். ஏன் முடியாது? நீங்கள் ஒரு மாதமாக பரிபூரண (சுகத்தோடு) நடக்க இயலாதவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த கக்கதண்டத்தை தூர மிதித்துத் தள்ளிவிட்டு, எப்படியாவது நடந்து செல்லுங்கள். அது தேவன் உங்களுக்குக் கொடுத்த சிலாக்கியம். ஆமென். 93. சகோதரனே, நான் நன்றாக உணருகிறேன். நான் முடிக்க வேண்டி உள்ளது. நான் இப்பொழுது சற்று முன்பு தான் புத்துணர்ச்சியடைந்தேன், ஆகையால் இப்பொழுதே சிறிது நேரம் என்னால் பிரசங்கிக்க முடியும் என்று நம்புகிறேன், இப்பொழுது சற்று நேராக்குங்கள். ஆட்டுக் குட்டியானவர் வருகிற வெளிப்படுத்துதலின் புத்தகத்திற்கு நான் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆனால் நான் – ஆனால் நான் வேறொரு சமயத்தில் அதைச் செய்வேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நேரம் மிக சீக்கிரமாக கடந்து சென்று விட்டது. 94.வி சுவாசத்தைப் பெற்றிருக்கிற - விசுவாசத்தைப் பெற்றிருக்கிற நீங்களெல்லாரும், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ‘சகோ. பிரான்ஹாமே, நான் விசுவாசத்தைக் பெற்றிருக்கிறேன். நான் விசுவாசிக்கிறேன்’ என்று கூறுங்கள். இது ஆயத்தமாகும் நேரமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் வயதை கவனிக்க வேண்டாம் - கவனிக்கவே வேண்டாம். சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டாம். விசுவாசத்திற்கு வயது கட்டுப்பாடோ அல்லது சூழ்நிலையோ தெரியாது. விசுவாசத்திற்கு ஒரு காரியம் தான் தெரியும்: ‘தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அது அதை தீர்த்து வைக்கிறது.’ நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 95. பியானோ இசைக்கும் நம்முடைய சகோதரி எங்கிருக்கிறார்கள்? ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. ‘அந்த மகத்தான வைத்தியர்’ சகோதரியே. பிறகு ஏதோ ஒன்று என் இருதயத்தில் தோன்றுகிறது. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் ஆயத்தப்படும் மணி வேளையில் வாழ்ந்து கொண்டிருப்பதன் நிமித்தமாக இன்றிரவு நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். சகலத்தையும் விசுவாசிக்கிற ஜனங்களை நீர் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆயத்தமாகும் வேளையாகிய இந்நாளின் செய்தியை நாங்கள் விசுவாசிக்கிறோம்: இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீர் ஜனங்களை அழைத்து அவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறீர், இப்போதும் அந்த ஒரு கூட்ட குமாரர்களை சுவிகார புத்திரராக்கிக் கொள்வதற்கு (to adopt) நீர் வெளியே அழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர். குமாரன் ஒருவன் வீட்டில் பிறந்தான், அவன் ஒரு குமாரனாக இருந்தான், ஆனால் கற்றுக் கொடுப்பவர் (tutor) அவனை வளர்த்தார்: அது பழைய நியாயப்பிரமாணமாக இருந்தது என்பதை நாங்கள் உணருகிறோம். அதன் பிறகு அவன் வயதை அடையும் போது, அவன் சரியான விதமான ஓர் குமாரனாக இருந்தால், அவன் வெளியில் அழைக்கப்பட்டு, இந்திரநீல ஆடை அணிவிக்கப்பட்டு விழா ஒன்றில் சுவிகார புத்திரனாகின்றான். மேலும் அதைத்தான் நீரும் இந்த முழு சுவிசேஷ ஜனங்களிடத்தில் இப்பொழுது செய்ய முயற்சிக்கின்றீர்: அவர்களைத் தாமே எங்கோ ஓரிடத்தில் உம்மோடு விசுவாசத்தில் தனியாக வெளியே கொண்டு வருவதற்கும், இராஜ்ஜியத்தில் அவர்களை சுவிகார புத்திரராக்கி, முன்னே சென்று நீர் செய்த கிரியைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு உரிமை அளிப்பதற்கும் நீர் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர். தேவனே, இந்த சில திருஷ்டாந்தங்களை எடுத்துக் கொள்ளுமாறு நான் ஜெபிக்கிறேன், மேலும் இங்கே மகத்தான பரிசுத்த பவுல் எபிரெயர் பதினோராம் அதிகாரத்தை எழுதிய பிறகு, ‘இத்தனை பெருந்திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம், பாரமான யாவற்றையும் தள்ளி விடுவோம்’ என்று கூறினான். இப்போதும், பிதாவே, அனேகர் பாரப்பட்டு, தளர்ந்தவர்களாக இருக்கின்றனர்; அவர்களுக்கு ஓட விருப்பம் தான், ஆனாலும் அவர்கள் வியாதியஸ்தர்களாக இருக்கின்றனர். வியாதியஸ்தர்களை நீர் எவ்வாறு சுகமாக்கினீர், நீர் எவ்வாறு மரித்தோரை எழுப்பினீர் என்ற தெளிவான எளிய சத்தியத்தை அவர்களுக்கு நான் கொண்டு வந்த விதமாக, பிதாவே, இன்றிரவு நான் ஜெபிக்கிறேன். உமது சீஷர்கள் போய், சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி நீர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, ‘விசுவாசிக்கிற வர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்’ என்று கூறி இருக்கிறீர். முன்பு பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை, ஜனங்கள் உம்மோடு கூட நடக்க ஆயத்தமாகி உம்மை விசுவாசித்த போது, நீர் எப்பொழுதுமே அற்புதங்களை செய்கின்ற தேவனாக இருந்தீர். மோசே ஜெபித்து பிறகு செங்கடலை நோக்கி காலடி எடுத்து வைத்த போது, அது திறந்தது. ஆசாரியர்கள் யோர்தான் தண்ணீருக்குள் காலடி எடுத்து வைத்த போது, அது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு பிரிந்து பின்னால் சென்றது. நாங்கள் ஒரு காலடி எடுத்து வைக்க வேண்டும். நாங்கள் முயற்சிக்க வேண்டும். நாங்கள் உண்மை உள்ளவர்கள் என்பதை உமக்கு காண்பிக்க நாங்கள் எடுக்கும் முயற்சிகளை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். ஆவியில்லாத சரீரம் எவ்விதமோ அவ்வாறே கிரியைகள் இல்லாத விசுவாசமும் செத்ததாக இருக்கிறது என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. இங்கு வியாதியாய் இருக்கிற இந்த மக்களுக்கு இன்றிரவு நீர் இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தை தரும்படி பிதாவே, நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதைக் கேட்கிறேன். 96. உங்கள் தலைகள் வணங்கியுள்ள நிலையில், இப்பொழுது தேவன் என்னுடைய இருதயத்தில் ஏதோ ஒன்றை போடுகிறார். ‘நீ ஒரு சுவிசேஷகனைப் போல பிரசங்கித்தாய், ஜனங்களை மேலே கொண்டு வந்து, அவர்கள் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படிக்கு அவர்களிடம் கேள் என்றும், அவர்கள் கிறிஸ்துவை தங்கள் சுகம் அளிப்பவராக ஏற்றுக்கொள்ளும் படிக்கும் நீ ஏன் அவர்களை மேலே கொண்டு வரக்கூடாது?’ என்று கூறினார். இங்குள்ள எத்தனை பேர் வியாதியஸ்தராயிருந்து, கிறிஸ்துவை உங்கள் சுகமளிப்பவராக இப்பொழுது ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்? இங்கிருக்கும் இந்த மேடையின் ஓரத்தில் மேலே நடந்து வர நான் உங்களுக்கு அழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறேன். வாலிப பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. சரி, இப்போது யாவரும்: அந்த மகத்தான வைத்தியர் இப்போது இங்கிருக்கிறார், அந்த இரக்கமுள்ள இயேசு, சோர்ந்த இருதயம் மகிழ அவர் பேசுகிறார், ஓ, இயேசுவின் சத்தத்தைக் கேளுங்கள். இனிமையான... அழியும் நாவு... ஓ, எப்போதும் பாடினதிலேயே இனிமையான ஆனந்த பாட்டு இயேசு, ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசு 97. இப்பொழுது, நீங்கள் பயபக்தியோடு இந்தப் பாரம்பரிய பாடல்களைப் (folks) பாடிக் கொண்டிருக்கையில், கிறிஸ்தவர்களே, நான் உங்களுக்கு தவறானதை சொல்லியிருந்தால், நியாயத் தீர்ப்பின் நாளில் நான் பதில் கூறியாக வேண்டும். நான் என்ன கூறினேனோ, சர்வவல்லமையுள்ள தேவன், அதற்கான பொறுப்பை என் மேல் சுமத்துவார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இங்கு அமர்ந்திருப்பவர்கள், அங்கு அமர்ந்திருப்பவர்கள், ஒரு சில நிமிடங்கள் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன், உங்கள் ஒவ்வொருவரையும் நான் எவ்விதமாக என் கரங்களில் எடுத்துக்கொள்ள விரும்பினேன் என்று உங்களுக்குத் தெரியாது, பாருங்கள், உங்களுடைய தொல்லை என்னவாக இருந்தது, மேலும் பாருங்கள், என்னால் முடியுமானால் – தொல்லை என்னவாக இருந்தது; அல்லது நீங்கள் சுகம் பெறுவதற்கு தடையாக உள்ள, ஒருக்கால் உங்கள் ஜீவியத்தில் நீங்கள் செய்திருக்கிற சரி இல்லாத ஏதோ ஒன்றை, தேவன் என்னிடம் கூறுவாரானால். இப்பொழுது, உங்களுடைய தவறுகள் அனைத்தையும் அறிக்கை செய்யுங்கள். நீங்கள் அதை சரி செய்து விடுவதாக தேவனிடம் கூறுங்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்று அவரிடம் கூறுங்கள், உங்கள் தவறுகளை அறிக்கை செய்யுங்கள். இப்பொழுது, நீங்கள் அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டதை போல, இயேசுவை உங்கள் சுகமளிப்பவராகவும் ஏற்றுக் கொள்வதற்கு இப்போது, நீங்கள் இங்கே சரியாக நின்று கொண்டு இருக்கிறீர்கள். இப்போது தான் இந்த இரண்டு சிறுமிகளும் நடந்து சென்றதை நான் பார்த்தேன். அவர்கள் சுகமடைந்தனர். அவர்கள் மேலே வந்த போது அது அவர்கள் மீது அசைவாடியதை நான் பார்த்தேன். பார்த்தீர்களா? இப்போது, நான் போய், அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்யுமாறு அவர் என்னிடம் கூறினார். பார்த்தீர்களா? இப்போது, நீங்கள் இவைகளின் அடிப்படையில் வந்து அவரை ஏற்றுக் கொள்ள நான் விரும்புகிறேன். 98. இப்பொழுது கவனியுங்கள், கிறிஸ்தவர்களே, நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்; நான் உங்களை நேசிக்கிறேன். அறிந்திருக்கிற தேவன்... நான்... அது தவறாக இருக்குமானால், என் இருதயத்தை நான் அறியேன். பாருங்கள்? ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை உண்மையாகவே நான் அறிந்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். மேலும் நான்-நான் ஒரு வஞ்சகனைப் போல நான் இங்கு நின்று கொண்டிருக்கவில்லை, நான் அவ்வாறு செய்வதில்லை என்று நீங்கள் அறிவீர்கள். மேலும் ஒரு வஞ்சகனை தேவன் ஒரு போதும் ஆசீர்வதிப்ப தில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது எவ்வாறு இந்த செய்தியானது உலக முழுவதுமாக போகிறது, பல லட்சக்கணக்கான சுகமாகுதல்கள் எழுத்து வடிவில் இருக்கும் போது... ஆப்பிரிக்க காடுகளிலும் கூட, அவர்கள் மனம் திரும்பின பிறகு, நான், ‘ஒரு கல்வியை பெறும் வரை காத்திருக்க வேண்டாம்; வெளியில் புறப்பட்டு சென்று; வியாதியஸ்தர் மீது கரங்களை வையுங்கள்’ என்று நான் கூறினேன். ஏன், அவர்கள் சுகமளிக்கும் கூட்டங்களை, மேலே காடுகளில், வலது கரம் எது இடது கரம் எது என்று அரிதாக கூட அறிந்திராத உள்ளூர் மக்கள் மத்தியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை தெரியும். அவர் அதைச் செய்வதை அவர்கள் பார்த்திருக்கின்றனர். மேலும் அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். அவர்கள் தங்கள் உள்ளூர் நண்பர்களுக்காக ஜெபிக்கின்றனர், மேலும் அவர்கள் சுகமடைகிறார்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டும், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டும், தங்களுடைய விக்கிரகங்களை உடைத்துக் கொண்டும், பெரிய சபைகளையும் குழுக்களையும் ஏற்படுத்திக் கொண்டும், இரவு முழுவதும் ஜெபித்துக் கொண்டும் ஒரே நேரத்தில், வாரக்கணக்கில் உபவாசித்துக் கொண்டும், கல்வியும் வேறு எதுவும் இல்லாமல்... இவ்விதமாக அவர்கள் தேவனை விசுவாசிக்கின்றனர். இப்பொழுது, நீங்களும் அதையே செய்யுங்கள். 99. இப்பொழுது, பாருங்கள். நான் பிரசங்கித்ததைப்பற்றி உங்களால் குறை காண முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஒருக்கால் நான் அதை சரியான விதத்தில் வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் நான்-நான் அது சத்தியம் என்று நான் அறிந்துள்ளதையும், எப்படி என்று நான் அறிந்துள்ள சிறந்த வழியில் நான் அதைக் கொடுத்தேன். ஒரு மனிதன் செய்யக் கூடியதைப் போல, எனக்கு அதைப் பிரசங்கிக்க அறிவும் படிப்பும் கிடையாது. ஆனால் நான் மேலே சென்று அதை எடுத்து பேச வேண்டும். சென்று அதை எடுத்து, நான் அந்த ஒரே வழியில், அது என்னிடம் வருகிற விதமாகவே அதைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பாருங்கள், சகோதரனே, அது சத்தியம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். மரணத்தில் நான் அதை சோதித்திருக்கிறேன். பிசாசுகளுக்கு விரோதமாகவும் நான் அதை பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன். நான்... உலக முழுவதுமாக. இப்பொழுது சுற்றி இது எனது மூன்றாவது பிரயாணம். மேலும் இது... மந்திரவாதிகளையும் பிசாசுகளையும், மனதை வசியப்படுத்துபவர்களையும் (hypnotizers), பிசாசுகளையும் மற்றும் யாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன், குறை கூறுபவர்களையும், எதிர்பாராதவிதமாக சம்பவிக்கும் யாவற்றையும், "இது மனதில் உள்ளவைகளை படிக்கும் ஒரு கலை. அது வெளியில் பார்வையாளர்களாயிருப்பவர்களில் யாரோ ஒருவர் இங்கே மேலே பார்த்துக் கொண்டு, நான் அவர்களுடைய மனதை படிக்கின்றேன்; மனதில் உள்ளவைகளை படிக்கும் கலை’ என்று கூறுபவர்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட சகல காரியங்களும் ஒவ்வொரு அக்கினி சூளைகளிலும் சோதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் தேவன் எதிராளிகளையும் அடித்து, அவர்களை சரியாக அவர்கள் காலடியில் விழச்செய்கிறார். 100. இந்த உலகத்தில் முடமாக்கப்பட்டவனாய், இன்றிரவு ஒரு மனிதன் அங்கே அமர்ந்துள்ளான், ஏனென்றால் நியூயார்க் பட்டணத்தில் வசீகர கலையை பயன்படுத்தி அவன் என்னை கவர்ந்திழுக்க முயற்சி செய்தான். வசீகர கலை, ராணுவத்திலுள்ள இந்த நபர்களில் ஒருவரிடத்திற்கு சென்றது, அது சென்று ஜனங்களை நாய்கள் மற்றும் காரியங்களைப் போலக் குரைக்க செய்தது. "அதைச் செய்யும்படி பிசாசு ஏன் அதை உன் இருதயத்தில் வைத்து உள்ளான்?’ என்று நான் கேட்டேன். மேலும் அது அதைத் தீர்த்து வைத்தது, அவர்கள் அவனை முடமாகிப் போனவனாக (paralyzed) கட்டி வெளியேற்றினர். இன்றிரவு அவன் இன்னும் அவ்விதமாகவே இருக்கிறான். நூற்றுக்கணக்கான மற்ற அநேக காரியங்களை நான் சொல்ல முடியும், ஆனால் நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்லியிருக்கிறேன். அது சத்தியமாக இருப்பதாக தேவன் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். 101. இப்பொழுது, இந்த சத்தியத்தைக் கவனியுங்கள். இங்கே நின்று கொண்டு இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இருதயத்தில் உத்தமமாக இருக்கிறீர்கள். நான் அதை நம்புகிறேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று நான் நம்பாமல்; நீங்கள் தேவையுள்ளவர்களாக வந்திருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். மேலும் அங்கே கிடத்தப்பட்டிருக்கும் முதிர் வயதையுடைய அந்த ஸ்திரீயும் கூட (சுகமாக) நான் வாஞ்சிக்கிறேன், மேலும் நியூ ஆல்பனியிலிருந்து வந்திருக்கும் இங்கேயுள்ள சகோதரன். நீங்கள் நியூ ஆல்பனியிலிருந்து வந்திருக்கவில்லையா? நீங்கள் தான் நிலத்தை அளந்த அந்த மனிதர்... நீங்கள் இரு சகோதரர்களுமே மேலே இருக்கும் எனது நிலத்தை அளந்தீர்கள். அது சரி தானே? நான்... உங்கள் தாயார் அங்கு அமர்ந்திருப்பதை நான் பார்க்கிறேன். பாருங்கள்? இப்பொழுது, இங்கு என்ன காரியம் என்று எனக்கு தெரியும். கடந்த இரவு நான் அவளை அழைக்கவில்லை. அவள் அங்கே அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன், ஆனால் அவளது காரியம் என்ன என்று நான் அறிந்து இருக்கிறேன்; இந்த காரியங்கள் எனக்கு தெரியும் என்று நீங்கள் அறிவீர்கள். அவள் சுகமடைய நான் விரும்புகிறேன். அவள் எனக்கு நல்லவளாக இருந்தாள். இந்த உலகத்தில் இருக்கும் எதை வேண்டுமானாலும் நான் அத்தாயாருக்கு செய்யக் கூடுமானால், நான் வந்து அதைச் செய்வேன் என்று தேவன் அறிந்திருக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். ஆற்றினூடாக நடந்து வந்து நான் அதை செய்ய வேண்டுமானாலும், நான் வந்து அதை செய்வேன், தேவன் அறிவார். ஆனால் ஒரு காரியம் என்னால் சொல்ல முடியும், அம்மா, விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். தேவனை விசுவாசியுங்கள், அதை ஏற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் சுகமாவீர்கள். இந்த வியாதியஸ்தர்களை தூக்கிச் செல்லும் படுக்கையில் கட்டப்பட்டு படுத்திருக்கும் இங்கேயிருக்கிற அம்மாளே, நீங்களும் கூட. அங்கே தரையின் மீது கக்கதண்டங்கள் சில தனியாக கிடப்பதை நான் பார்க்கிறேன். அந்த காரியங்கள் மேல் எந்த கவனத்தையும் செலுத்தாமல்; அப்படியே விசுவாசியுங்கள். 102. இப்போது, நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு வந்த போது செய்ததைப் போல இப்பொழுது அங்கே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள நின்று கொண்டிருக்கிறீர்கள். அது சரிதானே? இப்பொழுது, எந்த மாமிச காரியங்களையும் எந்த காரியத்தையும் – எந்த முடிவுகளையும் பார்க்காமல், அதை உரிமை கோருங்கள். இப்பொழுது, பாருங்கள், எபிரேயர் 3:1-ல், நாம் அறிக்கை செய்கிற பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார் என வேதம் கூறுகிறது. அது சரியா? இப்பொழுது அது " வெளிப்படையாக தெரிவி’ (profess) " அறிக்கை செய்’ (confess) என்பது அங்கே ஒரே வார்த்தை. இப்பொழுது, நாம் அதை ஏற்றுக் கொண்டு, அதை விசுவாசித்து, அதைப்பற்றி சாட்சி கூறி, நாம் அதை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று கூறுகிற வரையிலும் அவரால் நமக்காக ஒரு காரியமும் செய்ய இயலாது. அது சரிதானே? நாம்... என்னவாயிருந்தாலும் காரியமில்லை, அவரால் ஒன்றும் செய்ய முடியாது. முதலாவது விசுவாசத்தினால் நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அதை நம்பி, அது சரியாக இருக்கிறது என்று அறிக்கை செய்ய வேண்டும். மேலும் அவர் உங்களுக்குப் பதிலாக ஒரு பிரதான ஆசாரியராக, தேவனுக்கு முன்பாக அவர் அதை சரி செய்கிறார். ஒரு பிரதான ஆசாரியன் பரிந்து பேச வேண்டும். அது சரியா? நமது பெலவீனங்களின் உணர்வுகளில் அவர் தொடப்படக் கூடியவராக இருக்கிறார். இப்போது, அது சத்தியமாக இருக்கிறதென்று நான் அறிந்து உள்ள வரையில் - தேவனும் அதை அறிவார். மேலும் நீங்கள் இன்றிரவு இங்கு இருப்பீர்களானால், நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுதே இயேசுவை உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டு, ‘கர்த்தாவே, இது இங்கு இப்பொழுதே முற்று பெற்று விட்டது. வலியானது எனக்கு இரு மடங்கு மோசமானதைப் போல இருந்தாலும், மூன்று மடங்கு நான் சுகவீனமாக இருந்தாலும், ஐந்து மடங்கு முடவனாக ஆனாலும் எனக்கு கவலையே இல்லை; நான்... போகப் போகிறேன். என் விரலை இப்படியும் அப்படியும் வேகமாக அசைப்பதை விட, இனிமேல் என்னால் செய்ய முடியாமல் போனாலும், நான் என் விரலை இப்படியும் அப்படியும் வேகமாக அசைத்து உம்மை துதிக்கப் போகிறேன். நீர் என்னை சுகமாக்கி விட்டதாக உரிமை கோரப் போகிறேன்’ என்று கூறுங்கள். மேலும் நான் அறிந்துள்ள வரையில் வேத வசனங்கள் உண்மையாய் இருக்க, உங்கள் இருதயம் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்குமானால், தேவன் உங்களை சுகமாக்குவதற்கு கடமைப்பட்டவராக இருக்கிறார். 103. அவர் சர்கோமாஸ் புற்று நோயை சுகப்படுத்தியதை நான் கண்டு இருக்கிறேன். யாராவது அதைப்பற்றிய வாக்குமூலத்தை (காண) விரும்புவீர்களானால் மருத்துவ அறிக்கைகளை நான் வைத்துள்ளேன். அது உண்மை. புற்று நோய்...காங்கிரஸ்காரர் உப்ஷாவைப் பாருங்கள். அறுபத்து ஆறு வருடங்களாக பலமிழந்தவராக ஒரு சக்கர நாற்காலியில் இருந்து கொண்டிருந்தார், கலிபோர்னியாவிலுள்ள ஒரு பெரிய இடத்திற்குள் அவரை சக்கர நாற்காலியில் வைத்து உருட்டி உள்ளே (கொண்டு) வந்தனர். பரிசுத்த ஆவி அசைவாடி அவருடனான கோளாறு என்னவாக இருந்தது என்று அவருக்கு காண்பித்து, ‘அவருடைய பாதங்களை ஊன்றி எழும்பு’ என்று கூறினார். அறுபத்தி ஆறு வருடங்களாக அங்கே தன்னுடன் இருந்த தன்னுடைய கக்கதண்டங்கள், இடுக்கிகள் (braces), படுக்கைகள், மற்றும் அதைப் போன்ற பொருட்கள் இல்லாமல் தம் காலால் மேடைக்கு நடந்து சென்றார், அவரது பாதங்களை தொட்டு, கைகளை திருப்பி தாவி, எல்லா இடங்களுக்கும் சென்றார். அவர் ஐக்கிய நாடுகளின் ஒரு காங்கிரஸ்காரர். 104. எல்லா இடங்களிலும், விசுவாசத்தை உடையவர்களாயிருங்கள். இப்பொழுது எல்லா இடங்களிலும் உங்கள் தலைகளை வணங்கிக் கொண்டும், இப்பொழுது, நீங்கள் இரட்சிப்புக்கு வந்ததைப் போன்று சுகம் பெறுவதற்கு நீங்கள் வாருங்கள். இப்போது, இன்றிரவு ஆரோக்கியத்தோடு இங்கே உள்ளே இருக்கும் யாவரும், வெளியில் இருக்கும் பார்வையாளர்களும், தேவன் உங்களை சுகமாக இருக்க அனுமதித்ததற்காக நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். இந்த வயதான தாய்மார்களையும் தகப்பன்மார்களையும், சிறிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கரங்களில் ஏந்திக் கொண்டும், சிறிய ஏழை குழந்தைகள் பீடத்திற்கு எதிரில் சாய்ந்து கொண்டும் அழுது கொண்டும் இருப்பதைப் பாருங்கள். நரைத்த தலைகளை உடைய தாய்மார்களும் தகப்பன்மார்களும் இங்கு சூழ நின்று கொண்டு, பெலவீனமான பழைய காரியங்களில் வாழ்க்கையில் நீண்ட காலம் இவ்விதமாக அடிமைப்பட்டு, நல்ல இனிமையான இரக்கமுள்ள; அது உன்னுடைய தாயாக இருந்திருந்தால், என்னவாக இருக்கும்? அது உன்னுடைய தகப்பனாக இருந்திருந்தால், என்னவாக இருக்கும்? அவர்கள் ஜெபிக்கும் போது, யாரோ ஒருவர் ஆழ்ந்த உத்தமத்தோடு இருக்க வேண்டும் என்று நீ விரும்புவாய், இல்லையா? நல்லது, அவர்கள் அதையே செய்வார்கள். 105. இப்போது, யாவரும் உத்தமத்தோடு இருங்கள், அனைவரும் விசுவாசியுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கும்படி இப்பொழுது நான் தேவனிடம் கேட்கப்போகிறேன். இப்போது, நான் ஜெபத்தில் இருக்கும் போது தேவன் உங்களை சுகமாக்கினார் என்று நீங்கள் உணருவீர்களானால் நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி உரத்த குரலில், ‘நான் என் சுகத்தை ஏற்றுக் கொண்டேன்’ என்று கூற நான் வாஞ்சிக்கிறேன். அல்லது தேவனுக்கு துதியை செலுத்துங்கள். இப்பொழுது நீங்கள் உத்தமத்தோடு வர நான் விரும்புகிறேன். உங்களுக்கு காது கேட்கவில்லையென்றால், உங்கள் விரல்களை காதுகளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வயிறு சுகவீனமாக இருக்குமானால், உங்கள் கரத்தை வயிற்றின் மீது வையுங்கள். நீங்கள்... எங்கெல்லாம் உங்களுக்கு சுகவீனமாக இருக்கிறதோ, (அங்கெல்லாம்) உங்கள் கரத்தை வையுங்கள். மேலும் பின்பு... அல்லது உங்கள் குழந்தையின் மேல் அல்லது உங்களுடைய பெற்றோர்கள் மேல், நாம் ஜெபிப்போம். இப்போதும், பரலோகப் பிதாவே, நீர் இங்கு இருக்கிறதை அறிந்து கொள்வதற்காக நான் - நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன். எங்களில் அனேகர், பல வருடங்களுக்கு முன், சிறிய வயதை உடைய கூச்ச சுபாவமுடைய பையன்களும் சிறு பெண்களுமாய் இருந்த நாங்கள், இப்பொழுது, பெற்றுக் கொண்ட ஏதோவொன்று எங்களுக்கு தைரியத்தையும் பெரும் துணிவையும், சிங்கத்தைப் போல துணிவையும் கொடுத்திருக்கிறது, ஏனென்றால் யூதா கோத்திரத்து சிங்கம் எங்கள் இருதயங்களில் எழுந்து கிருபையையும் வல்லமையையும் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் அங்கே சிலரோ, ஒருக்கால் இரண்டாயிரமோ அல்லது அதிகமான மக்களோ ஒரு எதிர்பார்ப்போடு இங்கு அமர்ந்திருக்கலாம். நான் அவர்களோடு உமது ஆயத்தமாகுதலை குறித்து பேச முயற்சித்தேன்: சுகமாகுதலுக்கான ஆயத்தமாகுதல், இரட்சிப்புக்கான ஆயத்தமாகுதல், ஜெயம் பெறுவதற்கான ஆயத்தமாகுதல். 106. மேலும் இப்போது, அவர்கள் இந்தப் பீடத்தண்டை வருவதற்கு அவர்களுடைய இருதயத்தில் போதுமான விசுவாசத்தை தந்திருக்கிறீர், நான் அவர்களை இங்கு அழைத்தேன், நீர் அவர்களை சுகமாக்கப் போகிறீர் என்று அவர்கள் விசுவாசித்துக் கொண்டு இங்கே இருக்கின்றனர். நீர் அதைச் செய்யவில்லை என்றால் அவர்கள் அதிக நாட்கள் வாழ முடியாது என அவர்கள் உணர்ந்துள்ளனர். நீர் ஒருவர் மாத்திரமே அதைச் செய்ய முடியும். அவர்களுடைய சுகமாகுதல் என்ற வகையில் நீர் அதை ஏற்கனவே செய்து விட்டீர். கல்வாரியில் அதைச் செய்தீர். நீரே அதைச் செய்தீர் என்று அவர்கள் விளங்கிக் கொள்ள இப்போதும் நீர் அவர்களது புரிந்து கொள்ளுதலை திறப்பதற்கு முயற்சிக்கிறீர். இப்போதும், இப்பெரிய கூட்டத்தில், நாங்கள் அதை விட்டு கூடி வந்து இங்கு நின்று கொண்டிருக்கையில், எங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்து, நீர் எங்களை சுகமாக்க வந்திருக்கிறீர் என்று விசுவாசித்துக் கொண்டு பீடத்தண்டை வந்திருக்கிறோம், கர்த்தாவே, நான் இப்பொழுது ஜெபிக்கிறேன். இதை அறிந்தவனாக அவர்கள் இருதயம் உம்மோடு கூட சரியாக இருக்குமானால் ஒரே காரியம் மாத்திரமே இங்கு இருக்கும் எந்த நபரையும் சுகமடைவதிலிருந்து தூரமாக வைக்கும். அது அவர்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கும் சந்தேகத்தின் பிசாசின் நிழல் தான்: சந்தேகம், அவிசுவாசம். அவர்களுக்கு மாத்திரம் கூடுதலாக ஒரு சிறு துளி விசுவாசம் இருக்குமானால், அவர்கள் சுகமடையக் கூடும்; சாத்தானானவன் அச்சிறு காரியத்தை அவர்களுக்கு மறைக்கிறான். இப்போதும், தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். எந்த மணி வேளையில் நான் வந்து உம்மை சந்திக்க வேண்டும் என்று அறியாதவனாய் அல்லது எங்களில் ஒருவரும் அறியோம். நாங்கள் எங்கள் ஊழியங்களை குறித்து உமக்கு முன்பாக பதிலளிக்க வேண்டும் என்று அறிந்துள்ளவர்களாக, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், தகப்பனே, இப்போதும் உமக்கு முன்பாக எனக்கு தயை செய்யும், உமது பார்வையில் எனக்கு கிருபை கிடைக்குமானால் என் ஜெபத்திற்கு நீர் பதில் அளிப்பீர். 107. ஒவ்வொரு இரவிலும் இங்கு அமர்ந்துள்ள, இங்குள்ள இந்த அன்பான ஜனங்கள், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை ஆராய்ந்து பார்ப்பதற்காகவும் இன்னும் மற்றவைகளுக்காகவும் ஜெப வரிசையை நெருக்க முயற்சிக்கின்றனர். தேவனே, அது ஒருக்கால் சற்று முன்பு சம்பவித்திருக்கலாம், அவர்களது ஆத்துமாக்கள் ஆராய்ந்து பார்க்கப்படுவதாக. மேலும், இப்போதும் சுகமாக வேண்டும் என விரும்பும் அவர்கள் இங்கே நின்று கொண்டு இருக்கின்றனர், இங்கே மேலே அசைவாடிக் கொண்டிருக்கும் உமது ஆவியும், அந்த ஆவியானது ஒரு சிறு வயது, தைரியமில்லாத நபரை உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் நிற்க வைக்கும்படி செய்ய முடியும். இப்போதும் பிசாசானவன் அவர்கள் மீது தொங்கிக் கொண்டு அவர்களுடைய சுகமாகுதலை விசுவாசிப்பதில் இருந்தோ அல்லது ஏற்றுக் கொள்வதிலிருந்தோ அவர்களை விலக்கி வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் - அவர்களை அதிலிருந்து விலக்கி வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். கர்த்தாவே, உம்முடைய பார்வையில் எனக்கு கிருபை கிடைக்குமானால், இந்த ஜனங்கள் முன்னிலையிலிருந்து அவனை விலகச் செய்ய அங்கே கல்வாரியை ஒரு நொடி நேர கண்ணோட்டம் செலுத்தி, இரத்தம் அங்கே வெளியேறி சொட்டி அங்கி ஈரமாகி முதுகில் (வாரினால்) அடிக்கும் சத்தமானது – சத்தமானது – சத்தமானது- எங்களுடைய சுகமாகுதலுக்காக தழும்பை உண்டாக்கியதை அவர்கள் பார்ப்பதற்கு போதுமான தூரம் வரையிலும் அந்த பிசாசை விரட்டி அடிக்க எனக்கு வல்லமை தருமாறு நான் உம்மைக் கேட்கிறேன். ஓ, தேவனே, அதை அருளும். 108. இப்போது, ஜனங்களுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் சந்தேகம் என்னும் பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளியே வா. இந்த ஜனங்களை விட்டு விலகும்படியாக நான் உன்னைக் கடிந்து கொள்கிறேன். அவர்களை விட்டு வெளியே வா, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. தேவனாகிய கர்த்தாவே, நீர் சாத்தானை விரட்டி தேவனுடைய வல்லமையை அவர்களுக்கு மிகவும் உண்மையாக இருக்கும்படி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் அந்த தூரத்திலுள்ள நிழலினூடாக பார்க்கவும் தேவ குமாரன் அங்கே முதுகில் தழும்புகளை உடையவராக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கவும், ‘என் தழும்புகளால் நீங்கள் ஏற்கனவே குணமானீர்கள்’ என்று கூறுவதையும், அவர்கள் இப்பொழுது அதை ஏற்றுக் கொள்வார்களாக, கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 109. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள். இப்பொழுது விசுவாசிக்கிற யாவரும், நீங்கள் சுகமானீர்கள் என விசுவாசிக்கிறவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஆமென். ஆமென். துதியையும் மகிமையையும் தேவனுக்குச் செலுத்துங்கள். பார்வையாளர்கள் இங்கு கவனியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைந்து விட்டனர். தேவனுடைய வல்லமை. நம்முடைய கால்களை ஊன்றி நாம் எழுந்து, எல்லா இடங்களிலும், நின்று தேவனுக்கு துதியையும் மகிமையையும் செலுத்துவோம். அல்லேலூயா. சபையோரே, இங்கு கவனியுங்கள். இந்த முழு கூட்டமும் சுகமடைந்துள்ளனர். கீழே அங்கே நோயாளிகளை தூக்கிச் செல்லும் படுக்கைகளில் இருக்கும் மற்றவர்களின் நிலைமையைக் குறித்து என்ன; உங்கள் கால்களால் ஊன்றி நில்லுங்கள். எழும்புங்கள்...எழும்புங்கள், தேவன் உன்னை சுகமாக்குகிறார். நீ எழுந்து அதை விசுவாசிப்பாயானால் தேவன் அதை செய்வார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோதரனே, இருதய பிரச்சனை இப்போது போய்விட்டதா? சுகமடையப் போகின்றீர்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோதரியே? பெண்களுக்குரிய பிரச்சனை போய்விட்டதா? நீங்கள் சுகமடையப் போகின்றீர்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோதரனே, உங்களுடைய காதிலா? இப்போது, எல்லாம் சரியாகப் போகின்றதா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரு சிறுமிக்கு மாறுகண், அவை நேராகி விட்டன. அவைகள் இப்போது சரியாகி விட்டன. நீங்கள் நன்றாயிருக்கின்றீர்கள். நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். 110. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள். நாம் நின்ற வண்ணமாக அவருக்கு துதிகளைப் பாடுவோம், ‘நான் அவரை துதிப்பேன்.’ இப்பொழுது ஒவ்வொருவரும், எல்லாரும் சேர்ந்து, உங்களுடைய குரல்களை உயர்த்தி தேவனுக்கு துதி செலுத்துவோம். இந்த ஜனங்கள், அவர்கள் சுகமாகவில்லை என்றால், அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. அவர்கள் அதே அடிப்படையில் வந்து இருக்கிறார்கள். அவர்கள் சுகமடைந்து விட்டார்கள் என்று விசுவாசிக்கிற எத்தனை பேர் அங்கே வெளியே இருக்கிறீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்தி, ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று கூறுங்கள். நீங்கள் சுகமானீர்கள். இப்போது, இங்கே பீடத்தண்டை இருக்கும் இச்சபையோர்கள், அங்கே வெளியில் இருக்கும் சபையோர்கள் பக்கமாக திரும்பி உங்கள் சுகமாகுதலை ஏற்றுக்கொண்டு உங்கள் இரட்சகருக்கு நீங்கள் செய்ததைப் போலவே செய்யுங்கள். நல்லது, உங்கள் கரங்களை உயர்த்தி, இந்தப் பக்கமாகத் திரும்பி பார்வையாளர்களைப் பார்த்து நீங்கள் விசுவாசிக்கின்ற இயேசு கிறிஸ்து இப்போது உங்களை சுகமாக்கி உங்களை நலமாக வைத்துள்ளார் என்று அவர்கள் அறிந்து கொள்வார்களாக. 111. சரி, ‘நான் அவரைத் துதிப்பேன். நான் அவரைத் துதிப்பேன்’...?... அது சரிதானே...?... நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியைத் துதிப்பேன், (ஒவ்வொருவரும்) எல்லா ஜனங்களும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவி அகற்ற முடியும் (இந்த பார்வையாளர்கள் அதை உயர்த்தி இப்போது சத்தமாக பாடுவோம், வாருங்கள்.) நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியைத் துதிப்பேன், எல்லா ஜனங்களும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள். அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவி அகற்ற முடியும். 112. உங்களில் எத்தனை பேர் இந்த ஜனங்கள் என்ன சுகம் பெற்றார்கள் என்று கூறுவதைக் கேட்பதற்கு ஆவலாக இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இந்த ஒரு வார்த்தை (கூற) விடுங்கள். சரி, இப்பொழுது, கீழே அக்கடைசியிலிருந்து அவர்கள் தொடங்கலாம். நீங்கள் எதிலிருந்து சுகமடைந்தீர்கள் என்று சற்று கூறுங்கள், ‘பித்தப்பை கோளாறு, வயிற்றுக் கோளாறு’ என அழைக்கப்படுவதை, கூறலாம். அது எதுவாக இருந்தாலும் நீங்கள் எதிலிருந்து சுகமடைந்தீர்கள் என்று அப்படியே கூறுங்கள். பார்வையாளர்கள் அறிந்து கொள்ளட்டும். எதிலிருந்து நீங்கள் சுகமடைந்தீர்கள் என ஒவ்வொருவரும் அவர்களிடம் பேசுங்கள். உங்களுக்கு என்ன இருந்தது? என்ன சுகமானது? என்று கூறுங்கள். பார்வையாளர்களிடம் கூறுங்கள். ‘இடுப்பு வலி நோய், சைனஸ், பெருங்குடல் அழற்சி, சிறுநீரக கோளாறு, மூட்டு வீக்கம், இருதயக் கோளாறு, இதய பிரச்சனை, சைனஸ், (அதே தானா?) வயிறு, சிறுநீரகங்கள்.’ அப்படியே அதைக் கேளுங்கள். இப்போது இங்குள்ள இந்த பார்வையாளர்கள் இங்கு இருப்பவர்கள் வலது புறம் முன்னோக்கிச் சென்று உங்கள் கரத்தைக் குலுக்குங்கள். கீழே வந்து ‘நீங்கள் சுகம் அடைந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு நான் உங்கள் கரத்தைக் குலுக்குகிறேன்’ என கூறுங்கள். ‘தேவன் உங்களை சுகமாக்க முடியும் என்று விசுவாசித்த உங்கள் விசுவாசத்திற்காக நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன்’ என்று கூறி எத்தனை பேர் அவர்கள் கரத்தை குலுக்க விரும்புகிறீர்கள்? கீழே வாருங்கள். கிறிஸ்தவர்களாகிய உங்களில் எத்தனை பேர் அதைச் செய்ய விரும்புகிறீர்கள்? எல்லா விடங்களிலும். கீழே வந்து உங்கள் கரத்தைக் குலுக்கி, ‘தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நான் வாஞ்சிக்கிறேன்...’ என்று கூறுங்கள். அவர்கள் அப்படியே கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர், அவர்கள் சுகமடைந்துள்ளனர். வீட்டிற்கு அவர்கள் நலமுடன் செல்கின்றனர். ‘கர்த்தருக்கு ஸதோத்திரம்’ என்று நாம் சொல்வோமாக. நான் வாஞ்சிக்கிறேன், ஊழியக்காரர்களில் சிலர்... அங்கே கீழே கட்டிலின் மேல் படுத்துக் கொண்டிருக்கும் சிறிய வயதான தாயார் மேலே எழும்புவதை இங்கே கவனியுங்கள். முடக்கு வாதத்தால் தாக்கப்பட்டிருந்த அவர்கள் இங்கே கீழே கட்டிலை விட்டு மேலே எழும்புகிறார். நாம், ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று சொல்லுவோம். யாவரும். நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி நம் தலைகளை வணங்கி தேவனுக்கு துதியை செலுத்துவோம். ‘கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி.’ சகோதரன் பாஸ்வர்த், இங்கு வாருங்கள், நீங்கள் விரும்பினால், அவர்களை ஜெபத்தில் நடத்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.